Tuesday, March 3, 2015

தக்ஷிணாமூர்த்தி தத்துவம்:

தக்ஷிணாமூர்த்தி தத்துவம்:
பிரம்மத்தால் உண்டாக்கப்பட்ட சகல அறிவையும் தன்னுள்ளே கொண்டவர் என்பதே தக்ஷிணாமூர்த்தி தத்துவம். அந்த தத்துவமே மூர்த்தி சொரூபமாக தக்ஷிணாமூர்த்தியாக சித்தரிக்கப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்தியாகியவர் முற்றறிவுடையவர் என்பவராவர். அறிவு, தெளிவு, ஞானத்தை அரூபமாயிருந்து உலக உயிர்களுக்கு அருள்பவர் என்று கூறுவர் தக்ஷிணாமூர்த்தியை. குரு தக்ஷிணாமூர்த்தியாகிய அஞ்ஞானத்தைப் போக்குபவர். அகோர வெளிப்பாடலான இவர் அஞ்ஞானமான அகோரத்தை அறுத்தெறிபவராவார். அஞ்ஞானத்தை அறுத்தெறியும் எந்த ஒரு தத்துவமும் குரு தத்துவமாகவே கருதப்படுகிறது, அந்தத் தத்துவமே உருவமாக இருந்து வழி நடத்தும்போது அதுவே ஆச்சார்யம் எனப்படுகிறது.
குரு தக்ஷிணாமூர்த்தி எண்ணிலடங்கா வித்தைகளுக்கு ஆதிகுருவாக கருதப்படுபவர். அந்த ஆதி குரு பிரம்ம சொரூபமாகும், அந்த பிரம்மமே பரமேஷ்டிகுருவாகவும் அவரிடமிருந்து பரமகுருவும் அவரிடமிருந்து குருவும் உற்பத்தியாகின்றனர்.
பரமேஷ்டிகுரு, பரமகுரு, குரு என்ற மூன்று தத்துவமும் தக்ஷிணாமூர்த்தியின் அம்சங்களே. உலக உயிர்களுக்கு ஞானத்தைப் வழங்கும் தக்ஷிணாமூர்த்தியின் பலவித ரூபபேதங்கள் பின்வருவன்வாறு கூறப்படுகிறது.
1. மேதா தக்ஷிணாமூர்த்தி - தெளிவு ஞானத்தை பெறுக.
2.வீணாதர தக்ஷிணாமூர்த்தி - இசைஞானம் பெறுக.
3. சாம்ப தக்ஷிணாமூர்த்தி
4.கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி
5. சம்ஹார தக்ஷிணாமூர்த்தி
6. அபஸ்மர நிவர்த்திக தக்ஷிணாமூர்த்தி - புத்தி தெளிவு உண்டாக, வலிப்பு நோய் நீங்க.
7. ஔடத தக்ஷிணாமூர்த்தி - மரணமில்லா பெருவாழ்வு வாழ.
8. லக்ஷ்மி தக்ஷிணாமூர்த்தி - நித்திய பொலிவு பெற.
9. வீர தக்ஷிணாமூர்த்தி
10. யோக தக்ஷிணாமூர்த்தி - பிறவி குருவை அடைய, யோக பலம் பெறுக.
11.சின்மய தக்ஷிணாமூர்த்தி - மெய்ஞானத்தை அடைய.
12. உபதேச தக்ஷிணாமூர்த்தி - குரு உபதேசம் பெற.
13.ஆன்மவியாக்ஞான தக்ஷிணாமூர்த்தி - ஆன்ம தெளிவு உண்டாக.
14. வரத தக்ஷிணாமூர்த்தி
15. சக்தி தக்ஷிணாமூர்த்தி - நெற்றியில் சந்திரன், ஞான முத்திரை, சக்தியுடன் இருப்பர்.
சொல் பிறந்தால் சொரூபம் பிறக்கும், எந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்கின்றோமோ, அந்தச் சொல்லே தன்னை நினைப்பவனுக்குச் சகலமுமாய் முக்தியை அருள்கின்றது. இவ்வாறு அநுஷ்டிக்கப்படுவது மந்திரயோகம் எனப்படும்.
எனவே நாமும் குரு தக்ஷிணாமூர்த்தியின் நாமத்தை அனுதினமும் அனுஷ்டித்து ஜீவனை அந்த நாதப்பிரம்மத்தோடு ஒன்றாக்குவோமாக.
" குருவே ஸர்வ லோகானாம் பிஷயே பவ ரோகினாம்
நிதயே ஸர்வ வித்யானாம்ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே நம: "

No comments:

Post a Comment