Wednesday, April 1, 2015

தெரிந்தே செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் இருந்தால் சொல்லுங்கள்.

தெரிந்தே செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் இருந்தால் சொல்லுங்கள்.
கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சி தின்றால் செரிமானமாகி விடுமா என்பது போல உள்ளது உங்களின் கேள்வி. தவறு என்று தெரிந்தும் செய்யத் துணிந்த மனம், அதில் ஈடுபட்ட பின், அதை நினைத்து வருந்துவது என்பது இழுக்கானது என்கிறார் திருவள்ளுவர். மேலும் தெரிந்து செய்யும் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் உண்டு என்று சொல்லி விட்டால் மனதில் துணிவு அதிகரித்து விடும். "இனிமேல் தவறு செய்ய மாட்டேன். இந்த முறை மன்னித்து விடு இறைவா!' என்று கேட்பது ஒன்றே தகுந்த பிராயச்சித்தம். சொன்னது போல் தவறு செய்யாமல் நடந்து கொண்டால் தான் பாவமன்னிப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment