Wednesday, April 1, 2015

கோயிலில் மின் இயந்திர மேளம் முழங்க பூஜை நடத்துவதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா

கோயிலில் மின் இயந்திர மேளம் முழங்க பூஜை நடத்துவதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?
மின்சார உபயோகங்களைப் பற்றி அதாவது மின்விளக்கு உட்பட அனைத்தையும் சாஸ்திரத்தில் காண முடியாது. எண்ணெய் தீபங்கள், மற்றும் அந்தக்கால வாத்தியங்கள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளது. மின் விளக்குகளை வழக்கத்தில் ஏற்றுக் கொண்டது போல, மின் இயந்திர வாத்தியக்கருவிகளையும் ஏற்பதில் தவறில்லை. அந்தக்காலத்தில் பயன்படுத்திய தோல்கருவி வாத்தியங்கள் பல இன்று கிடைக்கவும் இல்லை. வாசிப்பவர்களும் குறைவாகவே உள்ளனர். இதற்கு மாற்றாக மின் இயந்திரமேளம் இருக்கிறது. வாத்தியம் இல்லாத குறையை, இதாவது போக்குகிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment