Wednesday, April 1, 2015

கும்பாபிஷேகத்தின் போது, தீபாராதனை செய்யப்பட்ட கற்பூரம் விமானத்துளை வழியாக கருவறைக்குள் விழுந்து அம்மன் சேலை தீப்பற்றி எரிந்து விட்டது. தக்க பரிகாரம் சொல்லுங்கள்.

கும்பாபிஷேகத்தின் போது, தீபாராதனை செய்யப்பட்ட கற்பூரம் விமானத்துளை வழியாக கருவறைக்குள் விழுந்து அம்மன் சேலை தீப்பற்றி எரிந்து விட்டது. தக்க பரிகாரம் சொல்லுங்கள்.
சூடம் உள்ளே விழும் அளவிற்கு விமானத்தில் துளை இருந்திருக்காது. வேறு ஏதோ தவறுதல் நடந்துள்ளது. ஒருவேளை இருக்குமானால், முதலில் அந்த துளையை அடைத்து விடுங்கள். சேலை எரிந்ததை அம்பாளின் செயலாக எண்ணி விட்டு விடுங்கள். நிறைய பாலும், பன்னீருமாக அபிஷேகம் செய்து பிராயச்சித்த ஹோமம், கலசாபிஷேகம் செய்யுங்கள். நிறைய தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டு பொறுத்தருளுமாறு அம்பிகையை வேண்டிக் கொள்ளுங்கள்

கோயிலுக்குச் சென்றதும் எல்லார் முன்னிலையிலும் பாடுகிறேன். அர்ச்சகர்களோ மக்களோ தடுத்ததில்லை. இப்படி நான் பாடுவது மற்றவர்களுக்கு இடைஞ்சலாகுமா?
இப்படி பாடுவதற்கு இன்று ஆளில்லையே என்று வருத்தமான நிலை இருக்கிறது.
தாராளமாகப் பாடலாம். உங்களைப் போல் மற்றவர்களும் பாடட்டும்.

No comments:

Post a Comment