Sunday, April 5, 2015

தீபாவளி

1.தீபாவளீயன்று எங்கு நீராடினாலும் அது கங்காஸ்னானம் என்றுதான் சொல்லப்படும்  அன்று ஒரு நாள் மட்டும் கங்கை நமது வீட்டில் உள்ள் நீரிலும் குடியிருப்பாள் என்பது ஐதீகம் அனைத்து புண்ணிய நதிகளும் கடலில் தான் கலக்கின்றன எனவே கடல் நீராடுவதால் அனைத்து புண்ணீய நதிகளிலும் குளித்த பலன் கிடைத்து விடுகிறது.
2.பாற்கடலில் அமுதம் கடைந்தபோது லஷ்மி அவதரித்தாள். அவள் ஆமையாக கடலுக்குள் மூழ்கியிருந்த திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் அசுரர்கள் லஷ்மியை அடைய விரும்பி துரத்தினர். லஷ்மி ஒரு தோட்டத்தில் மறைய அங்கு எள் செடிகள் குவிந்திருந்தன. செடிகளை மிதித்து ஓடியதால் வெளிப்பட்ட எண்ணெயுடன் ல்ஷ்மி கலந்துவிட்டாள் லஷ்மியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் லஷ்மி நம்மோடு இருப்பாள் என்றும் அவள் உள்ள இடம் என்றும் செல்வம் கற்பக விருட்சமாய் வளரும்
3.தீபாவளி பண்டிகையை திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிந்து கொண்டாடுகிறார். அன்று காலையில் முருகனுக்கும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் புத்தாடைகளை வெள்ளீப்பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தார். திருச்செந்தூர் தன் மருமகன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே வந்து தீபாவளிக்குப் புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்.images
4. மன இருளை அகற்றி ஞான ஒளி ஏற்றுவதே தீபாவளியின் தத்துவமாகும். தீபாவளி அன்று பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் வெவ்வேறு தெய்வ கடாட்சம் இருப்பதாக புராணம் கூறுகிறது. அன்று தண்ணீரில் கங்கையும் சீயக்காயில் சரஸ்வதியும் எண்ணெயில் லட்சுமியும் சந்தனத்தில் பூமாதேவியும் குங்குமத்தில் கௌரியும் இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும் லேகியத்தில் தன்வந்திரியும் புத்தாடையில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம். அன்று உப்பு வாங்குவது மிகவும் அதிர்ஷமாகக் கருதப்படுகிறது ஏனெனில் அன்று திருமகள் உப்பின் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment