Wednesday, April 1, 2015

ஆலய வழிபாட்டின் நோக்கம் கடமைக்கா அல்லது மனநிம்மதிக்கா?

ஆலய வழிபாட்டின் நோக்கம் கடமைக்கா அல்லது மனநிம்மதிக்கா?
இரண்டுக்குமே தான். சிவஞான சித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூலில் அருணந்தி சிவம் பாடியுள்ள பாடல், "மானிடப் பிறவி தானும்
வகுத்தது மன வாக்காயம், ஆனிடத்தைந்தும் ஆடும் அரன் பணிக்காகவன்றோ' என்று உள்ளது. இந்த மனிதப்பிறவி எடுத்திருப்பதே இறைவனை வழிபடுவதற்கும், அவருக்கு பணி செய்வதற்கும் தான் என்பது இதன் பொருள். இதன் அடிப்படையில் ஆலய வழிபாடு என்பது நமது பிறவிக் கடமையாகிறது. இப்படி வழிபடுபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கடவுள் தவறாமல் வழங்குவார்.

No comments:

Post a Comment