Sunday, April 5, 2015

வாசல் தெளித்து கோலம் ஏன் போடுகிறோம்

வாசல் தெளித்து கோலம் ஏன் போடுகிறோம்
download
அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து வாசலைப் பெருக்கி பசுஞ்சாணம் கலந்து நீர் தெளித்து வாசலில் கோலம் இடுவது நமது சம்பிரதாயம். கோலம் என்பதற்கு அலங்கரித்தல் என்று பொருள். வீட்டின் வாயிலை அலங்கரிப்பதால் அதை கோலம் என்று அழைக்கிறோம்.download (2)
வாசலில் கோலம் இடுவதால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். கோலத்துக்கு அரிசிமாவையே பயன்படுத்த வேண்டும்  வீட்டிலிருப்பவர்கள் வெளியே செல்வதாக இருந்தால் அவர்கள் செல்வதற்கு முன்பாகவே கோலமிடவேண்டும். அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்பு போன்ற ஜீவராசிகளின் பசியை போக்கிய புண்ணியம் கிடைக்கும். தெற்கே பார்த்து கோலம் போடக்கூடாது. கோலம் தெற்கு பக்கமாக முடியவும் கூடாது.images (1)
சுபகாரியங்களுக்கு இரட்டைக்கோடு கொண்ட கோலமும் அசுபகாரியங்களுக்கு ஒரு கோடு கோலமும் போடவேண்டும். கோலங்கள் பூஜா நேரங்களில் போடப்படும்போது இறையாராதனைக்கு உகந்ததாகிறது. ஒரு வீட்டில் திருமணப் பருவத்தில் பெண் இருக்கிறாள் என்பதை தெரிவிக்கும் மரபாக அமைந்தது பூசணிப்பூ வைப்பது. மார்கழி மாத காலை வேளையில் வீதியில் பஜனை பாடி வரும் பெரியவர்கள் இந்தப் பூவைப் பார்த்ததும் மணம் பேச வருவார்கள்  தனுர் மாதமான மார்கழியில் தனுர் ராசியின் அதிபதியான் குரு கிரகம் பூமிக்கு அதிக ஒளியை வழங்குகிறது. இது பூரணமாக தங்கள் குடும்பத்தில் குரு கடாட்சத்தை பெருக்க வேண்டும் என்று கருத்திலும் குருவுக்கு உகந்த மஞ்சள்  நிர பூசணிப்பூ வாசலில் வைக்கப்படுகிறது.download (1)
அறிவியல் உண்மைகள்  மார்கழி மாதம் மானுட உயிர் செல்கள் மாற்றம் பெறும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். விண்வெளியில் இருந்து ஓசோன் கதிர்கள் வரும் அதிகாலையில் நாம் கோலமிடும்போது நாம் ஆரோக்கியம் பெற்று நமது தலைமுறைகளையும் வளமாக உருவாக்கம் சக்தியைப் பெறுகிறோம். பின்சிரசும் கழுத்தும் முதுகும் ஓசோன் கதிரலையை கிரகிக்கும் மீடியேட்டர்களாக இருந்து உயிர் செல்களின் சிதைவுகளைத் தடுக்கிறது. பசுஞ்சாணம் சிறந்த கிருமினாசினி  இது நமது வீட்டினுள் கிருமிகள் வராமல் தடுக்கிறது.images (2)
ஆதவனின் உதய நேரம் அனைத்து உயிர்களுக்கும் புதிய நேரங்களே.   அந்நேரத்தில் மங்கையர் மனதை ஒருமுகப்படுத்தி  குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் குண்டலினி சக்தி மேலெழும்புகிறது. இடுப்பு எலும்பு வலுவடைகிறது.  கோலங்கள் போடுவதால் வீடு அழகு பெறுவதோடு நாமும் ஆரோக்கியமடைகிறோம்.images


No comments:

Post a Comment