Sunday, April 5, 2015

வாழையிலை

வாழையிலை வரலாறு
சேது பந்தனம் கட்டியபோது தனக்கு உதவி செய்ததற்காக மகிழ்ந்து உதவி செய்த அணிலை வாஞ்சையுடன் ஸ்ரீ ராமன் தடவிக் கொடுத்தால் அணிலின் முதுகில் மூன்று கோடுகள் விழுந்தன என்று இந்தியாவில் ஒரு கதை உண்டு   இது அனைவருக்கும் தெரிந்த்ததே
ஆனால் வாழையிலையின் நடுவில் ஒரு கோடு இருக்கிறதே அது எப்படி வந்தது என்பதற்கு ஒரு சுவாரசியமான கதையை நான் இன்று வானொலியில் கேட்டேன்.
இராவண சம்ஹாரம் முடிந்து  விபீஷண பட்டாபிஷேகமும் முடிந்து  இலங்கையிலிருந்து மீட்ட சீதையுடன்  ஹனுமான் தம்பி இலட்சுமணனுடனும் ஸ்ரீ ராமன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  வனவாசத்தில் இருந்தபோது ஸ்ரீ பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராமனை தனது ஆசிரமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கும்படி கேட்டுக்கொண்டார்.  அப்போது ஸ்ரீ ராமன் தான் அயோத்திக்கு திரும்பும்போது கண்டிப்பாக அவரது ஆசிரமத்திற்கு வருவதாக வாக்களித்தார்  கொடுத்த் வாக்கை காப்பாற்றுவதற்காக அவர் அயோத்திக்கு திரும்பும்போது  ஸ்ரீ பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள்   அவர்கள் அனைவரையும் கண்ட முனிவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து  அவைகள் அனைவருக்கும் போஜனம் ஏற்பாடு செய்தார்.download (8)
வாழையிலையில் அனைத்து வகைகளும் பரிமாறப்பட்டன. அப்போது ஸ்ரீ ராமன்  ஹனுமானை அழைத்து தன் எதிரில் உட்கார்ந்து ஒரே இலையில் சாப்பிடலாம் என சொன்னார்.  இது  சீதையை காண்டுபிடிப்பதில்  உதவியதற்கும்  பிறகு சஞ்சீவி ஔஷதம் கொண்டுவந்து லட்ச்மணனை காப்பாற்றியதற்கும்  இராவண ச்ம்ஹாரத்தில் உதவியதற்கும்  இதற்கெல்லாம் மேலாக  தன்னிடம் கொண்டுள்ள பரிபூர்ண பக்தியை உலகுக்கு உணர்த்தவும் தன்னுடன் ஒரே இலையில் உணவு அருந்த அழைத்தார்.  இருவருக்கும் இடையில் ஒரு கோடு போட்டு பரிமாறிய உணவு வகைகளை ச்ரிபாகமாகப்  பகிர்ந்தார்.  அப்போது அவர் போட்ட கோடுதான் நிரந்ததமாக வாழையிலையில் நிலைத்து விட்டது
தற்போதைய சூழ்நிலையில் இவையெல்லாம் கட்டுக் கதை என்று தோன்றினாலும் ஜந்துக்களிலும்  உயிரினங்களிடமும்  ஸ்ரீ ராமன் காட்டிய வாஞ்சையை புரிந்து கொண்டு நாமும் அவைகளிடம் அன்பு காட்டி அந்த இனங்கள் அழியாமல் பாதுகாக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டால் சரி  நமது சுற்றுச் சூழலும் வாழ்வும் மாசுபடாமல் நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்பது உறுதி.

No comments:

Post a Comment