Sunday, April 5, 2015

காலையில் கண் விழித்ததும் பார்க்க வேண்டியவை ----அறிவியல் விளக்கம்

காலையில் கண் விழித்ததும் பார்க்க வேண்டியவை


காலையில் எழுந்ததும் இறைவனை மனதார தியானித்து உள்ளங்கையில் உறையும் தெய்வங்களை தரிசனம் செய்து இன்றைய பொழுதை இனிமையாக ஆக்கிக்கொடு என்று பிரார்த்திக்க வேண்டும்.  உள்ளங்கை குழந்தைகள் கண்ணாடியில் தன் முகம் பார்ப்பதால் மிக்க மகிழ்ச்சி கிடைக்கும். கோபுரம் தெய்வப்படங்கள் நற்குலப் பெண்கள் நல்ல பூக்கள் மேகம் சூழ்ந்த மலைகள் கடல் சூரியன் அடர்ந்த விருட்சங்கள் வயல் தீபம் சந்தனம் பொன் நவரத்தினங்கள் தாமரைப்பூ கன்றுடன் கூடிய பசு இவற்றில் இயன்றவரை பார்ப்பது அந்த நாளை சிறப்பான நாளாக மாற்றும்.

அறிவியல் விளக்கம்
இரவு முழுவதும் ஓய்வில் இருந்த கண்களுக்குத் தேவையான இயக்க சக்தி உள்ளங்கைகளை தேய்ப்பதால் கிடைக்கிறது. உடனே வெளிச்சத்தைப் பார்க்காமல் உள்ளங்கையில் பார்வையைக் குவிப்பதால் கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. கலர் எனர்ஜி தெரபியின்படி அதிகாலை எழுந்ததும் பசுமையான மரம் செடி கொடிகளைப் பார்ப்பது கண்களுக்கு நல்லது. காலையில் கண் விழித்ததும் பூமியை தொட்டு
பூமௌ ஸ்கலித பாதானாம் பூமி தேவா
வலம் பலம் த்வைஜாத அபராதாணா
த்வமேவ சரணம் கிவே
என்று வணங்க வேண்டும்.
நமது வலது மூளை உடலில் இடது பகுதியை இயக்குகிறது. எழுந்து  நின்று குனிந்து தரையைத் தொட்டு பின் நிமிர்வதால் நம் உடலுக்கு இயக்க சக்தி கிடைக்கிறது. மனிதன் நிமிர்ந்து  நிற்கும்போது இதயமானது கீழிருந்து மேல் நோக்கி புவிஈர்ப்பு விசைக்கு எதிரான சக்தியுடன் மூளைக்கு ரத்தத்தை அனுப்புகிறது. குனிந்து பூமியை வணங்கி பின் நிமிரும்போது ரத்தம் தலைக்குப் பாய்ந்து மூளை சுறுசுறுப்படைகிறது.  இடது காலை ஊன்றி எழுவதால் நாம் அன்று செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்

No comments:

Post a Comment