Sunday, April 5, 2015

கொம்பு

கொம்பு
images (1)
சுவாமி புறப்பாடாகட்டும் திருத்தேர் வடம் பிடித்தலாகட்டும் பல்லக்கில் பவனியாகட்டும் குளக்கரையில் ஆற்றங்கரையில் பக்தர்கள் தீர்த்தக் குடங்கள் எடுப்பதாகட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு சுற்று வட்டாரத்தினருக்குத் தெரியப்படுத்த காற்றின் அலைகளில் தவழ்ந்து சென்று  அந்தக் கால காற்றிசை ஒலிபெருக்கியாகச் செயல்புரிந்தது கொம்பு வாத்தியம்தான்.
பொதுவாகவே ஊதுகுழல் இசைக்கருவிகளை தூம்புக் கருவிகள் என்றும் உள்துளைக் கருவிகள் என்றும் குறிப்பிடுவதுண்டு. வங்கியம் நெடுவங்கியம் பெருவங்கியம் நெடுங்குழல் கண்விடுதும்பு குறுந்தூம்பு எனப் பலவகைப்பட்ட தூம்பு இசைக்கருவிகள் பழந்தமிழர் வாழ்வில் கலந்திருந்தன. தூம்புக் கருவிகளின் முதல் மூலம் கொம்பு வாத்தியம்.download
தூம்புக் கருவிகளில் உள்  நுழையும் காற்று கடைசிவரை தடையின்றிப் பயணித்து இசையாய்ப் பிளிறும். கொம்பு வாத்தியத்திலிருந்து கிளம்பிப் பரவும் பிளிறல் ஓசையானது அப்பகுதி மக்களுக்கு ஏதோ ஒன்றினைத்தெரிவிக்கும்
ஆதியில் விலங்குகளை வேட்டையாடிப் புசித்த ஆதிமனிதன் அதன் எலும்புகளில் துளையிட்டு ஊதி ஓசையெழுப்பினான். காலப்போக்கில் எலும்புகளை விடுத்து விலங்குகளின் கொம்பினை வைத்து ஊத பின்னர் அதுவே பெயராகவும் நிலைபெற்றுவிட்டது. வனங்களில் அலைந்து திரிந்த குழுவினர் இதனைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். காலங்கள் மாற அதுவே ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டதாக மாறிப்போனது.  சற்றே நீண்டு வளைந்த ஆங்கில ‘எஸ்’ எழுத்து வடிவமே கொம்பு வாத்தியம். இது ஐந்து பாகங்களால் ஆனது. சுமார் ஐந்து கிலோ எடை கொண்டது. உதடு பொருத்திக் குவித்து ஊதும் பகுதி சிருத்தும் செல்லச் செல்ல சற்று விரிந்தும் காணப்படும். தமிழ் நாட்டில் தற்போது சுவாமிமலைய்ல் மட்டுமே விரும்பிக் கேட்பவர்களுக்கு இது செய்து தரப்படுகிறது, ராஜராஜன் காலத்தில் இந்த இசைக்கருவி செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. திருவிழாக்காலங்களில் இது முன்னறிவிப்புக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.images
திருவையாறு அருகே திருப்பழனம் என்கிற கிராமத்திலும் தஞ்சையின் தெற்கே வாழைமரக் கோட்டை பகுதியிலும் சில கலைஞர்கள் எஞ்சியுள்ளனர்.  அவர்கள் ஊரில் இருக்கும் கொம்பு வாத்தியக் கருவிகள் நாயக்க மன்னர்களால் தங்களின் மூதாதையர்களுக்குத் தரப்பட்டது எனக் கூறுகின்றனர்.download (1)
கொம்பு வாத்தியத்துக்கு ஜோடிப் பொருத்தமான கருவி தப்பு. அந்தத் தப்பும் கொம்பும் சேர்ந்தா எட்டு ஊருக்குச் சத்தம் கேட்கும்  கேரளாவில் கொம்பு வாத்தியம் இப்போதும் மிகப் பிரபலம். அங்கு பஞ்ச வாத்தியங்களில் ஒன்றான செண்டை மேளத்தோடு இணைத்து இது இசைக்கப்படுகிறது. வட மானிலங்களில் சிருங்கா எனப் பெயர் பெற்று கொம்பு இசைக்கப்படுகிறது. நேபாளத்திலும் இக்கருவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் அது தோன்றிய தமிழகத்தில்தான் அதன் நிலை இறங்குமுகமாகிவிட்டது வருத்தமான விஷயம்.

No comments:

Post a Comment