Wednesday, April 1, 2015

ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி விட்டு,சிலர் அன்றாடம் கோலம் போடுவதில்லையே. இது சரியா?

ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி விட்டு,சிலர் அன்றாடம் கோலம் போடுவதில்லையே. இது சரியா?
கோலம் போடுவது என்பது இரு காரணங்களுக்காக. கோலம் என்றால் அழகு என பொருள். நின்ற கோலம், அமர்ந்த கோலம் என்றெல்லாம் சுவாமியை குறிப்பிடுகிறோமே! அது போல... அழகுக்காகப் போடப்படுவது ஒன்று. கோலம் போடப் பயன்படும் அரிசி மாவை எறும்பு, காகம் தின்று பசியாற வேண்டும் என்பது இரண்டாவது. இப்போது வீடுகளில் கோலம் போடுவதே கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம் பளபளக்கும் கற்களில் தரையை போட்டு விடுகிறார்கள். அதனால், ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். வீட்டுக்குள் இப்படி செய்யட்டும். ஆனால், வாசலில் அரிசி மாவுக்கோலம் இடுவதே முறை. எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதே இதன் அடிப்படை

No comments:

Post a Comment