Friday, April 24, 2015

உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ?

ஒருமுறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதைவாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலிசெய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்குபுறமாக இருந்து கீதை வாசிக்கவிட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு கீதையை யாரோ தவறாக வாசிப்பது காதில்விழுந்தது.

அவர் அருகில் சென்றுகேட்டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாகதெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் தவறாக வாசிக்கிறீங்கள்?" என்றார் சைதன்யர் .

அதற்கு அவர்சொன்னார்.., "கீதையை திறந்ததும். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் நிக்கிறார்களே சுவாமி..! அதை காணும்போது என் உடல் நடுங்கிறது..! என் நா தழு தழுக்கிறது..! கண்ணீர் பெருகிஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்னசெய்வேன் பிரவு..?" என கண்ணீர்விட்டார்.

திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்யர் கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவதுதெரிந்ததோ..?" வெட்கி தலைகுனிந்தனர் அவரை கேலிசெய்தவர்கள்.

இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது கண்ணீர் விடும் மிகஉயர்த ஒரு உண்ணதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடம் இல்லை. இந்த சரணா கதியை அடைந்தவர்களை யாரும்_வெல்லவோ, தோற்கடிக்கவோ முடியாது

No comments:

Post a Comment