Sunday, April 5, 2015

தாளம்

தாளம்
download (1)
தாளங்களைப் போற்றி வளர்த்த பெருமை நம் கோவில்களுக்கு உண்டு. கோயில்களில் தேவாரம் பாடும் ஓதுவார் மூர்த்திகள் கைகளில் தாளக்கருவி கொண்டு தாளம் எழுப்பி பாடுவார்கள். ஆதியில் பழங்குடி மக்களின் நடனத்திலிருந்தே தாளம் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார்கள் இசை ஆராய்ச்சியாளர்கள். அக்காலங்களில் கோயில்களில்  நாட்டியமாடிய நங்கையர்கள் தங்கள் பாதங்களிலேயே தாளத்தைக் கணக்கிட்டு அபிநயம் புரிந்துள்ளனர். தற்காலத்திலும் பரத நாட்டியத்தில் தாளம் என்பது தவிர்க்கமுடியாத ஒரு அடிப்படையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.download
காலவோட்டத்தில் தாளத்துகென தனியாக ஒரு இசைக்கருவி உருவானது. இரண்டு உலோகப் பிண்டங்கள் அல்லடு கட்டைகள்தான் அப்போது தாளக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இலக்கண வரம்போடு நவீன தாளக்கருவிகள் வடிவமைக்கப்பட்டன, இலைத்தாளம் குழித்தாளம் என்று தரத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப பெயர்கள் இடம் பெற்றன. ஓதுவார்கல் நட்டுவனார்கல் நாட்டுப்புறப் பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக் கருவிகளை பயன்படுத்தியே இயங்கியுள்ளனர். பிற்காலத்தில் கோலாட்டம் வில்லுப்பாட்டு நாடகங்கள் போன்றவற்றிலும் இக்கருவி முதன்மை பெற்று விளங்கியது.download (2)
உலோகங்களால் வார்க்கப்படும் கஞ்சக்கருவிகல் பட்டியலில் முதன்மையானது தாளம் சிங்கி மணி ஜால்ரா ஜாலர் எனப் பல்வேறு பெயர்களால் இக்கருவி அழைக்கப்பட்டாலும் தாளம் என்பதே அதற்குரிய மகத்தான் பெயராக நிலைபெற்றுவிட்டது.download (3)
தாளக் கருவி தயாரிப்புக்கு குடந்தை அருகே நாச்சியார்கோயில் பெயர்போனது.  இதே ஊரில் 500க்கும் மேற்பட்டவர்கள் தாளக்கருவிகளை உற்பத்தி செய்தார்கள். தற்போது தாளக்காரர்கள் குறைந்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். வெண்கலத்தால் உருவாக்கப்படுவது தாளக்கருவி. ஒலிக்கு உகந்தது வெண்கலம்.
ஆதியில் தாளத்தில் 108 வகைகள் இருந்துள்ளன. தற்காலத்தில் முப்பத்தைந்து வகை தாளங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது, கர்னாடக இசையுலகில் தாளங்கள் ஏழு வகைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவை துருவ ரூபக மட்டிய ஜம்பை திரிபுடை அட ஏக என ஏழு வகைப்படும். தாளம் இசைப்பவர்கள் தாளக்கார ஆசாமி என்றுதான் அழைப்பார்கள் இசைக் கலைஞர்கள் பாடகர்கள் மத்தியில் தாளக் கலைஞர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் ஏனோ தரப்படுவதில்லை. தாளம் இசைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனைச் சிறப்பாக கையாள்வதற்கு லய ஞானமும் பண் அறிவும் அதிபுத்திசாலித்தனமும் அவசியம் தேவை. ஒரு காலத்தில் தாளக் கலைஞர்கள் இல்லாத இசை நிகழ்ச்சியே இல்லை எனச் சொல்லலாம். இப்போதெல்லாம்  நாதஸ்வர கச்சேரிகளில் கூட தாளக் கலைஞர்களைக் காண முடிவதில்லை.
சிவபெருமான் தாளத்தை அமைத்தார் என்பதற்கு பெரிய புராண ஆதாரம் உண்டு. நாதஸ்வரம் தவில் மிருதங்கம் மத்தளம் தபேலா கஞ்சிரா கடம் போன்ற இசைக்கருவிகள் அனைத்துக்கும் தாளமே அடிப்படையானது.

No comments:

Post a Comment