Sunday, April 5, 2015

நாட்டுக்கு நாடு புத்தாண்டு நம்பிக்கை

நாட்டுக்கு நாடு புத்தாண்டு நம்பிக்கை
download
கிரேக்கர்களும் எகிப்தியர்களும் ஆண்டு புதிதாகப் பிறப்பதை அறிவிக்கும் பொருட்டு கைக்குழந்தைகளைக் கூடையில் வைத்து அணிவகுத்து செல்வர்.
ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள் பிற்பகல் முதல் புத்தாண்டு தினம் முடியும் வரை வீட்டைப் பெருக்கவே மாட்டார்கள். வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் கணப்பு அடுப்புக்கள் ஆகியவற்றையும் அணைக்கமாட்டார்கள்.images
இங்கிலாந்து மக்கள் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் ஜனவரி முதல் தேதி அன்று வீட்டுக்கு வரும் முதல் ஆண் அல்லது பெண்ணை முத்தமிட்டு வரவேற்கிறார்கள்.images (1)
கொரியர்கள் புத்தாண்டில் காற்றாடிகளைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். பட்டம் வானில் இறக்கைகட்டி பறப்பதுபோல் தங்களது பேரும் புகழும் சிறகடித்து பறக்கும் என நம்புகின்றனர்.download (2)
பிரேசில் நாட்டில் முதல் நாள் நள்ளிரவிலிருந்து வெடி வெடித்து புத்தாண்டை வரவேற்பர். வெண்ணிற ஆடைகளையே புத்தாண்டு தினத்தில் அணிவர். கடற்கரைக்குச் சென்று ஏழு முறை அலைகளில் குதித்து பூக்களை கடலில் தூவியும் மணலில் மெழுகுவர்த்தியை ஏற்றியும் வைத்து பிரார்த்திப்பர்.download (3)
வட ஆப்பிரிக்காவில் புத்தாண்டு நாளில் மக்கள் தீமூட்டி வணங்கியபின் அதைத் தாண்டி செல்வர். அப்படி தாண்டும்போது அவர்களது தவறுகள் பாவங்கள் தீக்கிரையாகுமென நம்புகிறார்கள்.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தை அரிசி கேக் அரிசி பாயசத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
பண்டைய பாபிலோனியாவில் புத்தாண்டு தினம் தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் கொண்டாடப்பட்டது.images (3)
பிரிட்டனில் புத்தாண்டு தினத்தில் கறுப்பு நிற அங்கி அணிந்து கொண்டு பொழுது விடிந்ததும் கையில் ரொட்டித்துண்டும் நிலக்கரிக் கட்டியும் வைத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இவ்விதம் சென்றால் ஆண்டு முழுவதும் உணவு எவ்விதத் தடையுமின்றி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
தைவானில் தீய சக்திகள் அண்டாதிருக்க ரத்தச் சிவப்பு நிறக் காகிதங்களை வாசலில் தொங்கவிட்டு அவற்றில் புத்தாண்டை வரவேற்று அழகான வாசங்களை எழுதி வைப்பர்.images (2)
யூதர்கள் புத்தாண்டு தினத்தன்று முதல் உணவாகத் தேனைச் சாப்பிட்டு இனிய புத்தாண்டே வருக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.
அமெரிக்காவில் தென்பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாணி பன்றி இறைச்சி சாப்பிட்டால் அந்த ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment