Friday, April 24, 2015

உபதேசம் தேவையா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன், சுவாமி நான் மனதார எந்த தவறும் செய்வதில்லை. பிறருக்கு எந்த கெடுதியும் நினைப்பதில்லை. எனது மனது தூய்மையாக உள்ளது. எனக்கு தங்களுடைய உபதேசம் தேவைதானா என்று கேட்டான்.
மகனே நீ எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து இரண்டு நான்கள் இரு. அதன் பின் வா. உபதேசம் தேவையா? இல்லையா? என்று தெரிந்து விடம் என்றார் மகான்.
அவர் சொன்னபடியே இரண்டு நாட்கள் கழித்து வந்தான் பக்தன்.
மகனே உன் ஆடைகளில் ஏன் இவ்வளவு தூசு படிந்துள்ளது? உன் முகத்திலெல்லாம் அழுக்கு படிந்து கிடப்பதை பார். எந்த வேலையும் செய்யாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருக்கும் போதே உன்மேல் இவ்வளவு மாசு படிந்திருக்கும் போது மனதிலும் அப்படித்தான் அழக்கு படிந்து விடும். அதற்கு நல்ல எண்ணங்களை மனதுக்குள் எப்போதும் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தான் இங்கு உபதேசம் தந்து கொண்டிருக்கிறேன்.
சொன்ன மகானின் சீடனானான் பக்தன்.

எழுபதும் ஐந்தும்: வயதான ஒருவர் புத்தரிடம் சீடராக சேர்ந்தார் பல ஆண்டுகள் கழிந்தன. அந்த சீடரும் துறவியாக ஆனார். ஒரு நாள் அவரை அழைத்த புத்தர். துறவியாரே உங்களுக்கு இப்பொழுது என்ன வயது ஆகிறது? என்று கேட்டார். அதற்கு அவர், ஐந்து வயது ஆகிறது என்றார். வியப்படைந்த புத்தர் உங்களுக்கு எழுபது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் ஐந்து வயது தான் ஆகிறது என்கிறீர்களே... என்று கேட்டார்.
உண்மையான ஞானம் எனக்கு கிடைத்த ஐந்து ஆண்டுகளே ஆகின்றன. உண்மையான அன்பு என் உள்ளத்தில் தோன்றியது இந்த ஐந்து ஆண்டுகளில் தான். இதற்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கனவு போல் எனக்கு தோன்றுகிறது. எந்த பயனும் இல்லாததாக தெரிகிறது. ஆகவே தான் என் வயது ஐந்து என்று சொன்னேன் என்றார் சீடார்.

No comments:

Post a Comment