Thursday, April 2, 2015

ருத்ராக்ஷத்தை கழுத்தில்தான் அணிய வேண்டுமா?

நான் என்னுடைய கணுக்காலில் ருத்ராக்ஷம் அணிந்திருக்கிறேன், என் முழு உடலுமே புனிதமானது என நான் நினைக்கிறேன். நான் செய்தது சரிதானே? சத்குரு: ஓ, உங்கள் உடல் முழுவதுமே புனிதம்தானா? மிகவும் சந்தோஷம். ஆனால் நாளையிலிருந்து ஏன் நீங்கள் காது வழியாகவோ, மூக்கு வழியாகவோ அல்லது கண் வழியாகவோ சாப்பிட முயற்சிக்கக் கூடாது? முயற்சி செய்து பாருங்களேன். இந்த உடலானது ஒரு குறிப்பிட்ட வழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உடல் புனிதமும் அல்ல, அசிங்கமும் அல்ல. ஒரு அற்புதமான இயந்திரம், அவ்வளவுதான். எப்படி இயக்கினால் அது அற்புதமாக இயங்குமோ, எப்படி இயக்கினால் அது முழுபலனைக் கொடுக்குமோ, அப்படிதான் அதை இயக்க வேண்டும். எனவே ருத்ராக்ஷத்தை தவறான இடத்தில் அணிந்தால், அது உங்களை தவறான வழியில் இட்டுச் செல்லலாம். அது உங்கள் கட்டமைப்பையே தவறாக மாற்றியமைத்து விடலாம். எனவேதான் எந்த மாதிரி மனிதர் எந்த மாதிரி இடங்களில் ருத்ராக்ஷத்தை அணியலாம் என்பதற்கு முழு விஞ்ஞானத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ருத்ராக்ஷம் அணிய சிறந்த இடம் கழுத்துதான்.

No comments:

Post a Comment