Wednesday, April 15, 2015

அஷ்ட கந்தம் (சந்தனம்)

அஷ்ட கந்தம் (சந்தனம்) 
---------------------------------------
கந்தம் என்றால் வாசனைப்பொருள் என்று அர்த்தம். அஷ்ட கந்தம் என்றால் எட்டு வித வாசனைப்பொருட்கள் ஒன்றாக கலந்திருபதாகும். 
ஆழ்ந்த பாவத்தையும், அதிர்ஷ்டமின்மையையும், துயரத்தையும் அழித்து தர்ம ஞானத்தை உண்டுபண்ணுவது இந்தச் சந்தனப் பூச்சு என்கிறது ‘குலார்ணவம்’ என்னும் நூல். 
எல்லாச் சந்தனத்தையும் விட வெள்ளைச் சந்தனம் மிகவும் சிறப்பானது,ஆகவே எப்படியாவது முயற்சி செய்து அதைக் கொண்டு வந்து பூஜைக்குப் பயன் படுத்தவும்.
1.பச்சைக்கற்பூரம் 
2. வெள்ளைச் சந்தனம்,
3.கஸ்தூரி,
4.குங்குமப்பூ 
இவைகளை ஒன்றாகாச் சேர்த்தால் ‘சர்வகந்தம்’ஆகும். இதுவே சகல தேவதைகளுக்கும் விருப்பமானது ஆகும்.
அஷ்ட கந்தம்(எட்டு வகை வாசனை)
சகல தேவதைகளின் பூஜையின் போது,
1.கோரோசனை 
2.வெள்ளைச் சந்தனம்,
3.தேவதாரு,.
4.பச்சைக் கற்பூரம்,
5.கருப்பு அகில்,
6.சுக்கு,
7.கஸ்தூரீ,
8.குங்குமப்பூ 
ஆகிய இந்த எட்டு வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவது சிறப்பாகும்.
தேவியர்க்குரிய அஷ்ட கந்தம்
1.குங்குமப்பூ,
2.கார் அகில்,
3.பச்சை,
4.கற்பூரம்,
5.யானை மதநீர்,
6.வெள்ளைச் சந்தனம் ,
7.கோரோசனை,
8.செஞ்சந்தனம் 
ஆகியவை கலந்த வாசனைப் பொருட்களைக் கொண்டு தேவியரின் சிறந்த யந்திரத்தை எழத வேண்டும் என்று ஒரு பழஞ்சுவடி கூறுகிறது. 
இந்த அஷ்ட கந்தம் தயார் நிலையில் தற்காலம் கடைகளில் கிடைக்கிறது. இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் ஜன வசியம் உண்டாகும். இது தவிர நாக சிந்தூரம் என்ற பெயரில் ஒரு வகை விசேச குங்குமம் கடைகளில் கிடைக்கிறது. இந்த நாக சிந்தூரத்தை நெற்றியில் பொட்டிட பயன் படுத்தினால் எளிதில் ஜன வசியம் உண்டாகிறது. 
ஜோதிடர்கள், ஆன்மீகவாதிகள் , பக்திமான்கள் இவைகளை பயன்படுத்தி எளிதில் ஜன வசியம் செய்யலாம்

No comments:

Post a Comment