Sunday, April 5, 2015

வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை நேசிப்போம்
உலகப் புத்தக நாள்  
வாசிப்பு நம்மை முழுமையாக்குகிறது. அன்றாடத் தகவல்களை அறிந்துகொள்ள நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள இலக்கிய இன்பத்தில் மூழ்க என்று பல வகையில் நமக்குப் புத்தகங்கள் உதவுகின்றன. சிரவணனின் கதை, அரிச்சந்திரன் கதை, ஆகியவற்றைப் படித்துதான் காந்திஜியின் வாழ்க்கையில் அன்பு வாய்மை போன்ற நற்பண்புகள் நிறைந்து இருக்கின்றன.
பள்ளி ஆசிரியர் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து தன் வாழ்வின் கட்சியங்களை வகுத்துக் கொண்டவர சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்.images (1)
பெரியாரிடம் பெண்களின் முன்னேற்றம் பற்றிக் கேட்டபோது பெண்கள் கையிலிருந்து அரிவாள்மனையை வாங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் அவர்கள் முன்னேறிவிடுவார்கள் என்றார்.download
“ஒரு கோடி ரூபாய் உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”என்று மகாத்மாவிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் “நூலகம் கட்டுவேன்” அது அனைவரது அறிவுக் கண்களையும் திறக்கும் என்றார்.download (1)
ஜவஹர்லால் நேருவிடம் தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு “என்னுடன் புத்தகங்கள் இருந்தால் தனிமையாக இருந்தாலும் இன்பம் காண்பேன்” என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு முதல் நிமிடம் வரை அவர் ஆழ்ந்து படித்தது இரஷ்ய தலைவர் லெனின் வாழ்க்கை வரலாறுதான்.download (2)
இரஷ்யாவில் லெனின் பிறந்த நாளின்  போது  அவரிடம் மக்கள் “என்ன பரிசு வேண்டும்”? என்று கேட்டபோது அவர் கூறிய பதில் “புத்தகங்கள்”  உடனே மலையாகக் குவிந்தன புத்தகங்கள்   அவ்வாறு சேர்ந்தவை பின்னர் நூலகமாக மாற இன்றளவும் உலகத்திலேயே பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்தான்.
“ஒரு குழந்தைக்குத் தரும் சிறந்த பரிசு புத்தகம் என்றார்  வின்ஸ்ட்டன் சர்ச்சில்
குசந்தைகளிடம் சிறு வயது முதலே  வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி  நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்குமாறு பசக்கவேண்டும். அவர்களுடைய தேடல் பாடநூல்களுடன் மட்டும் இல்லாமல் பரவலாக இருக்குமாறு ஊக்கப்படுத்த வேண்டும். நம் தேடல் விரிவுபடவும் அறிவு தெளிவு ஏற்படவும் மேற்கொள்வோம் வாசிப்புப் பழக்கத்தை   புத்தக தினத்தைக் கொண்டாடுவோம்,

No comments:

Post a Comment