Tuesday, June 30, 2015

பதி பசு பாசம் என்றால் என்ன

படித்ததில் பிடித்தது
நான் யார் என்று மாணவன் குருவிடம் கேட்டான். நீ அதுவாக இருக்கின்றாய் என்று குரு திருவாய் மலர்ந்தார். “நான் அதுவாக இருக்கிறேன்என்பது தனக்கு விளங்கிவிட்டது என்று பதிலிறுத்தான் சீடன். அவன் தான் அதுவாவதாகக் கூறிவிட்டதாக ஆதிசங்கரர் அளித்த புதுவிளக்கம் ஒன்றே பத்தாம் நூற்றாண்டில் அத்தைவதம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் கர்மவினை நீங்கி இறக்கும் பொழுது ஒன்றாகிவிடும்) என்கிற தத்துவம் பிறக்கவைத்தது. இது தவறானதென விளக்கிடப் பிறந்ததே சுத்தாத்து விதம் (இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிருக்கும் இறைவனுக்கும் என்றுமே உள்ளநிலையில் இருவினை ஒப்பும் சக்திநிபாதமும் அடைந்த உயிர் சிவோகம்பாவநிலையில் வாழ்ந்து இறைவனுடன் தாள் தலை ஸ்ரீ தாடலை ஆகப் பொருந்தி பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அமைதி பெறும்) என்பதை விளக்கும் சைவசித்தாந்தம் தோன்றியது.

இறைவனும் உயிரும் இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்ற நிலை உயிரில் என்றுமே உள்ளது. தன்னை அணுத்தன்மையுடையதாக்கும் ஆணவத்தால் இந்த உண்மையை அறியாது, இருளில் உள்ள உயிர், தன்னையும் அறியமுடியாமல் தன்தலைவனையும் அறியமுடியாமல் தவிக்கும் துன்பநிலை கண்டு அந்த உயிரின் மேல் இறைவன் காட்டிய பாசம்தான் அந்த உயிருக்கு உடலையும் காலம ஒன்றையும் அதுசெய்த வினைப்பயனை அனுபவிப்பதற்கான நியதியையும், அது தன் ஆணவத்திலிருந்து விடுபடுவதற்காகக் கலைiயும் கலையில் சிறப்புற்றுப் பெறும் வித்தை என்னும் திறத்தையும் அதன்வழி கல்வியால் செல்வத்தால் வீரத்தால் இவற்றைத் அதிகம் அதிகம் தேடித்தான் வாழவேண்டுமென்று பிறக்கும் அராகம் என்னும் ஆசையையும் இந்த நிலையில் புருடன் என்னும் மானிடத்தகுதியையும் இவற்றை அனுபவித்து வாழும் இடமாக மாயையிலிருந்து உலகையும் அளிக்கிறான் என்பது சைவசித்தாந்தம். காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் ஏழையும் ஆன்மதத்துவங்கள் என்பர். எனவே வாழ்வை வாழ்வதற்கு மூலப்பொருள் அளித்த இடமாம் உலகம் மூலப்பொருளில் இருந்து வேறானது அல்ல. உயிர் ஏதோ வேறானதா? அதுவுமில்லை. உயிருள் ஒன்றாயும் உடனாயும் வேறாயும் இருந்து செயற்படுபவனே கடந்து உள்ளிருக்கும் கடவுளாயிற்றே. ஆகவே உயிரும் மூலப்பொருளில் இருந்து வேறானதல்ல. ஆதலால் பதி பசு பாசம் என்னும் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான ஆனால் இரண்டல்ல ஒன்றுமல்ல என்ற இயல்பு கொண்டனவே. ஆதலால் தான் முப்பொருள்கள் என்று பன்மையில் பேசாது என்றுமுள்ள முப்பொருள் என்று திரித்துவம் என்று கிறிஸ்தவம் சொல்லும் நிலையில், அயர்லாந்தின் தேசிய சின்னமாக இலங்கும் சாம்றோக் இலை (ளூயஅ சுழஉம) எவ்வாறு ஒரேநடுப்பகுதியையும் மூன்று கிளைப்பகுதிகளையும் கொண்டிலங்குகிறதோ அவ்வாறு ஒரேதன்மையானதாகவும் முவ்வேறு தோற்றம் கொண்டதாகவும் பதி பசு பாசம் உள்ளது. பதி எல்லாவற்றுக்கும் உயிராக, உயிர்உள்ள போதும் இல்லாத போதும் ஆதாரமானது. பாசம் என்னையும் ஒரு பொருளாக்கி என்று மாணிக்கவாசகப் பெருமான் நெஞ்சுருகிக் கூறுவது போல் என்னை உயிர் என்னும் வடிவு கொள்ள வைத்த இறைவனின் பெருங்கருணைபேரன்பு. பசு எவ்வாறு தொழுவத்தில் கட்டப்பட்டுள்ளதோ அவ்வாறே நானும் உயிராக உடலுடன் கட்டப்பட்ட நிலையில் இந்த வாழ்வை அனுபவிப்பதால் என் உயிரை இயக்கும் என் ஆன்மாவுக்குப் பசு என்று அழகுத் தமிழ் சொல்லும் வழக்கு உள்ளது. இப்பொழுது எனக்கு நம்முன்னோர்கள் சொன்ன பதி பசு பாசம் என்றால் என்னவென்று புரிகிறது.

சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு

சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு 
1.
தர்க்க ரீதியானது (Logic)
2.
அறிவியற் பூர்வமானது (Scientific)
3.
வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4.
நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5.
உலகளாவியது (Universal)
6.
முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.
சற்காரிய வாதம் - 
'
உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.
மும்மூர்த்திகள் :
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச்செய்யும் - திருமால்
ஒடுக்குதல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன்.
சிவபெருமான் மகாஉருத்திரன்.
இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்
இறைவனின் எண்குணங்கள் யாவை?
1.
தன் வயம் உடைமை.
2.
தூய உடம்பு உடைமை.
3.
இயற்கை உணர்வு உடைமை.
4.
முற்றுணர்வு உடைமை.
5.
இயல்பாகவே பாசமின்மை.
6.
பேரருள் உடைமை.
7.
முடிவில் ஆற்றல் உடைமை.
8.
வரம்பில் இன்பம் உடைமை.
உயிர்களைத் தோற்றுவித்தவர்:
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக
விளக்குகிறது.
கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பை
'
அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.
சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் :
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய்
கூடி நிற்கின்றான்.
வினை என்றால் என்ன?
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு 
வகைப்படுகிறது
இன்ப துன்பத்திற்கான காரணம் :
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.
வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.
முத்தி :
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.
சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.
சீவன் முக்தர் -
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.
நன்றி