Tuesday, June 9, 2015

சக்ரம் உடலுடன் சம்பந்தம் உடையது.

geteilt.


ஸ்ரீ வித்யா சாம்ராஜ்யம்-6


==============================
சக்ரம் உடலுடன் சம்பந்தம் உடையது.ஸ்ரீ
பாவனோ உபனிஷத் இந்த சம்பந்த்த்தை நன்றாக விவரித்து சொல்லும்.
வாசர்களின் பரிச்சயத்த்துக்காக அதன் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.
இது திரு ரமணி அவர்களின் பிளாக்கிலிருந்து எடுக்கப்பட்ட்து.
விஷயம் எல்லாம் ஒன்றுதான். டைப்ப் செய்வதற்கான நேரம் மிஞ்சும்!!
இருப்பினும் அவருடைய மொழி திறமை மிக நன்றாக இருக்கிறது.
ஸ்ரீ வித்யாவை தெரிந்து கொள்வதற்குத்தான் இவைகளை பதிவிடுகிறேன். உபாசனைக்கு உபதேசம் மிக மிக மிக மிக அவசியம்.
ஆன்ம விசாரத்துக்கு அவ்விதமான கட்டுப்பாடுகள் இல்லை.
இனி அவருடைய பதிவு:
// ஸ்ரீ வித்யையின் ஆதார நூலான பாவநோபநிஷத் அதர்வ வேததினுடன் தொடர்புடையது .
ஸ்ரீ சக்ரம் மற்றும் தந்திர முறையிலான தேவி வழிபாட்டை விளக்கும் அற்புதமான உபநிஷத்.
ஸ்ரீவித்யா உபாசனையின் ஆழத்தை இந்த உபநிஷத்தில் உணரலாம்.
வேத சாரமாகவும் வித்யா உபாசனையின் மூல விளங்குவது பாவனோபனிஷத் .
சாக்த தத்துவம் மட்டுமன்றி அத்வைத தத்துவத்தை மிக அழகாக விளக்கும் நூல் இது.
இந்த உபநிஷத்தின் சம்ஸ்க்ருத மற்றும் தமிழ் வடிவம் அனைத்தும் புத்தக வடிவிலும் பணம் கொடுத்தாலே மட்டும் படிக்க முடியும் என்ற நிலையை நான் வலைத்தளத்தில் கண்டேன்.
அனைவரும் படிக்கும் பொருட்டு இதனை வெளியிடுகிறேன், இரண்டு பகுதிகளாக..
Mediafireல் மட்டும் இந்த உபநிஷத் இலவசமாக உள்ளதாக அறிகிறேன் .
பிழை இருப்பின் மன்னிக்கவும் .
பிழைத் திருத்தங்களை வரவேற்கிறேன் ,
ரகசியமான இந்த நூல்களை வெளியிடுவது தவறு என்பது சிலர் கருத்து .
ஆனால் அறிய நூல்கள் அழிந்து போக வாய்ப்பு இருப்பதால் வெளியிடுவது சரி எனக் கருதுகிறேன்.
நமது தொன்மையான பொக்கிஷங்களை வெளியிட்டு அவைகளை காக்க வேண்டும்.
வித்யா உபாசனை ரகசியமானது மட்டுமல்ல , ஆபத்தானதும் கூட.
படிப்பது வேறு , பின்பற்றுவது வேறு .
குரு முகமாக உபதேசம் பெற்றுத்தான் வித்யா உபாசனை செய்ய வேண்டும்.
புத்தகம் மற்றும் வலைத்தளத்தில் படித்து விட்டு இறங்கினால் ஆபத்து..
என்னுடைய இப்பதிவு இந்து மதத்தின், வேதத்தின் முழு வீச்சை இளைய தலை முறைக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன் ..
வேதத்தின் முழுச் சாரத்தையும், சாங்க்யா, யோகா மற்றும் நியாயா தத்துவங்களையும் இந்த உபநிஷத் அடக்கியுள்ளது.//
உபனிஷத் இனி ஆரம்பிக்கிறது.
===================================
ஆத்மான மகண்ட -மண்டலாகார -மாவ்ருத்ய ஸகல-ப்ரஹ்மாண்ட-
மண்டலம் ஸ்வப்ரகாசம் த்யாயேத்I
ஸ்ரீ குரு சர்வ காரண பூதா சக்தி :-1
தன்னைச் சுற்றிலும் தன் ஒளியால் அனைத்துப் பிரம்மாண்ட மண்டலங்களிலும் எல்லையின்றிப் பிரகாசிக்கும் ஆத்ம ஜோதியை த்யானம் செய்க .
குருவே அனைத்திற்கும் காரணமான சக்தி .
2.
தேன நவரந்திர ரூபோ தேக :-2
ஆகையினால் ,ஒன்பது வாயில்களுடன் தோன்றும் ,உடல் குருவின் வடிவாகும் .
3.
நவ சக்ர ரூபம் ஸ்ரீ சக்ரம் -3
ஒன்பது சக்ரங்களைக் கொண்ட இதுவே ஸ்ரீ சக்ரத்தின் வடிவாகும்.
4.
வாராஹி பித்ருரூபா குருகுல்லா பலிதேவதா மாதா -4
தாதுக்களுக்கு அதிதேவதையான வாராஹி , தந்தையின் வடிவம் ;
மாமிசத்திற்கு அதிதேவதையான வாராஹி எனப்படும் குருகுல்லா தேவி ,
அன்னையின் வடிவம்.
5.
புருஷார்த்தா; சாகரா :-5
அறம், பொருள் , இன்பம் மற்றும் வீடு எனப்படும் புருஷார்த்தங்கள் ,
நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல்கள் .
6.
தேஹோ நவரத்ன த்வீப :-6
உடலே நவரத்னத் தீவு .
7.
த்வகாதி சப்ததாது -ரோம சம்யுக்த :-7
ஏழு தாதுக்கள் ரோமத்துடன் நவரத்தினங்கள் .
உரோமம் ,மாமிசம் ,இரத்தம்,மேதை ,மஜ்ஜை ,நரம்புகள் ,எலும்புகள்.
8.

சங்கல்பா :கலபதர்வச்தேஜ: கல்ப கோத்யானம்-7
தெளிந்த தீர்மானமே கற்பக வ்ருக்ஷங்கள்.
உள்ளொளி படைத்த மனமே கற்பகக் காடு .
ரசனையா -பாவ்யமானா மதுராம்ல -திக்த -கடு -கஷாய -லவண-ரஸா:
ஷட்த்ருதவ :-9
நாவினால் உணரப்படும் இனிப்பு ,புளிப்பு ,கசப்பு ,உவர்ப்பு ,கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆறு ருதுக்கள்.
10.
ஞானமர்க்யம் ஞேயம் ஹவிர் ஜ்ஞாதா ஹோதா
ஞாத்ரு -ஞான-ஞேஞானா -மபேத-பாவனம் ஸ்ரீசக்ர பூஜனம்-
ஞானமே சிறந்த அர்க்யம் .
இந்திரிய அக்னியில் அர்ப்பணம் செய்யப்படும் ஞேய பொருள்களே ஹவிஸாகும்.
தன்னைத் தானே அறிபவன் ,ஹோமம் செய்பவன் .
அறிபவனும் ,அறிவும் ,அறியப்படுவதும் ஒன்றே என்ற பரிவற்ற மனப் பாங்கே ஸ்ரீசக்ர பூஜையாகும் .
11.
நியதி : ஸ்ருங்காரராதயோ ரஸா அணிமாதய :
ஒழுக்கத்துடன் கூடிய ஒன்பது ரசங்களும் ,சேர்ந்து அணிமா முதலிய பத்து
சித்தி தேவதைகள் .
நவரசங்கள் .
பயம்,,கோபம்,வெறுப்பு ,ஹாஸ்யம் ,வீரம் ,கருணை ,வியப்பு மற்றும் அமைதி .
12.
காம -குரோத -லோப -மோக -மத -மாத்சர்ய-புண்ய -பாப -மாயா ப்ராஹ்மாயத்-யஷ்டசக்த்ய :
காமம் ,கோபம் ,லோபம் , மோகம் மதம் ,மாத்சர்யம் ,புண்யம் மற்றும் பாபம் இவை எட்டும் மாத்ருகா சக்திகள் .
13.
ஆதார நவகம்முத்ரா சக்த்யா .
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள் ,இவைகளுக்கு மேலே உள்ள
அகுல சகஸ்ராரம் ,கீழுள்ள குல சஹஸ்ராரம் ,இந்திர யோனி -உள்நாக்கு ஆகிய ஒன்பது ஆதாரங்களும் இவற்றின் சமஷ்டியாக ஒன்றும் சேர்த்து பத்து முத்ரா சக்திகள் .
14.
ப்ருத்வியப்ததேஜோ -வாய்வாகாச -ச்ரோத்ர -த்வக்-சக்ஷூர் -ஜிஹ்வாக்காரண-வாக் -பாணி -பாத -பாயுபச்தானி மனோ விகாரா :
காமா கர்ஷின்யாதி சோடச-சக்த்ய:
நிலம் ,நீர் , நெருப்பு ,காற்று ,ஆகாயம் :
செவி ,மெய் ,கண் ,நாக்கு ,மூக்கு ,வாக்கு :
கை ,கால் பாயு ,உபஸ்தம் எனும் பதினைந்தும் , மற்றும் ,
இவற்றால் மாறுபடும் மனத்துடன் காமகார்ஷினி முதலான பதினாறு சக்திகள் .
15.
வ்சனாதாகமான -விசர்க்கானந்த -ஹானபேதையோ பேக்ஷாக்ய-
புத்தயோனங்க குசுமண்டத்திஷ்டவ்.
பேசுதல் வாங்குதல் ,நடத்தல் ,கழித்தல் ரமித்தல் ஆகிய ஐந்து கர்மேந்திரியத் தொழில்களும்,தாகம் ,கிரகணம் ,உபேக்ஷை எனும் புத்தியின் தொழில்களும் ,அனங்க குசுமா எனப்படும் எட்டு சக்திகள்.
16.
அலம்புசா குஹூர் -விச்வோதரா வாரணாகமன- ஹஸ்தி ஜிஹ்வா
யசொவதீ பயஸ்வினி காந்தாரி பூஷா சங்கினி சரசஸ்வதீதா
பிங்களா சுஷும்னா சேதி சதுர்த்தச நாட்ய :
சர்வ:சம்ஷன்யோபாதி சதுர்த்தச சக்தய:
அலம்புசா ,குஹு ,விச்வோதாரா ,வாரணா,ஹஸ்தி -ஜிஹ்வை ,யசோவதீ,
பயச்விநீ ,காந்தாரி ,பூஷா ,சங்கினி ,சரஸ்வதி ,இடை , பிங்கலை ,சுஷும்னை ஆகிய பதினான்கு நாட்களின் சக்திகளே சர்வ சம்க்ஷோபிணீ
முதலிய பதினான்கு சக்திகள்.
17.
பிராணாபான -வ்யாநோதான -சமான -நாக -கூர்ம -க்ருகர-தேவதத்த -தனஞ்சயா தசாவயவ :
சர்வ சித்தி -பிரதாதீ -பகிர்த்தசார தேவதா .
பிராணன் ,அபானன்,,வியானன்,உதானன், சமானன் ,நாகன் ,கூர்மன் ,க்ருகரன் ,தேவதத்தன் ,தனஞ்சயன் முதலிய பத்து வாயுக்களும் வெளிப்பத்துக் கோணங்களில் உள்ள தேவதைகள் .
18.
ஏதத்வாயு சம்சர்க்ககோபாதி-பேதேன ரேசக:பாசக :
சோஷகோ தாக :
ப்லாகவ இதி பிராண -முக்யத்வேன பஞ்சதசா ஜடராக்னிற் பவதி .18

க்ஷாரக உததராக :க்ஷோபகோ ஜ்ரும்பகோ மோஹக இதி நாக
ப்ராதான்யேன பஞ்சவிதாஸ்தே மனுஷ்யாணாம் தேஹகா பக்ஷ்ய
போஜ்ய சோஜ்ய சோஷ்ய லேஹ்ய பேயாத்மக பஞ்சவித
மன்னம் பாசயந்தி .

ஏதாதசவக்னிகலா:சர்வக்ஞாயாத்யா அந்தர் தசார தேவதா
18 to 20.
மேற்கூறிய பத்து அக்னிகள் பத்து தொழில்களையாற்றுகின்றன .
அவையாவன .
ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி
பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் ,
சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion),
தாஹகம்- உணவை எரித்தல்,
ப்லாவகம் -நிறைத்தல் .(5 )
க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம் எனப்பட்ட ஐந்து
உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது..
இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய
,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும் முறையை வைத்து )
எனப்பட்ட ஐந்து வகையான உணவுகளை ஜீரணம் செய்கிறது .
இப்பத்து அக்நிகலைகளும் , சர்வக்க்யா முதலிய பத்துக் கோணங்கள் .
21.
சீதோஷ்ண -சுகது : க்கேச்சா :சத்வம் ரஜஸ்தமோ
வசின்யாதி -சக்தயோஷ்டௌ.
குளிர் ,வெப்பம் ,இன்பம் ,துன்பம் ,ஆசை,சத்வம் ,ரஜஸ் ,தமஸ் ஆகியன வசினி முதலான எட்டு சக்திகள் .
22.
சப்தாதி தன்மாத்ரா பஞ்ச புஷ்ப பாணா:
23.மன இக்ஷு தனு:
24. ராக : பாச :
25.
த்வேஷான்குச:

ஸ்பர்சம் ,ரூபம், கந்தம் ,ரசம் , சப்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்
தேவியின் கையில் உள்ள புஷ்ப பானங்கள்;
மனமே கரும்பு வில் ;
ஆசையே பாசமாகிய கயிறு ,
த்வேஷமே அங்குசம் ,
26.
அவ்யக்த :மகத் அஹங்காரா :காமேஸ்வரி வஜ்ரேஸ்வரி
பகமாலின்யோந்தஸ்திரி-கோணகா தேவதா :
அவ்யக்தம்(விளக்கவொண்ணாதது),மகத்,அஹங்காரம் ஆகியவையே ,காமேஸ்வரி,,வஜ்ரேஸ்வரி மற்றும் பகமலலினி எனப்படும் உள் முக்கோண தேவதைகள் .
27. நிருபாதிக சம்விதேவ காமேஸ்வர:
உபாதியற்ற பிந்துவடிவான ஞானமே காமேஸ்வரர்
28.
சதானந்த பூர்ண :ச்வாத்மைவ பரதேவதா லலிதா
எப்பொழுதும் பரிபூர்ண ஆனந்தமாயிருக்கும் தனது ஆத்ம ஸ்வரூபமே
லலிதா தேவி .
29.
லவ்ஹித்ய மேதச்ய சர்வச்ய விமர்ச :
ஜீவன் சக்தி இவற்றின் செந்நிறம் , இவ்வனைத்தின் விமர்சம் .
30.
அனன்ய சித்தத்வேன ச சித்தி :
இந்த சாதைனையால் சித்தத்தை ஒருமுகப்படுத்தலே சித்தியாகும் .
31.
பவானாயாக : க்ரியா : உபசார :.
பாவனை செய்வதே உபசாரம்.
32.
அகம் த்வமஸ்தி நாஸ்தி கர்த்தவ்ய மகர்த்தவ்ய முபாசிதவ்ய
மிதி விகல்பானா மாத்மனி விலாபனம் ஹோம :
நான் ,நீ ,உண்டு , இல்லை , செய்யத்தக்கது , தகாதது ,உபாசிக்கத்தக்கது எனும் வேறுபாடுகளை எல்லாம் ஆத்மாவில் ஒடுங்க ,லயிக்கச் செய்வதே ஹோமம்.
33.
பாவனா விஷயாணா மபேத பாவனா தர்ப்பணம்
பாவனைக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் உயர்ந்தது தாழ்ந்தது பார்க்காமல் இருப்பதே தர்ப்பணம் .
34.
பஞ்சதச திதி ரூபேண காலச்ய பரிநாமவலோகன :

பதினைந்து திதிகளின் வடிவைக் காலம் மாறி வருவதை , சாட்சியாயிருந்து ,காண்பதே காட்சி
35.
ஏவம். முஹூர்த்த த்விதயம் முஹூர்த்த மாத்ரம் வா
பாவனா பரோ ஜீவன் முக்தோ பவதி ஸ ஏவ சிவ
யோகீதி கத்யதே.
இப்படி மூன்று முஹூர்த்தமோ , அல்லது இரண்டு முஹூர்த்தமோ ,அல்லது ஒரு முஹூர்த்தமோ ஆவது பாவனையில் நிலைத்திருப்பவன்
ஜீவன் முக்தன் ஆவான்
அவனே சிவயோகி எனப்படுவான் .
36.காதி மதேனாச்சக்ர பாவனா : பிரதிபாதிதா :
இவ்வாறு காதி மதத்தை ஒற்றி மிகவும் தனிப்பட்ட ஸ்ரீசக்ர பாவனைகள்
விளக்கப்பட்டன
ய.ஏவம் வேத ஸோதர்வசிரோ தீதே
யார் இதை உள்ளபடி அறிகிறானோ அவன் அதர்வ வேதத்தின் சிறந்த உண்மையைக் கற்றவன் ஆகிறான் .
இதத்துடன் பாவனோபனிஷத் நிறைவு பெற்றது .
ஸ்ரீ சக்கிர உபாசனையின் பாவனோபனிஷத் பற்றி பார்த்தோம். இந்த உடம்பை அதை தரித்திருக்கும் ஜீவனை அதாவது பிண்டத்தை அண்டத்துடன் அதாவது பிரம்மத்துடன் பொருத்தி பார்த்து நம்மை வழி காட்டுவது அது
இப்போது பிரம்ம ஸூத்ரம் என்ற நூலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
பிரம்ம ஸூத்ரம் நான் கு அத்தியாயங்களாகவும் அத்தியாயத்துக்கு நாங்கு வீதம் பதினாறு பாதங்களாகவும் 500க்கும் மேற்பட்ட (545) சூத்திரங்களை கொண்டதாகவும் விளங்குவது.
ஸூத்திரம் எனில் நூற்பா என்று பொருள்.
இந்த நாங்கு அத்தியாயங்கள்:
ஸமன் வயாத்யாயம்
அவிரோத்யாயம்
சாத்னாத்யாயம்
பலாத்யாயம்
எல்லா வேதங்களும் பர பிரம்மத்தை கூறுவதிலேயே முக்கியமாக இருக்கின்றன என்பதை விளக்கும் காரணம் பற்றி ஸமன் வயாத்யாயம் என்று முதல் அத்தியாயத்துக்கு பெயர்.
இந்த அத்தியாயத்துக்கு மூல பிரமாணம் பிரக்ஞானம் பிரம்மா என்ற ரிக் வேத மஹா வாக்கியம்.
பிரம்மத்தை காட்டிலும் இரண்டாவதாக வேறு ஒரு பொருள் உண்டாயின் பிரம்மம் என்ற சொல்லுக்கே பொருள் இல்லாமல் போய் விடும்.
மூவகை அளவு அற்றதான பொருளே பிரம்ம பதத்தின் பொருள் என கொள்ள வேண்டும்.
அசேதன பொருளுக்கு ( ஜட பொருள்) எல்லா இடத்திலும் இருக்கும் நிலைமையோ எல்லா காலத்தும் உள்ள நிலைமையொ ஒத்து வராது.
சித் ஒன்றுக்குத்தான் பூர்த்தி - அதாவது இடம் காலம் உருவம் இம்மூன்றாலும் அளவிடப்படாமல் இருப்பது பொருந்தும்.
அறிவுக்கு ஒரு உருவம் இல்லை.அறியப்படும் பொருளுக்கு ஏற்ப அறிவின் வடிவம் தோன்றும் என்ற நியதியின்படி ஜடப்பொருளுக்கு ஒரு ஆதாரமுண்டு.ஆகவே அது அளக்க முடிந்ததாக ஆகிறது.அதன் சம்பந்தத்தினால் அறிவு அளக்க முடிந்ததாக தோற்றமளித்தாலும் இயர்கையில் அதற்கு ஒரு வகையான அளவும் கிடையாது.
எல்லா உலகமும் பிரம்மத்திலிருந்தெ உருவாகி சிறிது காலம் நின்று மறைகிறது-பிரம்மத்திலேயே லயம் அடைகிறது என்ற காரணத்தினால் உலகமே பிரம்மம். ஆகவே ராக துவேஷமின்றி சாந்தியுடன் உபாசனை செய்ய வேண்டும் என்ற ஸ்ருதியை அனுசரித்து காரணமே காரியமாக தோன்றுவதாலும் வேதாந்த வாக்கியங்கள் சித் ரூபமான பிரம்மத்தையே குறிக்கிறது என்று கிடைக்கிறது.






No comments:

Post a Comment