Sunday, July 19, 2015

அன்பை உணர்ந்தால் தானாகவே கருணை பிறக்கும்

வேறு வேறு அல்ல. அன்பை உணர்ந்தால் தானாகவே கருணை பிறக்கும்.
மாமரத்தில் ஒரு பிஞ்சு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது விழாது இருப்பதற்கக் காம்பு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அது மேலும் வளரும்போது அதனுடைய கனத்திற்குத் தக்கவாறு காம்பு பெரிதாகி அதை விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் அன்பு. அதற்கு மேலாக அது வளர்வதற்கு வேண்டிய இரசத்தை ஊட்டி பாதுகாத்துப் பெரிதாக்கி பழமாக வளரச் செய்கிறது. அதுதான் கருணை. இந்த அன்பும் கருணையும் இறைநிலையின் தன்மை. இதை எல்லா இடங்களிலும் காணலாம். இது சீவகாந்தத்தின் மூலமாக எழும் இறைநிலையின் மலர்ச்சி.
பழைய பாடல் ஒன்றிலே,
'கருவுக்குள் முட்டைக்கும் கல்லுக்குள் தேரைக்கும்
உணவை வைத்த இறைவன் என்னை மட்டும் விட்டு விடுவானா?'
என்பதாக வருகிறது.
எவ்வாறு கல்லுக்குள் இருக்கின்ற தேரைக்கு உணவு கிடைக்கிறது என்றால், பாறையின் மீத உள்ள தண்ணீரில் தவளையானது முட்டையிட்டு இருக்கும். அந்த பாறையில் உள்ள, கண்களுக்குப் புலனாகாத சிறிய சந்துகளின் வழியாக தண்ணீர் கசிந்து செல்லும்பொழுது அந்த முட்டையும் வழுக்கிக் கொண்டு சென்று ஒரு வசதியான இடத்தில் பாறைக்குள் தங்கிக் கொள்ளும்.
நாளடைவில் அது வளர்ந்து, பெரிதாகி வெளியில் வர வழியில்லாமல் நின்று விடும். அந்தக் கல்லிலே இருக்கின்ற நுண்ணிய பிளவு வழியாகவே அதற்கான காற்று உள்ளே சென்று கொண்டிருக்கும். அங்கு வாழ்வதற்கு உயிர்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் இறைநிலை அளிக்கிறது. அதுதான் கருணை.
ஒரு முட்டையை எடுத்துக் கொள்வோம். அதற்குள்ளாக மஞ்சள் கரு இருக்கிறது. அதைச் சுற்றிலும் வெள்ளைக் கரு இருக்கிறது, மஞ்சள் கருதான் குஞ்சாக மாறுகிறது. அவ்வாறு உருவாக அதற்கு உணவு கொடுப்பது யார்? இறைநிலையே அதைச் சுற்றி உணவாக வெள்ளைக்கரு வைத்திருக்கிறது.
இந்த இரண்டையும் பாதுகாக்க, இயற்கை யாரும் செய்ய முடியாத அளவிற்கு இரசாயனக் கூட்டு சேர்த்து முட்டை ஓடு இல்லாது, தானே உடையுமாறு அந்த ஓட்டை அமைந்திருக்கின்றது. அதுதான் அன்பு.
அன்பும் கருணையும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், எல்லா சீவராசிகளிடத்தும், மலர்ந்து இருப்பதைக் காணலாம். எல்லா சீவராகசிகளிடமும் இறைநிலையே அறிவாக இருப்பதால் அங்கு அன்பும், கருமையும் மிளர்கின்றன. அப்படியென்றால், விலங்கினங்கள் ஒன்றையொன்று கொன்று தின்கின்றனவே. அங்கு அன்பும், கருணையும் ஏது எனக் கேட்கலாம்.
இயற்கையின் நியதிப்படி, அது தானே உற்பத்தி செய்து சாப்பிட முடியாத வகையில் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிட்டு, அப்படியே பழகிக் கொண்டுள்ளது. அதில் கூட நாம் பார்த்தால் சில உயிர்கள், தாம் மற்றொன்றை அடித்துச் சாப்பிடும்பொழுது அதற்குச் சிறிது மயக்கத்தை ஊட்டி, உணர்ச்சியே இல்லாது செய்து, தம்முடைய சக்தியை அதன் மேல் பாய்ச்சி, தாம் உண்பதே அதற்கு இன்பமாக இருக்கும் வகையிலே உண்ணுகின்றன. இறைநிலை இந்த இடத்தில் கூட கருணையோடு துன்பம் இல்லாது அந்த உயிரைத் தன் வயப்படுத்திக் கொள்கின்றது.
பாம்பு தவளையைப் பிடிக்கிறது என்று சொன்னால் முதலில் அந்தப் பாம்பு தினமும் காலை வேளையில் சூரியனைப் பார்த்துத் தன்னுடைய காந்த சக்தியை அதிகரித்துக் கொள்கிறது. அது தவளையைப் பிடித்த உடனே தன்னுடைய காந்த சக்தியைப் பாய்ச்சி அதற்கு ஒன்றும் தெரியாதவாறு மயக்கம் அடையச் செய்கின்றது. தவளை கூச்சல் போடுவது எல்லாம் அதனுடைய நரம்பு இயக்கம் தானே தவிர அதற்குத் துன்பம் தெரிவதில்லை.
இதே போன்று பல்லி ஒரு பூச்சியைப் பிடிக்கும்பொழுது தன்னுடைய கண்கள் வழியாகக் காந்த சக்தியை அதன் மேல் பாய்ச்சி அதை மயக்கம் அடையச் செய்து அதனுடைய மயக்க நிலையில் (வுசயளெ ளுவயவந) அதற்குத் துன்பம் கொடுக்காது உண்கிறது. இவ்வாறு எல்லா இடங்களிலும் இறைநிலையில் ஒரு செயல் நடக்கும் பொழுது அங்கு அன்பும், கருணையும் சேர்ந்து இருப்பதைப் பார்க்கலாம்.
நமக்கு உடலில் காயம்பட்டு இரத்தம் வருகிறது. இந்த இரத்தம் போய்க் கொண்டே இருந்தால் உயிர் போய் விடும். ஆனால், சிறிது காற்றுப்பட்ட உடனே இரத்தம் உறைந்து வீணாவது நின்று விடுகிறது. இந்தக் கருணைச் செயல் எல்லா உயிர்களிடத்தும் இறைநிலை உள்ளது. இந்த உண்மையை நாம் எந்த அளவுக்கு உணர்ந்து கொள்கிறோமோ அதுதான் இறைவழிபாடு. அதற்கு ஒத்த முறையில் அதோடு இணைந்து நடப்பதுதான் அறநெறி.

No comments:

Post a Comment