Wednesday, August 26, 2015

அளவுக்கு மிஞ்சி வேண்டாமே!

புத்தர் வைசாலியை நோக்கிச் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். சீடர்கள் ஆளுக்கொரு துணி மூட்டையைத் தலையில் வைத்திருந்தனர். குளிர் காலம் என்பதால், இரவில் போர்த்திக் கொள்ள நிறைய போர்வைகள் தேவைப்பட்டதே இதற்கு காரணம்.
அன்று மாலை வைசாலி நகரை அடைந்ததும், சிறிதுநேரம் சீடர்களுக்கு அறக்கருத்துகளை உபதேசித்தார். பின் தூங்கத் தயாரானார்.
இரவில் குளிர் காற்று வீசியது. முதல் ஜாமத்தில், உடல் தாங்கும் அளவுக்கு அது இருந்தது. புத்தர் தரையில் மட்டும் துணி விரித்துப்படுத்தார்.
இரண்டாவது ஜாமத்தில் குளிர் அதிகமாகவே, ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டார். 
மூன்றாவது ஜாமத்தில் குளிர் மேலும் அதிகரிக்கவே, இன்னும் ஒரு போர்வையால் போர்த்திக் கொண்டார். கதகதப்பாக இருந்தது. அதன்பின், புத்தர் நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்ந்தார். 
மறுநாள் புத்தர் சீடர்களை அழைத்து, ""குளிரில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூன்று போர்வை போதுமானது. அதற்கு மேல் தேவையில்லை,'' என்று உபதேசித்தார். அனுபவத்தில் அறிந்ததை உபதேசித்த புத்தரின் கட்டளையை ஏற்ற சீடர்களும், மூன்று போர்வைகளை வைத்துக் கொண்டு மற்றதை ஏழைகளுக்கு தானம் அளித்தனர்.

No comments:

Post a Comment