Wednesday, August 26, 2015

மனசாட்சி

பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். 
அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.
""ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களே...ஏன்?'' என்று கேட்டார் பணக்காரர்.
""ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,'' என்றார் சிற்பி.
""இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!'' என்றார் பணக்காரர்.
அதற்கு சிற்பி,""மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான்... ஆனால், நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,'' என்றார் சிற்பி.
எந்தத்தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது...
புரிகிறதா...!

No comments:

Post a Comment