Thursday, August 27, 2015

ஏழையாய், பணக்காரனாய் பிறக்க காரணம் என்ன?

ஏழையாய், பணக்காரனாய் பிறக்க காரணம் என்ன?
‘‘பில்கேட்சின் மகனாக ஒருவன் பிறப்பதற்கும், பிளாட்பாரத்தில் இருப்பவன் மகனாகவும் ஒருவன் பிறப்பதற்கு அவன் காரணம் இல்லை. பின்னர் அப்படிப்பட்ட நிலை ஏன் உருவாகிறது?’’
இந்த கேள்வியைத்தான் அர்ச்சுனன் இறைவனிடம் கேட்கிறான். இதே கேள்விக்கு எந்த மதத்தாலும், அந்த மதத்தினரால் தூண்டப்படும் நாத்திகர்களாலும் பதில் சொல்ல முடியாதது.
ஏழை பணக்காரனாக ஒருவன் பிறப்பதற்கு விதி காரணம் அல்ல என்று சிந்தித்த கார்ல்மார்க்ஸ், அதை மாற்றிவிட முடியும் என்று சிந்தித்து ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அதைப் பயன்படுத்தி பல நாடுகளில் ஆட்சிகள் மலர்ந்தது. இன்றைய நிலை அவை அனைத்தும் அழிந்த விட்டது. கார்ல் மார்க்ஸ் தத்துவம் விதியிடம் தோற்றுவிட்டது.
சீனாவில் கூட கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் இல்லை. அதனால், விஞ்ஞான உலகம் ‘‘ஜெனடிக் இன்ஜினியரிங்’’ என்ற முறையில் மறுபிறவி தத்துவத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் 200 பேரை தேர்ந்தெடுத்தனர்.
அப்பா மகன், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, இவர்களின் குணங்கள் ஒருவருக்கொருவர் தாறுமாறாக இருந்தது. உதாரணமாக அண்ணம் தம்பி இருவரில் ஒரு குடிகாரராகவும், மற்றவர் அந்த பழக்கம் இல்லாதவராகவும் இருந்தார்.
இவர்களின் ஜீன்களை எடுத்து அவற்றில் உள்ள அணுக்களை பலவாறாக சோதித்தனர். ஒரே வயிற்றில் பிறந்திருந்தும் அவர்களின் அடிப்படை பழக்க வழக்கங்கள் மாறுபடுவதற்கு காரணம் என்ன?
உடன்பிறந்த சகோதர்களில் ஒருவர் கோபக்காரராகவும், ஒருவர் பொறுமைசாலியாகவும், ஒருவர் பேராசைக்காரராகவும், மற்றவர் சமாதானம் உள்ளவராகவும் என்று மாறுபட்ட கோணங்களிலேயே காணப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஒரே சூழ்நிலையில் வளர்க்கப்பட்டும் ஏன் இப்படிப்பட்ட சுபாவங்கள் உருவாகின்றன என்று ஆராய்ந்தபோது, எல்லோருக்கும் பிறப்பின் அடிப்படையில் உடலும், ரத்தமும், சதையும், எலும்பும் ஒன்று போல இருந்தன.
ஆனால் சுபாவங்கள் மாறுபட்டிருந்தது. காரணம் அவர்களுடைய முக அடையாளங்கள் தாய் தந்தையரைப்போல இருந்தாலும், அவர்களுக்கு ஆத்மா தனித்தனியாக இருந்தது.
அவர்களின் கல்வி அறிவும், வெவ்வேறு விதமாக இருந்தது. பின்னர் படித்த பிறகு அவர்களுக்கு அமையக் கூடிய வேலைவாய்ப்பும் திறமையானவருக்கு சாதாரண வேலையும், திறமையற்றவருக்கு மிகப் பெரிய பொருளாதார வசதியும் அதிகமானது.
இது ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு இந்து சமய நீதிகளுக்கும் மறுபிறவி விளக்கங்களுக்கும் மட்டுமே உடன்பாடாக காணப்பட்டது. இதுகுறித்த ஆய்வுகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு மிகச் சிறந்த அறிவியலாக விளங்கும் இந்து சமய விளக்கங்கள் வெற்றி அடையும் முன்பே இந்து மதத்தை அழித்து விட வேண்டும் என்றுதான் பகுத்தறிவாளர்கள் என்று தவறான பெயர் கொண்டவர்கள் மற்ற மதத்தின் துணையுடன் தீவிர முயற்சி செய்கிறார்கள்

No comments:

Post a Comment