Saturday, September 5, 2015

.கோவில் என்பதா, கோயில் என்பதா?

கோவில் என்பதா, கோயில் என்பதா?
ஒரு ஆலயத்தை கோவில் என்போரும் உண்டு; கோயில் என்போரும் உண்டு. ஆனால் கோயில் என்ற பதம், ‘கோ’ உறைந்திருக்கும் ‘இல்’ என்று பொருள்படுவதாகவே பலரும் சொல்வார்கள். அதாவது கோ என்ற மன்னன் குடியிருக்கும் இல், கோயில். தன் மக்களை ஆள்பவன், அவர்கள் நலம் காப்பவன் மன்னன். ஆனால் அகில உலகத்தையும் படைத்து, காத்து அருளும் இறைவனும் மன்னன் போன்றவன்தானே. ஆகவேதான் கோ என்றால் இறை என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த இறைவன் உறையும் இல்தான் கோயில்.

No comments:

Post a Comment