Wednesday, September 23, 2015

வடமொழியும் தென்தமிழும்

வடமொழியும் தென்தமிழும்
வளர்ந்து வரும் விஞ்ஞான துறைகளுள் ஒன்று மொழியியற்துறை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இத்துறை புதுப்புதுக்கண்டுபிடிப்புக்களை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புக்களில் ஒன்று சமஸ்கிருத மொழியின் அதிசயம் கடவுளரின் மொழி என்றும் தேவநாகரி என்றும் அழைக்கப்படும். சமஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி என்று பொருள்படும்.
ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவ வலிமையாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலை பயன்படுத்த சமஸ்கிருதமே சிறந்த மொழி என்று கண்டறிந்தனர். உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். இம் மொழியானது எளிமையானது தூய்மையானது இறைவனின் படைப்பின் மகிமையையும் உணர்த்துவது.
இந்தியாவுக்கு வருகை தந்த அல்பெரூனி சமஸ்கிருதத்திலுள்ள புராணங்களை கண்டு வியந்து “அதில் எல்லாம் இருக்கிறது” என அதிசயத்துக் கூறினார். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்ட அவர் தன்னால் மத்ஸ்ய ஆதித்ய வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க முடிந்தது என ஆதங்கப்பட்டுள்ளார்.
18 புராணங்களில் உள்ள 370548(சுமார்) ஸ்லோகங்களுடன் தேவிபாகவதத்தில் உள்ள 18000(சுமார்) ஸ்லோகங்களையும் மகாபாரதத்தில் உள்ள 100000(சுமார்) ஸ்லோகங்களையும் வான்மீகி இராமாயணத்திலுள்ள 24000(சுமார்) ஸ்லோகங்களையும் சேர்த்தால் 512548(சுமார்) ஸ்லோகங்கள் கிடைக்கின்றன. நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு சில பதிப்புக்களை வைத்து இந்த கணக்கீடு உள்ளது. சுமார் ஜந்து இலட்சம் (500000) ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து அறிவையும் இவ்வுலக வாழ்நெறிகளையும் மோட்ச வாழ்நெறிகளையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இவற்றில் இல்லாதது வேறு எங்கும் இருக்க போவதில்லை.
நாஸா ஆய்வு மையம் தன் பயன்பாட்டிற்காக எல்லா மொழிகளையும் ஆராய்ந்த போது பூமியிலுள்ள தெளிவான மொழி சமஸ்கிருதமே என்று கூறுகிறது. நாஸாவைச் சேர்ந்த ரிக்ப்;ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் சமஸ்கிருத மொழியின் பெருமைகளை தெளிவாக கூறியுள்ளார். சமீபத்தில் கணினிப் பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சமஸ்கிருதமே என்று அறிவித்துள்ளார்கள். 1984ம் ஆண்டு ஆர்டிபிஸியல் இன்டெலிஜென்ற் யு1 என்ற பத்திரிகை இயந்திர மொழிபெயர்ப்பிற்கு சமஸ்கிருதம் சிறந்த மொழி என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டுமானால் முதலில் ஜப்பானிய மொழியை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்க வேண்டும். பின் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு சமஸ்கிருத மொழியின் அமைப்பே காரணமாகும்.
அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் காயத்ரி மந்திரத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது வினாடிக்கு இரண்டு இலட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இவ் மந்திரம் அபூர்வமானது. காயத்ரி மந்திரமானது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துகிறது.
சுவிற்ஸ்லார்ந்தைச் சேர்ந்த டாக்டர்.கான்ஸ் ஜென்னி என்பவர் ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics : The study of wave phenomena என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவர் தனது ஆராய்ச்சியின் போது சமஸ்கிருத உயிரெழுத்துக்களை உச்சரித்த பொழுது தகட்டின் மீதுள்ள மணல் அந்த எழுத்து வடிவத்தை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார். மேலும் தலையாய மந்திரமான ஓம் என்பதை உச்சரித்த போது ஓ என்ற எழுத்தை உச்சரித்தவுடன் ஒரு வட்டம் தோன்றியது. ம் என்று உச்சரிக்கும் போது ஒரு சிக்கலான உருவம் தோன்றியது. இதைக் கண்டு பிரமித்துப் போனார். வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. ஆலயங்களில் பிரதிஸ்டை செய்யும் யந்திரத்திற்கு ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது. அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே இன்றும் ஆலயங்களில் யந்திரங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்படுகிறது.
இவ்வாறு இன்னோரன்ன சிறப்புக்களையுடைய சமஸ்கிருத மொழியை பல சமயம் அறியாக்கூத்தாடிகள் தான் சமஸ்கிருதம் இறந்தமொழி பயனற்ற மொழி என்று கூச்சலிட்டு வருகின்றனர் எமது இரண்டு கண்களில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற பேச்சுக்கு இடமில்லை அது போலவே சமஸ்கிருதமும் தமிழும் சைவர்களின் இரு கண்கள் போன்றன. இறைவனால் அருளப்பட்ட வேதம்,சிவாகமங்கள் வடமொழியில் உள்ளன. அருளாளர்கள் அருளிய பன்னிருதிருமுறைகள்,பதின்நான்கு சாஸ்திரங்கள் தமிழில் உள்ளன.
“ஆரியமும் செந்தமிழும்……” (திருவள்ளுவமாலை) “இருமொழிக்கு கண்ணுதலார் …….” (காஞ்சிபுராணம்) பாடல்களின் மூலம் இவ்விரு மொழிகளுமே சீரிய மொழி என்பது தெளிவாகிறது. இவ்விரண்டில் எது உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேச்சுக்கு இடமில்லை. வடமொழியை திருமுறைகள் போற்றுகின்றன. பன்னிரு திருமுறையில் பல எண்ணிலடங்கா வடமொழிச் சொற்கள் உள்ளன. மேலும் வடமொழி என்ற மொழியின் பெயராலேயே போற்றப்பட்டுள்ளது. வடமொழி தமிழ்மொழி தவிர வேறெந்;த மொழியும் திருமுறையில் குறிப்பிடப்படவில்லை. திருநெறிய தமிழ் திருமுறைகளால் போற்றப்பட்டுள்ள உயர்ந்த செம்மொழிகள் இவ்விருமொழிகளாகும்.
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்……. ” என்று சுந்தரர் பெருமான் அருளுவார். நாள்தோறும் இனிமையான இசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தப் பெருமானே வடமொழி தமிழ்மொழி இரண்டையும் ஒருங்கே போற்றியிருத்தலே இவ்விரு மொழிகளுக்குமிடையிலான தொடர்பினை நன்கு தெளிவுபடுத்துகிறது.
சைவசமயத்தில் நம்பிக்கையற்ற கடவுள் மறுப்பு கொள்கையுடைய மற்றும் வேற நோக்கங்களையுடையவர்கள் தான் வடமொழியை இறந்த மொழி பயனற்ற மொழி என்று பழிக்கிறார்கள். திருநெறிய தமிழாகிய திருமுறைகளால் போற்றுபவர்களே வடமொழியை இவ்வாறு கூறுவது மிகவும் கொடுமையானது. இது கலியின் கொடுமை என்று தான் கூற வேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
“வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் …….” என்பது அப்பர் தேவாரம். வடமொழி தமிழ்மொழி என்ற இரண்டில் எதை நிந்தித்தாலும் அது நம் ஈசனையே நிந்தித்ததற்கு சமனாகும். சமயகுரவர்களை நம் தலைவர்களாகக் கொண்டு அவர்கள் தம் வாக்கினுக்கு கட்டுப்பட்டு சைவப்பணியாற்றும் உண்மைச்சைவர்கள் அதுபோல நிந்திக்கமாட்டார்கள் ஆகவே இருமொழிகளையும் போற்றி பேணுவோமாக.
நன்றி

1 comment:


  1. Wonderful article....To get more information about Aanmeegam news visit here Maalaimalar

    ReplyDelete