Saturday, October 24, 2015

கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சு 1 நிமிடத்தில் ஓடுகின்றது

உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் 'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'! அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும். கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல் உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது. எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே அது இதற்காகத் தான்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)} 

No comments:

Post a Comment