Thursday, October 15, 2015

மகாபாரதப்போரில் ‘பீஷ்மர்’ வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரில் ‘பீஷ்மர்’ வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்:
மகாபாரதபோரில் கௌரவப்படைகளுக்கு தலைமைத்தாங்கியவர், பீஷ்மர் ஆவார். இவரேதான் மகாபாரப்போரில் விதிகளை வகுத்தார் . இதற்கு
கௌர‍வர் மற்றும் பாண்டவர்களும் அவர்களின் கூட்ட‍ணி படைக ளும் கட்டுப்பட்ட‍ன•
போர் விதிமுறைகள் வகுத்தல்
கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரைமட்டுமே போரிடவேண் டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர் கள் காக்க வேண்டும்.
காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்,
அதுபோல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்த மது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.
பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண் டவப் படையினரும் முதலில் ஏற்றுக் கொண்டாலும் இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு படைகளும் கடைப்பிடிக்கவில்லை.

No comments:

Post a Comment