Friday, October 16, 2015

மெழுகுவர்த்தியால் குத்து விளக்கை ஏற்றுவது சரியா?

வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறோம். அதனை தானாகவே அணையவிடாமல் ஒரு மலரினால் அமைதிப் பெறச் செய்ய வேண்டும்.
*இரும்பு கலந்த எவர்சில்வர் விளக்குகளை பூஜை அறையில் பயன்படுத்தக்கூடாது.
விளக்குகளில் பல வகை உள்ளன.
* விலக்கில் பலவகை
1. நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு - குத்து விளக்கு.
2. தொங்கவிடப் பட்டிருக்கும் விளக்கு - தூக்கு விளக்கு.
3. கைகளில் தூக்கிச் செல்லும் விளக்கு - கை விளக்கு.
4. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு - தூண்டா மணி விளக்கு.
5. பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் விளக்கு - பாவை விளக்கு.
மெழுகுவர்த்தியால் குத்து விளக்கை ஏற்றுவது சரியா?
தீபத்தை ஜோதியால் ஏற்ற வேண்டும். இந்த ஜோதியை (அக்னியை) உருவாக்குவதில்பல விதம் உண்டு. முன் காலத்தில் மிகப்பெரிய யாகங்கள். கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் ஹோமம் செய்ய அக்னியை உருவாக்கும்போது, தீக்குச்சியால் உராய்ந்து அக்னியை உருவாக்குவதில்லை. அரணீ என்னும் நன்கு காயந்த அரச மரக்கட்டைகளை ஒன்றுக்கொன்று உராய்ந்து அதிலிருந்துவெளிப்படும் அக்னியை ஹோமகுண்டத்தில் வைத்து ஹோமங்களைச் செய்யவார்கள்.
தற்போதும்கூட சில இடங்களில் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் போது, புத்தம் புதிய அடுப்பில் புது பாத்திரத்தில் பசும்பாலை வைத்துக் காய்ச்சும்போது முதன் முதலாக அடுப்பைப் பற்ற வைக்கும்போது, தீக்குச்சியால் அடுப்பை ஏற்றாமல் முறையாக கிரகப்பிரவேச (வாஸ்து) ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து நெருப்பை எடுத்து வந்து அடுப்பைப் பற்ற வைத்து பாலைக் காய்ச்சுவார்கள்.
இவ்விதம் பார்க்கும்போது சில கெமிக்கல்களால் உருவாக்கப்பட்ட தீக்குச்சியால் நேரடியாக தெய்வ சன்னிதியில் தீபம் (விளக்கு) ஏற்றுவது சரியல்ல. தீக்குச்சியைப் போலவே மெழுகுவர்த்தி என்பதும் ஒரு விதமான கெமிக்கல் (வேதிப்பொருள்) கலந்த சாதனம்தான் ஆகவே, நேரடியாக தீக்குச்சியாலோ மெழுகுவர்த்தியாலோ வீட்டு பூஜையறையில், இறைவன் சன்னிதியில் தீபங்களை ஏற்றுக்கூடாது. எனவே, தெய்வ சன்னதியில் தீபம் ஏற்றும் முன்பாக, முதலில் ஒரு தீபத்தை ( தீக்குச்சியால்) ஏற்றிக் கொண்டு, அந்த தீபத்தால் இறைவன் சன்னிதியில் உள்ள தீபங்களை ஏற்றுவதே சிறந்தது.
ஆனால் ஒரு சில பொது நிகழ்ச்சிகளைத் துவங்கும் போதும் வீட்டு வாசலில் அழகுக்காகவும் ஏற்றி வைக்கப்படும் தீபத்தை( விளக்கை) தாராளமாக தீக்குச்சி அல்லது மெழுகு வர்த்தியால் ஏற்றலாம். ஏனென்றால் இவ்விதம் ஏற்றப்படும் தீபத்துக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதால் இது தவறு என்று சொல்ல முடியாது.

No comments:

Post a Comment