Tuesday, October 13, 2015

ஆலயங்களுக்கு‬ செல்பவர்கள் ஏன் தங்கள் ‪#‎காலணிகளை_வெளியில்‬கழற்றி விட்டு

இந்துக்களின் ‪#‎ஆலயங்களுக்கு‬ செல்பவர்கள் ஏன் ஆலயத்தின் உள்ளே செல்லும் முன் தங்கள் ‪#‎காலணிகளை_வெளியில்‬கழற்றி விட்டு செல்லும் செயலுக்கு ஏதேனும் அறிவியல் விளக்கம் உள்ளதா?
பொதுவாக மந்திரங்களும், பூஜைகளும் தினந்தோறும் தவறாமல் நடைபெறும் ஆலயங்களில் அதிகளவில்‪#‎பிரபஞ்ச_அதிர்வலைகள்‬ உருவாகும். இதனாலேயே நாம் ஆலயத்தின் உள்ளே சென்றவுடன் ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்கொள்வதாக பெரும்பாலும் உணர்கிறோம்.
இந்த அதிர்வலைகள் மூலம் உருவாகும் அதிகப்படியான ஆற்றலை நம் உடல் எப்பொழுதும் தாங்காது. எனவே இந்த ஆற்றல் காலணிகள் இல்லாத உடம்பில் பாயும்போது, அதை அப்படியே தரையின் வழியே பூமிக்கு செலுத்தி விட முடிகிறது.
இப்பண்பை நாம் இடிதாங்கியில் காணமுடியும். வானில் தோன்றும் லட்சக்கணக்கான மின் அழுத்தம் வாய்ந்த மின்சார ஆற்றலை கொண்ட இடியையும், மின்னலையும் இடிதாங்கி மூலம் கடத்தி பூமிக்கு செம்புக் கம்பி மூலம் பாய செய்கிறோம். எனவே இடி, மின்னல் மூலம் ஏற்படும் பேராபாத்தை இடிதாங்கி பெருமளவில் குறைக்கிறது.
இதேபோல் நம் உடலில் தோன்றும் ஆற்றலை நம் கால்கள் வழியே கடத்தி பூமிக்கு செல்ல விடுவதால் நமக்கு எந்த இடரும் ஏற்படாமல் நாம் பாதுக்காகப்படுகிறோம்.
நாம் காலணியை அணிந்து கொண்டிருந்தால் இந்த ஆற்றலை நம் உடலில் பரவ விட்டு அதனால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த சூட்சுமத்தை அறிந்த ஞானிகள் ஆலயத்திற்கு செல்லும் முன் காலணிகளை வெளியில் விட்டு செல்லும்படி விதியை அமைத்தனர்.
ஆனால் அந்த விதி அறிவியல் ரீதியாக நம்மை எவ்வாறு காக்கிறது என்று பார்க்கும் பொழுது நம் முன்னோர்கள் கூறியிருக்கும் அநேக விதிகளுக்கு பின் ஏதேனும் ஆழமான அறிவியல் சிந்தனை இருப்பதை உணரமுடிகிறது.
இதுவே பண்டைய இந்திய அறிவியலின் தன்மையாக விளங்கியது.

No comments:

Post a Comment