Thursday, June 16, 2016

திருவாசியின் இரு பக்கங்களிலும் உள்ள மகரங்கள்

மகரயாழி----------------------------------------------------------------------------------------''''''''---------
திருவாசியின் இரு பக்கங்களிலும் உள்ள மகரங்கள் தனிப் பொருளுடைய கற்பனை வடிவம். மீன் உடலும்,யானைத் துதிக்கையும்,சிம்மக் கால்களும், குரங்கின் கண்களும்,பன்றியின் காதுகளும்,கோரைப் பற்களும்,பறவையின் இறக்கைகளும், பலவகை இலை , தழைகளும் கொண்ட வாலும் உடைய ஓர் உருவம்.இதை எந்த இனத்தில்சேர்ப்பது என்பதை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. இது பல்லுயிரனங்களின் கூட்டு. இது குழப்ப நிலையை - பிரளயக் காலத்துக் குழம்பிய நிலையைக் காட்டும். இதன் வாயிலிருந்தே கட்டு மாலைகள், சுடர்கள்,முத்துத் தாமங்கள் வெளிவருவதாக உளதல்லவா? இது, லயத்திலிருந்தே பிரபஞ்சம் தோன்றியது என்பதை காட்டும். திருவாசியின் உச்சியில் உள்ள நாசித்தலையானது, இளித்த வாயும், உருண்ட விழிகளும், கோரைப் பற்களும் கொண்டு அமையும், இது உலகம் தோன்றி வளர்ந்து பராக்கிரம நிலையின் உச்சக்கட்டத்தைக் காட்டும். அந் நிலையிலிருந்து பிரபஞ்சப் பொருள்கள் அனைத்தும் சாய்ந்து, சரிந்து, மீண்டும் மகர வாயில் அதாவது லயநிலை அடைகிறது. இதற்கு நாயகமாக இறைவன் உள்ளான் என்ற கருத்தையுணர்த்த கடவுட்படிமத்தின் பின்னணியில் இது வைக்கப்படுகிறது.
ஆனந்த நடம் புரியும் நடராஜப் பெருமானின் திருவாசியில் நாசித்தலை அமைப்பதில்லை. திருவாசியின் விலிம்பிள் தீச்சுடர்களே வரிசையாக அமைந்து விளங்கும். இத் திருவாசி, ஓங்கார வடிவினதென்ற கருத்தையுணர்த்தும் . வட்டவடிவமான இத் திருவாசி உலகத்தை யுனர்த்துகிறது. அதற்குள் காணப்படும் பரம்பொருள் அண்டசராசரம் அனைத்தின் உள்ளிருந்து அனைத்தயும் இயக்கி ஆட்டிக் கொண்டிருக்கிறது என்ற தத்துவத்தை உணர்த்தும்.
மேலுள்ள சிற்பம் உணர்த்துவது குபேரன் போன்று பொருளிருப்பினும் காலம் நம் கையில் இல்லை

No comments:

Post a Comment