Tuesday, February 28, 2012

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?


குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

Friday, February 24, 2012

மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு


தாமரை ஏழு நாள்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருஷம் வைத்து பூஜிக்கலாம் ஒருமுறை அர்ச்சனை செய்த துளசி, வில்வம், கரு ஊமத்தை, நீலோத்பலம் ஆகியவற்றைப் பொன் மலரைப் போல் கழுவிச் சாற்றலாம் என்று சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.
பறித்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ, புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர் பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஆகாதவை

லிங்க வகைகள்/ சிவராத்திரி


புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும்
பச்சரிசி லிங்கம் - திரவிய தரும்
அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும்
கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும்
வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும்
விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும்
சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும்
புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும்
சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும்
மாவு லிங்கம் - உடல் வலிமை தரும்
பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும்
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
களிமண் லிங்கம்- மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம் 

நான்கு ஜாம வழிபாட்டுக்குரிய திரவியங்கள்

முதல் ஜாமம்:
அபிஷேகம்-பஞ்ச கவ்வியம்
அலங்காரம்-வில்வம்
அர்ச்சனை -தாமரை
நிவேதனம் -பாற்சாதம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம். சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்
புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை
ஒளி - புஷ்பதீபம்
இரண்டாம் ஜாமம்:
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரை பொங்கல்
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம், கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி - நட்சத்திர தீபம்
மூன்றாம் ஜாமம்:
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள் அன்னம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
புகை - மேகம், கருங்குங்கிலியம்
ஒளி - ஐந்துமுக தீபம்
நான்காம் ஜாமம்:
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை -நந்தியாவட்டை
நிவேதனம் -வெண்சாதம்
பட்டு - நீலப்பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம், போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தனம்
புகை - கற்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று தீபம் 

நான்கு ஜாமம் விவரம்

சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை
சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி வரை சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.
அன்ன ஆகாரம் இன்றி பால், பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.
சிவராத்திரி தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்ப மயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும். சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகுவிரைவில் முடியும்


சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1.சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2.மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3.ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5.நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6.சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7.எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8.சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9.அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10.விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.  
1.சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.
2.சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.
3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.
6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.
7.கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.
8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
9. கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
12.சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.
13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.
14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.
15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.
16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.
17.அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.
18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.
19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.
20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.
21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.
22. தேங்காய் எண்ணெய் வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணெய் சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும். 23. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.
24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.
25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.
26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பார்கள்.
27. உமாதேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.
28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும்.
29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.
30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.
31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.
32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.
33. சிவனுக்கு ஆடை தோல்.
34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.
35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.
36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.
37. தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.
39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.
40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.
41. மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் உள்ளது. சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
42. சிவராத்திரியன்று திருவிடைமருதூரில் ஈசனை வழிபட்டால் ருத்ரபாதம் கிடைக்கும்.
43. சிவராத்திரியன்று கோவிலில் சென்று வழிபட்டால் சொர்க்கலோகம் கிடைக்கும்.
44. ஒருவர் தொடர்ந்து 24 ஆண்டுகள் மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால், அவரது 21 தலைமுறையினர் நற்பலன்களைப் பெறுவார்கள். 45. திருவைகாவூரில் சிவராத்திரியன்று ஈசன் திருவீதியுலாவை கண்டு தரிசித்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் விலகும்.
46. மகா சிவராத்திரி செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை வந்தால், அன்று சிவபூஜை செய்து தானம் செய்தால் 3 கோடி மடங்கு புண்ணியம் தரும்.
47. சிவராத்திரியன்று ருத்ராட்சம், சிவலிங்கம், விபூதிப்பை தானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
48. மகா சிவராத்திரி : பாற்கடலில் தோன்றிய நஞ்சைச் சிவபெருமான் உண்டு கண்டம் கருத்தனால் நீலக்கண்டன் என்ற திருநாமம் பெற்றார். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணம் சொல்லுகிறது.
49. பார்வதி சிவபெருமான் கண்களை மூட உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் வேண்ட நெற்றிக் கண்ணைத் திறந்தார். இந்நாள் சிவராத்திரி ஆகும். இதனை அப்பர் கூறியுள்ளார்.
50. மோட்சம் அடைய நான்கு வழிகள்:-
1. சிவனை அர்ச்சிப்பது.
2. ஸ்ரீருத்ரம் பாடலைப் பாராயணம் செய்வது
3. அஷ்டமி திதி திங்களில் விரமத் இருப்பது.
4. காசியில் மரணம் அடைவது. இந்த நான்கு வழிகளிலும் நடக்க சிவராத்திரியில் சிவபூசை செய்ய வேண்டும். 


சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1.சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2.மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3.ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5.நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6.சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7.எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8.சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9.அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10.விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.  


சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.


1. நித்திய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
2. பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.
3. மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
4. யோக சிவராத்திரி:
சோமவார நாளன்று (திங்கட் கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
5. மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி.
இந்த சதுர்த்தசி கிருஷ்ண பட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பௌர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகாசிவராத்திரி.
5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும். மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. 

சிவராத்திரிக்கு நித்திரை விழிப்பது ஏன்?


சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.
உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது. 

Wednesday, February 22, 2012

சிவனை பித்தா என்பது ஏன்

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். இறைவனை இவர் "பித்தன்' என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா?
சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். ""ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?'' என்று சுந்தரர் கடிந்து கொண்டார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். ""என்னை பித்தன் என்று திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு,'' என்றார்.
சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்த புஷ்டியைப் புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் "பித்தன்' என்றார் சுந்தரர். 

நிர்மால்ய தோஷம் கிடையாத வில்வ இலை

வில்வம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை "வில்வ தளம்' என்பர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல், இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

துவாரம் உள்ள விதை ருத்ராட்சம்

சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். "அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.



ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால், இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இறைவன் இப்படி செய்திருக்கிறார். ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. இது வியாதியை போக்கும் தன்மை கொண்டது. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். உஷ்ணம் தணியும்.

"பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை


நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் "கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து' என்பது பொருள். ""பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. பரப்பிரம்மமே ஐம்பெரும் பஞ்சபூதங்கள்'' என்று பிரஸ்ன உபநிஷதம் கூறுகிறது. இயற்கையே இறைவன் என்னும் கோட்பாடின் அடிப்படையில் இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூதத்தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய தலங்களாகும். இதேபோல, சிவபெருமானுக்கு பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளாக சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

 விலங்கு முகத்தோடு இறைவனின் திருவடிவங்கள் இருப்பது சரியானது தானா?

சர்வ வியாபியான கடவுள் எல்லா இடங்களிலும், உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். மனிதன் மட்டுமல்லாமல் விலங்கு, பறவை அனைத்தும் இறையம்சமே. அந்த அடிப்படையில் யானை முக விநாயகர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என்ற நிலையில் திருமாலையும், குரங்கு முக ஆஞ்சநேயரையும் கடவுளாக வழிபடுகிறோம்.

* விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

பூண்டு, வெங்காயம் போன்றவை நம் காம, குரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்பதால் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் வரையறை செய்தனர். அப்போது தான் மனம் இறைசிந்தனையில் முழுமையாக ஈடுபடும்.

* கோயில்களில் விழா நடத்துவதன் நோக்கம் என்ன?

இறையருள் பெற வேண்டும் என்பது தான். "பெருங்கருணை பேராறே!'' என்று சிவனைப் போற்றுவார் மாணிக்கவாசகர். விழாக்காலத்தில் அவன் நம்மைத் தேடி வருகிறான். அதுவும் நமக்காகவே. பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

* கந்தசஷ்டி கவசத்தில் "ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு' என வருகிறதே. அதன் பொருள் என்ன?

ஒருநாளில் 36முறை பாராயணம் செய்யவேண்டும் என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். அண்மைக்காலத்தில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள், இதனை தினமும் 36 முறை பாராயணம் செய்ததாகச் சொல்வர்.

* குத்துவிளக்கு எத்திசையில் ஏற்ற வேண்டும்?

விளக்கேற்ற கிழக்கு,மேற்கு, வடக்கு உகந்தவை. தெற்கு கூடாது.

** கடவுளை வழிபடும் போது அமைதியாக தியானிப்பது, பஜனை பாட்டு என்று ஆரவாரிப்பது எது பலன் தரும்?

"நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசை செய்ய வாராய் பராபரமே'' என்று தாயுமானவர் பராபரக்கண்ணியில் மனக்கோயிலில் சிவனை பூஜிக்கிறார். ""கொட்டு ஆட்டு பாட்டாகி நின்றாய் போற்றி'' என்று திருமுறைகள் ஆட்டம் பாட்டமும் ஆண்டவனும் வேறு வேறல்ல என்று சிவனைக் குறிப்பிடுகிறது. இரண்டுமே பலன் தரும். உங்களின் விருப்பத்தைப் பொறுத்து வழிபடலாம். 

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை


* தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.
* மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கே, நரகத்துக்கோ செல்ல முடியும்.
* வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன், எப்பொழுதும் இன்பமாயிருப்பான்.
* எப்படி நல்ல இசையால் மான், பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோ, அதுபோல பணிவாகவும், இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.
* பிறரை மதிக்கும் தன்மை, நேர்மை, அறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்.
* கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.
* உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பதட்டப்படாதே, சங்கடப்படாதே, நிறைந்த கடலைப் போல இரு. உனக்கு கிடைத்துள்ள பதவி, பணத்தால் பெருமையோ, அகம்பாவமோ கொள்ளாதே.
* பொறுமையாக, அமைதியாக, நடுநிலையாக, @நர்மையாக இரு. நவரத்தினம் போல் ஜொலிப்பாய்.
* "நான் மட்டுமே துன்பப்படுகிறேன், தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்' என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதே. உலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
*எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள், கொக்குகள் வெளிப்படுகின்றனவோ, அதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன், மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.
* சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள், சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.
* பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.
* பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறது. இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.
* கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதே. வருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லை. நிகழ்காலத்தில் நல்லதைச் செய், வாழ்ந்து காட்டு. அதுவே நிஜம்.
* வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காது. இவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோ, பணமோ, உறவினர்களோ உதவியும் செய்வதில்லை. உன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும். 

Monday, February 20, 2012

ஒளி மயமான பாதை


முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்என்ற நம்பிக்கையில், இரவில் காட்டைக்கடக்க , ‘’ தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக வேண்டும் ‘’என்ற வரத்தினை கேட்டார் ஒருவர்.

அதாவது, முனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும் உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார்.
ஆனால் முனிவரோ, ஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார். ஏதோ, மாய மந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரே, இது பத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என்ற சந்தேக்த்தை முனிவரிடம் கேட்டே விட்டார்.
முனிவர், “அப்பனே, நான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும், ஆனால் அதனால் உனக்கு ஒன்றும் பயனில்லை. எப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும். இந்த விளக்கைப் பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல் சென்றடைவாய்என்றார்.
நம்மில் பலரும் இது போலத்தான். எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனை. நம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டு விட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம், கடவுளிடமும் சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம்.
நம் கண் முன் உள்ளதை, நம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாத, அறியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்து கனவு கண்டுகொண்டோ, கவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாது. இன்று நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்ய வேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து ,வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்

குசேலர்


குசேலர்

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.
சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.
இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.
குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.
பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.
கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.
இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.
திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், “செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்என வேண்டினார்.
இதற்கு திருமால், “குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!” என்று வரமளித்து மறைந்தார்.
அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.

ஸ்ரீ ராமானுஜர்


ஸ்ரீ ராமானுஜர்

பாடம் நடந்து கொண்டிருந்தது. குரு போதித்துக் கொண்டிருந்தார்..
கார்மேகக் கண்ணனைப் பற்றி வர்ணிக்கும் ஒரு ஸ்லோகம்தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மட்சிணிஎன வந்தது.
குருவானவர் அதை வர்ணிக்கும் வேளையில் கப்யாஸம் என்னும் சொல்லுக்குக்குரங்கின் ஆசனவாய்என்ற அர்த்தம் வரும் என விவரித்து விட்டு,
பகவானின் கண்களைக் குரங்கின் ஆசனவாய்க்கு ஒப்பிட்டார்.
கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சீடனுக்குக் கண்ணீர் பொங்கி வந்தது.
கண்ணீர் விட்டு அழுதான். குருவானவர் தன் பாடம் அவ்வளவு உருக்கமாய் இருந்ததாய் நினைத்தார்.
ஆனால் சிஷ்யன் விம்மி, விம்மி அழவே குருவுக்குச் சந்தேகமாய் இருந்தது. மற்றவர்களை அனுப்பி விட்டு அந்தச் சீடனிடம்,
அப்பனே, ஏன் அழுகின்றாய்? என்ன நடந்தது? இன்றைய பாடம் உனக்குப் புரியவில்லை என்றால் விட்டு விடு!
பின்பொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்,” என்று சொன்னார்.
சீடனோ வணக்கத்துடனேயே , “குருவே, தாங்கள் அதி மேதாவி, எனக்கு அதில் சந்தேகமே இல்லை,
ஆனால் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கின்றது. என்னவென்று புரியவில்லை.” என்று பணிவுடனேயே தெரிவித்தான்.
குருவுக்குக் கோபம் ஏறிக் கொண்டிருந்தது. பாடம் புரிந்து கொள்ள முடியாதவன் இங்கே வந்து ஏதோ உளறுகின்றான் என்றே நினைத்துக் கொண்டார்.
சீடனைப் பார்த்து, “என்ன, விஷயம்? சொல்லு, பார்ப்போம், அந்த வேடிக்கையையும்!” எனக் கேலியாகவே சொன்னார். சீடனோ குருவைப் பார்த்து,
இப்போது தாங்கள் நடத்திய சாந்தோக்ய உபநிடத்தின் முதல் அத்தியாயம்,
ஆறாவது பகுதியின் ஏழாவது மந்திரப் பாடத்தில் தான், “கப்யாஸம்என்னும் சொல்லுக்குத் தாங்கள் சொன்ன அர்த்தம் தான்,
கொஞ்சம் தவறோ என்று மனதில் பட்டது!” மிகுந்த வணக்கத்துடனும், பணிவுடனுமே சொன்னார் சீடர்.
என்ன, நான் சொல்லும் அர்த்தத்தில் உனக்குச் ச்ந்தேகமா? வேறு அர்த்தம் சொல்லப் போகின்றாயா? என்ன துணிச்சல்?”
எனக் கண்கள் சிவக்கக் கேட்கின்றார்.
குருவே! பரமாத்வாவின் கண்களைத் தாங்கள் குரங்கின் ஆசனவாயோடு ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமே அல்ல!
மேலும் கப்யாஸம் என்னும் சொல்லைப் பிரிப்பது எவ்வாறெனில் தாங்கள் அனுமதி அளித்தால் சொல்லுகின்றேன்!”
என்று வணக்கத்துடனேயே சீடர் கேட்கின்றார். குருவும் கூறச் சொல்லி ஆணையிடச் சீடன் சொல்கின்றார்:”
குருவேஆஸஎன்றால் மலருதல் என்று அர்த்தம் வரும் இல்லையா? “கப்யாஸம்என்றால்
ஆதவனால் மலர்ந்தது என்று தானே பொருள் கொள்ள முடியும்? சகல கல்யாண குணங்களும் நிறைந்திருக்கும்
எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனை கண்டதுமே அன்றாடம் மலரும் தாமரையைப் போல்
அல்லவோ இருக்க வேண்டும்? இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கொள்வது தானே சரியானது?
மாறாகக் குரங்கின் ஆசனவாயோடு பொருள் கொள்வது சரியாக இருக்காது என்பதே என் தாழ்மையான கருத்து!”
எனத் தெரிவிக்கின்றார்.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய குருவும் சீடனை அணைத்துக் கொண்டு தன் தவற்றுக்கு வருந்துகின்றார்.
மிக, மிகப் பெருந்தன்மையோடேயே அந்தச் சீடன் தன் தவற்றைத் திருத்தியமைக்கு அனைவரிடமும் சொல்லி ஆனந்தமும்,
பெருமையும் கொள்கின்றார். சீடனின் புகழோ உலகெங்கும் பரவியதோடல்லாமல், ஒரு மாபெரும் தத்துவத்தையே இவ்வுலகுக்குத் தருகின்றான்.
அந்த சீடன் தான் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்களை இயற்றியவரும்,
வேதாந்த நெறிகளைக் காவிய நடையில் மெருகூட்டிவிசிஷ்டாத்வைதம்என்னும் தத்துவ தரிசனமாய் உலகுக்கு ஈந்தவரும் ஆன ஸ்ரீ ராமானுஜாச்சாரியார்.
குருவானவரின் பெருந்தன்மையும், அன்பும், மன்னிக்கும் குணமுமே சீடனையும் பெருமை கொள்ளச் செய்யும் என்பது இங்கே நிதரிசனம் ஆகி விட்டது