Friday, October 18, 2013

சுகப் பிரசவம் அடைய பாட வேண்டிய பதிகம் !!

சுகப் பிரசவம் அடைய பாட வேண்டிய பதிகம் !!

ஒரு பெண் தாயாவது, உண்மையிலேயே ஆண்டவன் அருள் இருந்தால்தான். ஒரு குழந்தை ஜனனிக்க தாய், தந்தை இருவர் போதுமே , ஆண்டவன் அருள் எங்கு இருந்து வந்தது என்று வியாக்கியானம் பேசுபவர்கள் இருக்கலாம்.

குழந்தை வரத்திற்காக தவிக்கும் தம்பதிகளைப் பார்த்தபிறகும், அவர்கள் இவ்வாறு கேட்பது எந்தவகை நியாயமோ தெரியவில்லை. மழலையின் கொஞ்சு மொழி ஒலிக்காத வீடு , எவ்வளவு வேதனையானது என்பது - குழந்தை இல்லாமல் வாடி வதங்கியவர்களுக்குத்தான் புரியும்....

அது ஒருபுறம் இருக்கட்டும். பிரசவம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுப்பதற்கு சமம். குழந்தையை சுமக்கும் இந்த ஒன்பது மாதங்களிலும் , அவளையும் ஒரு குழந்தை போலே தான் பார்த்துக் கொள்ள வேண்டி வரும். அதன் பிறகு பிரசவம். நல்லவிதமாக தாயும் , சேயும் பிரிந்து வந்துவிட்டால் - ஆனந்தமோ ஆனந்தம்.

இந்த காலத்தில் , சிசேரியன் பிரசவம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது . மருத்துவ வல்லுனர்கள் இதை நல்ல விதமாக செய்து முடிக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும், அவரால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்களே ஒழிய , கடைசியில் அவர்களும் நம்புவது , இறைவன் என்று நாம் சொல்லும் அந்த பரம்பொருளின் கிருபையைத்தான்.

அப்படிப் பட்ட அந்த இறைவனின் அருளை உங்களுக்கு அளிக்க வல்லதுதான் இந்த பதிகம். இது தம்பதிகளோ அல்லது , தம்பதிகளின் பெற்றோர்களோ - மனமுருகி இறைவனை வேண்டிப் பாட வேண்டிய பதிகம். கருவுற்ற பெண்களே இதைப் பாடுவது மிக மிக நன்று.
குல தெய்வ ஆலயங்களிலோ, சிவ ஆலயங்களிலோ , அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து - உங்கள் பூஜை அறையிலோ - தினமும் காலையும், மாலையும் - சந்தியா வேளைகளில் - காயத்ரி மந்திரம் ஜெபித்துப் பின் இந்த பதிகம் பாடவும்.

தெய்வ அனுக்கிரகத்துடன் உங்களுக்கு சுகப் பிரசவம் ஆவது 100 % உறுதி. பிறக்கும் குழந்தையும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானாம் இஷ்ட தாயக |
ஸுகந்தி குந்தலா நாத ஸுக ப்ரசவ ம்ருச்சந்து: ||

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலின் |
சம்போ ஸுக ப்ரஸவ க்ருத பாரமே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே ||

பிறக்கும் குழந்தைக்கு - நல்ல மன வளம் கிடைப்பதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
பிரகலாதன், அபிமன்யு கதைகளில் வருவது போலே - குழந்தை தாயின் வயிற்றில்
இருக்கும்போதே,தாயின் மூலமாக, மனம் மூலமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகிறது. இந்த கால கட்டத்தில் ,
கர்ப்பிணிப் பெண்கள் மனம் நோகாமல் , நல்ல விஷயங்களை மட்டுமே நினைப்பதும்,
செய்வதும் உங்கள் குழந்தைக்கு நல்லது. பிரசவ காலத்தில், விஷ்ணு சஹஸ்ரநாமம்,
புருஷ சூக்தம், நாராயண சூக்தம் , வேத மந்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
அல்லது பெரிய புராணம், சிவ புராணம் படிக்கலாம். ராமாயணம், மகாபாரதம் ,
பாகவதம் படிக்கலாம்.

இந்த கால கட்டத்தில் , நீங்கள் கொடுக்கும் அறிவு ஊட்டமானது, அவர்கள் எதிர்காலத்தில்
எந்தவித இக்கட்டுகளையும், சமாளிக்க , யோசித்து முடிவெடுக்க , இறை வழிகாட்டுதல்
தங்கு தடையின்றி கிடைக்க வழிசெய்கிறது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்படைய, ஒரு நல்ல சமுதாயம் அமைய ,
நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.

1 comment:

  1. பதிகம் என்பதற்கு பதிலாக ஸ்லோகம் அல்லது ஸோஸ்திரம் எனவும்.
    பதிகம் என்பது பத்துப் பாடல்கள் கொண்டதாம். பதிகப் பலன் பதினொன்றாவதாக இருக்கலாம்.
    திருச்சிற்றம்பலம்

    ReplyDelete