Tuesday, January 6, 2015

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்)

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்)
நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்கு சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம். இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தை கடைபிடித்து வருகிறார்கள். இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மைவிட்டு மறைந்திருக்கலாம். மறந்தும் இருக்கலாம். அவற்றை ஞாபகபடுத்தவே, இந்த தொகுப்பு.
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு
பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா
நாம் ஒரு விஷயத்தை நங்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் இண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் இடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர். பித்ருக்களை இத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.
நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.
யாருக்கெல்லாம் திருப்தி?
ஸ்ரார்த்தம் செய்வதினால்:
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத
நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ள்வரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
பித்ருக்களின் அனுக்ரஹம்
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.
பித்ரு சாபம்
நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகு வருகின்றது. இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை. ச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.
மந்திரங்கள்
ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா? நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.
இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.
ஸ்ரார்த்த நியமம்
இரண்டாவடி ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் ஒறந்த அதே மாஅதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.
ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.
ஸ்ரார்த்தம் செய்யும் முறை
இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.
விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா? குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது.
சாதாரண் உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான
வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது. எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். [அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது. ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.
வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களை கீழே பார்போம்:
1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [ அவருக்கும் எல்லா தான பொருட்களும்].
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.
வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரண்த்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].
வசதியும், மனோபாவமும்
உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பது
விதி. இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்த
மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக்
கொள்வது அசட்டுத்தனம் அல்லவா? டிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற வைகளை கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்தவில்லை. இவர்கள் இதையெல்லாம் எங்கள்
ஆத்து பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா?
புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.
ஸ்த்ரீகள்
இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில்
சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற இத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும். புருஷர்களிடம் ச்ரத்தை
கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.
மொத்ததில் எல்லா வதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.
புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?
பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாஅமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ருஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது
வாக்கு]. தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி.
பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.
ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.
ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை?
ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு [அல்லது ஏதவது பாடசாலைக்கு] ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய்வதில்லை என்று
கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள். இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். [ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல்
மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ?] எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.
சில குறிப்புகள்
* ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் [ சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட] அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.
* வீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்து உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக்
கூடாது.
* சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள
சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்
படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நங்கு சாப்பிடும்படியாகவும் இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின்
ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.
* சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.
* சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம். பதார்த்தங்களை அவர்கள் சமீபம்
கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது…..இந்த வடை சூடாக உள்ளது…..இன்னுமொன்று போட்டுக்கோங்கோ ….என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். [அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது].
* சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.
* கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.
* ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.
* சமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.
* கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்திதரக் கூடியது [ எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடிக்கக் கூடாது].
* பழத்தைத் தவிர பற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.
* அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.
* மாத்யாஹ்னிகம் செய்து பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடிப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை [2-வது ஸ்நானம்] பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து
உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.
* அபிச்ரவணம் சொல்பவர் கிடைகாவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.
* ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.
* ஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.
* இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.
* கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.
* தினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.
* ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து
மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.
* கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய
வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
* ஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு [ மகனாக இருந்தாலும் தோஷமில்லை] ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.
கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும்
சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.
சாஸ்த்திர விரோதமானது.
ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முரற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்தவிலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து [பெரிய நக்ஷத்ர
ஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.
ஔபாஸன அக்னி
ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு
மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கின்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் [ஹோமத்துடன்] செய்ய வேண்டும். [பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு படிலாக ஸமிதாதானம்
சொல்லப்பட்டுள்ளது].
நம்பிக்கை
அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை]. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்தியப் படியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக்கூடாது. அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.
சம்பாவனை
ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம்
இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புடியும். இது எவ்வளவு அபத்தமென்று. சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா? அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்மாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.
சாப்பிடும் ப்ராம்ஹணாள்
எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு
வரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!
நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருநவர்கள்தானே! ஆனால் இன்று நஸ்ம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு? ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.
வைதீகம்
வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக
முக்கியமான மந்திரங்களையாவது. நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும்.
கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பைடு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும். ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில்
வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.
கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை

Monday, January 5, 2015

பஞ்சகச்சம் பிராமணர்களின் உடையா?

பஞ்சகச்சம் பிராமணர்களின் உடையா?
பஞ்ச கச்சம்/ கச்சம் சில விவாதங்கள்:
தமிழ் நாட்டில் சில பொதுப் புரிதல்கள் உண்டு. நாம் நினைக்கும் சில கருத்துக்களுக்கு மாற்றாக சில எண்ணங்களை கொண்டு இருந்தால் உடனே அவன் பார்ப்பான்.அவன் அப்படித்தான் இருப்பான் என்று பொத்தம் பொதுவாகக் ஏசிவிடுவார்கள்.. இந்த போக்குகளை இணையத்திலும் இதை நீங்கள் பார்க்கலாம். அப்படி சமீபத்தில் பார்த்த ஒன்று. பிராமணர்கள் தான் பஞ்சகச்சம் கட்டுகிறார்கள் என்றும், 'வேறு சில சாதிக்காரர்களும் பஞ்சகச்சம் கட்டுகிறார்கள்,எதற்கு என்றால் பிராமணர்களோடு உறவாடுவதற்கும், ஈஷிக்கொள்வதற்கும் தான்' என்று பஞ்சகச்சம் கட்டும் பிற ஜாதியினரையும் பார்ப்பனர்களின் அடிவருடிகள் என பிராமணர்கள் கட்டும் பஞ்சகச்ச உடையை விமர்சனம் செய்து செய்திகள் உலாவுகின்றன. சரி இந்த பஞ்சகச்சம் என்பது ஒரு ஜாதிக்காரர்களின் உடையா என்ற கேள்வி எழுந்த போது பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள நேர்ந்தது. அதாவது பஞ்சகச்சம் என்பது பாரதத்தின் பொதுவான உடைக்கலாச்சாரம். அது எந்த ஜாதியினருக்கும் தனியான உடைக் கலாச்சாரமாக இருக்கவில்லை என்பதே.
சில நண்பர்கள் சொன்னார்கள்… எதற்கு இந்த விவாதம் என்று? நண்பர்களே …நாம் பதில் கூறாமல் விட்டு தான் இன்று பல அபத்த வரலாறுகள் எழுதப்படுகின்றன. நான் முதலில் புரட்டியது முனைவர் பகவதி எழுதிய தமிழர் ஆடைகள்.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு.வழக்கம் போல சில ஆச்சரிய தகவல்கள்.
கச்சு என்ற வார்த்தை சங்க இலக்கியங்களிலே வருகிறது. ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழே கச்சம் அணிந்துள்ளனர். பெண்களின் மார்பு உடை கச்சு. இந்தியாவின் ஒரு காலத்திய பொது உடை கச்சம். தமிழகத்திலும் ஒரு காலத்தில் கச்சம் அணிந்துள்ளனர்.
முக்கியமாக போர் செய்யும் ஜாதிகள் அனைவரும் கச்சம் அணிந்துள்ளனர்.கொஞ்சம் நம் கோயில் சிற்பங்களை பார்த்தாலே தெரியுமே, நம் பண்டைய கால உடைகளை பற்றி. ஏன் போர் ஜாதிகள் கச்சம் அணிந்தனர்? குதிரையின் மீது ஏறுவதற்கும், ஓடுவதற்கும் சிறந்த உடை கச்சம். நாம் இப்போது கட்டுவது போல வேஷ்டியை கட்டிக் கொண்டு ஓடினால் தடுக்கி தான் விழ வ
இன்னும் தரவு வேண்டுமா? கொஞ்சம் இந்தியாவில் பயணம் செய்தாலே போதும். குறிப்பாக ஆந்திரம்,மகாராஷ்டிரம் பகுதிகளில் ஆண்கள், பெண்கள் இருவருமே கச்சம் வைத்து உடை அணிவர். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கச்சம் வைத்து உடை அணிகின்றனர். இவை ஒவ்வொரு பகுதிகளிலும் சில மாறுதல்களோடு அணிகின்றனர். பழைய கால ராணுவத்தின் கச்சம் வைத்த உடை இஸ்லாமியர்கள் வருகை பின்பு பைஜாமா ஆக மாறி, ஆங்கிலேயர் வருகை பின்பு பேண்ட், சட்டை ஆக மாறியது.
வேஷ்ட்டி அவிழாமலும் அதே நேரத்தில் நடப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற வாறு இருக்குமாறும் தரிக்கப்பட்ட உடை தான் பஞ்சகச்சம். இன்று அதையே 'பேண்ட்' , 'ட்ரவுசர்' என்று வெவ்வேறு வடிவங்களில் தைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
பாரதத்தில் பெண்களும் இதே போல கச்சம் அணிந்து தான் புடவை உடுத்தி இருக்கிறார்கள். பிராமணர்கள் மடிசார் என்ற பெயரிலும் மற்றவர்கள் வெவ்வேறு பெயரிலும் முன் கொசுவம், பின் கொசுவம் எல்லாம் வைத்து புடவை கட்டிக்கொள்வார்கள். இதுவும் கச்சம் கட்டிக்கொள்ளவது போலதான். கால்கள் தடுக்காமல் நடக்க துணியை லாவகமாக கட்டிக்கொள்ளும் கலை.
முரட்டுக்காளை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காளை அடக்க களத்தில் இறங்கும் போது தனது வேஷ்ட்டியை கச்சம் கட்டி இறங்குவார். ஆக கச்சம் கட்டிக் கொள்ளுதல் என்பது எந்த ஒரு ஜாதியினருக்கும் சொந்தமான உடை அல்ல. இது பாரதத்தின் பெருமை வாய்ந்த எல்லோருக்கும் பொதுவான ஒரு கலாச்சார உடை. அந்தக்காலத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் அரைமண்டைக் குடுமியாக இருந்து பின்னார் கிராப்புக்கு மாறினார்கள். எப்படி பிராமணர்கள் மட்டும் இன்னும் அந்த குடுமியை விடாமல் வைத்து வருகிறார்களோ அதே போலத்தான் அந்த காலத்தில் எல்லா ஜாதியினராலும் உடுக்கப்பட்டு வந்த கச்சை முறை வேஷ்ட்டி கட்டுதலை இன்றும் பிராமணர்கள் விடாமல் உடுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்றும் பிராமணர்கள், நாயிடுக்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், தெலுங்கு செட்டிக்கள் ஆகியோர் பஞ்ச கச்சம் உடையை அணியத்தான் செய்கின்றனர்.
நண்பர்களே…!! பஞ்சகச்சம் அணியும் பிற ஜாதியினர் பிராமணர்களுடன் ஈஷிக்கொள்வதற்காகத்தான் அணிகிறார்கள் என்றால் அமெரிக்காவில் ஒரு காலத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் அணிந்து வந்த ஜீன்ஸ் உடை இன்று இளைஞர்களின் பொது உடை.!!! எதற்கு, அமெரிக்காரன் உடன் ஈஷிக்கொள்வதற்க
குளிர் பிரதேசத்தில் அணியும் சூட், டையை இந்தியாவில் கொளுத்தும் வெய்யிலில் அணிகிறோம். பல நிறுவனங்களின் அலுவலக உடை பேண்ட், சட்டை, டை ஆகும். இதெல்லாம் நம் நாட்டின் பாரம்பரிய உடையா? நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஒவ்வாத வகையில் பிற நாட்டினரின் உடை வகைகளை அணிந்து கொள்ளத்தயாராகும் மடையர்கள் சொந்த நாட்டின் பாரம்பரிய உடைக்கு ஜாதிச்சாயம் பூசி அவமதிக்கிறார்கள்.
நண்பர்களே! ஆதாரங்கள் போதும் என நினைக்கிறேன். இந்தியாவின் ஒரு காலத்திய பொது உடை, கால மாற்றங்களில் மாறி வருகிறது. அவ்வளவே… இதில் சாதிக் காழ்ப்போ, பெருமையோ ஒன்றும் இல்லை 

Sunday, January 4, 2015

உண்மையான பக்தி உடையவன் யார்

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.
அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான்.
மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.
இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
"தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.
"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.
"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.
கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.
உண்மை புரிந்தது தேவதைகளுக்கு...
உங்களுக்கு

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா?

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா?
சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். பெரிய பணக்காரன்; அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், ஒரு நாடகத்திற்குச் சென்றான். அதில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்டு, அவளது வீட்டிலேயே தங்கி விட்டான்.
அந்த நடிகை, சாதுவனின் பணத்தைப் பறித்த பிறகு, அவனை விட்டு சென்றுவிட்டாள். மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன், வீட்டிற்குப் போகவில்லை. இழந்த பொருளை சம்பாதிக்க திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம் பட்டினம் வந்தனர். அவர் களுடன், வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசவே, அவனை அவர்களுக்குப் பிடித்து விட்டது. சாதுவனை தங்களுடன் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.
கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்து கப்பல் கவிழ்ந்தது. உடன் வந்தோரில் பலர், கடலில் மூழ்கி இறந்தனர். உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்ட சாதுவன், 'தான் இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்ட பெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே...' என நினைத்து, வருந்தினான்.
ஆதிரையோ, சிவ பக்தியும், கணவன் மேல் நீங்காத அன்பும் கொண்டவள். 'கணவன் எங்கே இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும்...' என்று, தினமும் வேண்டிக் கொள்வாள். இது நம் நாட்டுப் பெண்களின் பண்பாடு. அவளது பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரை ஒதுங்கியது.
ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிய செய்தியும் ஆதிரையை எட்டியது. கணவன் இறந்து விட்டான் என முடிவு செய்த ஆதிரை, அழுது புலம்பி, தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். 'இறைவா... அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வர வேண்டும்...' என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.
ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை; 'ஐயோ... நெருப்பு கூட தீண்ட முடியாத பாவியாகி போனேனே...' என கதறி அழுதாள். அப்போது வானில், 'அம்மா ஆதிரையே... கவலை வேண்டாம்; உன் கணவர் மீண்டும் வருவார்...' என்று அசரீரி கேட்டது.
இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை, காவலர் கள் அந்நாட்டு அரசரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை எடுத்துச் சொன்னான் சாதுவன். அவனை உபசரித்து, மது கொடுத்தார் அரசர். அதை ஏற்காமல், மது அருந்துதலின் தீமைகளை எடுத்துச் சொன்னான் சாதுவன்.
ஆனால், அரசரோ, 'நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தானே கடவுள் மதுவைப் படைத் திருக்கிறார்; அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?' என்று கேட்டார்.
'அரசே... மதுவின் மயக்கத் தால் தான், கட்டிய மனைவியை விட்டு, நடன மாதுவிடம் சிக்கி, பொன், பொருளை இழந்ததுடன் மானத்தையும் இழந்தேன். மது குடிப்பதால், மனம் தடுமாறும்; புத்தி சிந்திக்கும் திறனை இழக்கும். சண்டை உருவாகி, சில சமயம் அது கொலையிலும் முடியும். இம்மது மயக்கமே, மனைவியைத் தவிர பிற பெண்களுடனும் உறவு கொள்ள தூண்டும். இதன் விளைவாக பொருளை இழப்பதுடன், நம்முடைய குலக் கவுரவுமும், மானமும் போகும். இதை என் அனுபவம் எனக்கு உணர்த்தியது...' என்று மதுவின் தீமையை எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தி, மது பழக்கத்தை கைவிட்டார்.
அவரது உதவியுடன் நாடு திரும்பிய சாதுவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்ந்தான். அந்தக் கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். சிவபெருமான் அதை, தன் நட்சத்திரமாக ஏற்றதுடன், அந்நாளில் மகிழ்வுடன் நடனமாடி, 'நடராஜர்' எனும் திருநாமமும் பெற்றார்.
ஆண்களே... மதுவும், பிற பெண்களுடனான உறவும் வேண்டாம். அது, உங்கள் பொருளையும், மானத்தையும் அழிக்கும். பெண்களே... தவறு செய்யும் கணவரைப் பொறுமையுடன் திருத்துங்கள்; வாழ்க்கை இனிக்கும்.

Friday, January 2, 2015

ஆலயமும் அர்ச்சகர்களும்...

ஆலயமும் அர்ச்சகர்களும்...
ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.
இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.
மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும், ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.
ஆலய வழிபட்டின் நோக்கம்.
सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.

சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..
பொருள்.
{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.
அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?
சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.
“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.
परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:
பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.
எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}
மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"
अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.
அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.
இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.
மற்றொரு வாக்யம்
“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”

अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.
மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.
आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.
ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.
“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”
गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.
அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.
இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.
“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.
இதையே பாரதியும் சொன்னான்
“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.

ஏகாதிசி அறிவியல் காரணம்:

ஏகாதிசி அறிவியல் காரணம்:
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும்.
அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம்.....

புண்ணியம் என்றால் என்ன? – பாவம் என்பது என்ன?

புண்ணியம் என்றால் என்ன? – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.
மகாபாரதம் கூறுகிறது -
''ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |
ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||
“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

Thursday, January 1, 2015

''யக்ஞம்'

கர்மம் என்ற வார்த்தைக்கு ''யக்ஞம்'' என்று பொருள். யக்ஞம் என்றால், யாகம் வளர்த்து ,தேவர்களை வழிபட்டு பிரார்த்தனை செய்வது என்பது ஒரு பொருள். யக்ஞம் அல்லது யாகம் பல ஆண்டுகளாக இந்து தர்மத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.யாகம்,யக்ஞம் அக்னி ஹோத்ரம் முதலிய சடங்குகள் இப்பொது மேலை நாட்டவர்களினால்,குறிப்பாக ஜெர்மன் நாட்டவர்களினால் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் விளக்கங்கள் நமக்கு தரப்பட்டுள்ளன.'' Indian Express'' பத்திரிகையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த Reiner shaippiyar என்பவர் தமது ஆராய்ச்சிக்குப் பிறகு வெளியிட்ட கருத்துக்களை நாம் இங்கே தருகிறோம்.
''''அக்னி ஹோத்ரம் எனப்படும் அக்னி வழிபாடும்,யாகம் அல்லது ஹோமம் எனப்படும் யக்ஞமும் ஒரு தவம்.அது நம்மை நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன.. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தூய்மை கேட்டிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றது.மேலை நாட்டில் உள்ள கடும் குளிர் காலத்தில் பொதுவாக தாவரங்கள் செத்து விடும்.தொடர்ந்து செய்த ஹோமங்களினால் அவை பிழைத்துக்கொள்கின்றன.
யாக குண்டத்தில் இருந்து வரும் புகை தொழிற்சாலைப்புகையால் ஏற்படும் விஷத்தை முறித்து சூழ் நிலையை புனிதப்படுத்துகிறது. யாக குண்டத்தில் இருந்து எடுக்கபட்ட ரக்ஷையை அணியும் போதும்,மற்ற பிரசாதங்களை சாப்பிடும் போதும் ஆரோக்கியத்தை அவை தருகின்றன.'' இதுதான் அந்த ஜெர்மன் ஆராய்ச்சியின் முடிவின் கருப்பொருள்.
''யக்ஞ சிஷ்டாசின ஸந்தோ மூச்யந்தே ஸ்ர்வகில் பிக்ஷை'' என்கிறது பகவத் கீதை. யக்ஞத்தில் மிஞ்சியதை சாப்பிடுகிறவர்கள்,பாவத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது இதன் பொருள்.