Sunday, November 22, 2015

அஸ்வத்தாமா யார்?

அஸ்வத்தாமா யார்?
 அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வனாவார். துரோணாச்சாரியார் மற்றும் அவருடைய மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா. அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது. வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.

மகாபாரதத்தில் அஸ்வத்தாமா 
மகாபாரத போரின் போது, கௌரவர்களின் முகாமில் இருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா போரில் சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் அவர் கொல்லப்பட்டார்.

பழி வாங்கிய அஸ்வத்தாமா 
இதற்கு பழி வாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவின் போது, பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றார். தன் தவறை உணர்ந்த அவர், பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி வைப்பது என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.

கிருஷ்ணரின் சாபம் 
அஸ்வத்தாமாவின் இந்த குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர், தன் பாவத்தை சுமக்கும் விதமாக, அஸ்வத்தாமா முடிவற்ற காலம் வரை இந்த பூமியை வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார். எப்போதுமே அவர் யாருடைய அன்பையும் பெற முடியாது. அதே போல் யாராலும் அவர் வரவேற்கப்பட மாட்டார். தன் நெற்றியில் உள்ள இரத்தினக்கல்லை திருப்பி கொடுக்கும் படியும் கிருஷ்ணர் கூறினார். அதனால் தன் நெற்றியில் ஏற்பட போகும் புண் என்றும் ஆறாது என்றும் சாபமளித்தார். அதனால் தான் மோட்சத்தை தேடி இன்னமும் அஸ்வத்தாமா இந்த உலகத்தில் சுற்றி திரிகிறார்.

அஸ்வத்தாமா உயிருடன் இருக்கிறாரா? 
அஸ்வத்தாமாவை கண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். நெற்றியில் ஆறாத புண்ணை கொண்ட ஒரு நோயாளி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் வந்துள்ளார். தன் புண்ணுக்கு பல விதமான மருந்துகளை தடவியும் கூட அவருடைய புண் ஆறவில்லை. இந்த புண் பல காலமாக இருப்பதாகவும் அது ஆற முடியாத வகையாக உள்ளதாகவும் அந்த மருத்துவர் வியப்புடன் கூறினார். இது அஸ்வத்தாமாக்கு உள்ள புண்ணை போல் உள்ளதே என கூறி சிரித்த மருத்துவர், தன் பெட்டியை எடுத்துள்ளார். எடுத்து விட்டு திரும்பிய போது அந்த நோயாளியை காணவில்லை

வேறொரு புராணம் 
இன்னொரு புராணம் இப்படியும் கூறுகிறது. புர்ஹன்பூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு இந்திய கிராமத்தில் அசிர்கர் என்ற கோட்டை ஒன்று உள்ளது. தினமும் காலையில், இந்த கோட்டையில் உள்ள சிவலிங்கத்திற்கு இன்னமும் அஸ்வத்தாமா வந்து மலர்களால் பூஜை புரிகிறார் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் சில பழங்குடியினருடன் அஸ்வத்தாமா நடந்தும் வாழ்ந்தும் வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்

குறிப்பு 
அஸ்வத்தாமா உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ, அவருடைய புராணக்கதை இன்னமும் அவரை உயிருடன் வைத்திருக்கிறது. தன்னுடைய ஈகோ மற்றும் அறியாமையால், சக்தி வாய்ந்த இந்த போர் வீரர் சோகமான முடிவை சந்தித்தார்.

ஜெயத்திரதன்

ஜெயத்திரதன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ’என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான். 
முன் வரலாறு
காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது,திரௌபதி தனித்து இருந்தாள்.அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.கண்ணனின் துணையிருப்பதால்,பாண்டவர்களை வெல்ல முடியாது. ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை அவனுக்கு அளிக்கிறார்.இந்த வரம் குருச்சேத்திரப் போரில் பதின்மூன்றாம் நாள் போரில் பயனாகிறது.

குருச்சேத்திரப் போர்

அபிமன்யு வதம் - 13ஆம் நாள்

பதின்மூன்றாம் நாள் குருச்சேத்திரப் போரில் துரியோதனன் திட்டப்படி துரோணர் சக்கர வியூகம் அமைத்துப் போரை நடத்துகிறார். அன்றைய போரின் போது யுதிஷ்டிரரை சிறைப்பிடிக்க எண்ணி சக்கரவியூகமாக வளைத்து விடுகிறார்கள். இந்த அமைப்பை உடைத்து செல்லத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில் மூவர் மட்டுமே, அவர்கள் அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் யுத்த களத்தில் வேறிடத்தில் இருந்ததால் அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால், யுதிஷ்டிரர் மீட்கப்பட்டு வெளி வந்த மறுகணம் அவர் உள்பட அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். (அர்ச்சுனன் தவிர மற்ற பாண்டவர்கள் நால்வரையும் எதிர்கொண்டு தடுக்கும் பலத்தினை அவன் வரமாய்ப் பெற்ற கிளைக்கதையும் மகாபாரதத்தில் உண்டு). அபிமன்யுவைத் தனியாக வளைத்து விடுகிறார்கள். துரோணர் ஆச்சர்யத்தில் கண்பிதுங்கிப் போகும் அளவுக்கு அத்தனை பேரையும் தனியாக சமாளிக்கிறான் சிறுவன். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அவனை வீழ்த்திக் கொன்று விடுகிறார்கள். அதை அறிந்த அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.

ஜயத்திரதன் வதம்

இதனை பயன்படுத்தி அருச்சுனனை தீப்புக வைக்க துரியோதனன் ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் ஈடுபடாமல் ஒளிந்திருக்கச் செய்கிறான். கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை இப்போது விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. அருச்சுனன் அப்போது விட்ட அம்பு ஒன்று ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. அவனது தந்தை பெற்ற வரமொன்றின்படி ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும். ஆகவே கண்ணன் அறிவுரையில் அருச்சுனன் அடுத்த மூன்று அம்புகள் செலுத்தி அத்தலையை ஊருக்கு வெளியே ஒரு பர்ணசாலைக்கு செலுத்துகிறான். அங்கு ஜெயத்திரதனின் தந்தை மடியில் அத்தலை போய் விழுகிறது. என்னவோ தன் மடியில் விழுந்து விட்டதே என்பதற்காக அதைச் சட்டென்று உதறிவிட தலை தரையில் விழ ஜயத்திரதனின் தந்தையின் தலை உடைகிறது.

அர்ச்சுனனுக்கு கிருஷ்ணனின் "பொருள் பொதிந்த" கண்டனம்

"பாரதப் போரில் நீ ஒரு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் கருவி மட்டுமே. உன்னை யார் சபதம் செய்யச் சொன்னது? அதுவும் கால நிர்ணயம் செய்து? சூரியனின் பயணத்துடன் உன் அபிலாஷைகளை ஏன் முடிச்சிடுகிறாய்? யாருக்காகவும் நிற்காது காலம், அதனைக் கருத்தில் கொள். நேர நிர்ணயம் செய்து உன் சபதங்களை எடுக்காதே. அதனால் விளையப் போவது பதற்றம் மட்டுமே. உன்னுடைய இயல்பான திறமை கூட அதனால் பங்கப்பட்டதை இன்று அனுபவ பூர்வமாகக் கண்டாய் அல்லவா? நான் மட்டும் சூரியனை மறைத்திருக்கா விட்டால் உன் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பார்"

இரண்டு முறை சூரிய அஸ்தமனம் சாத்தியமா?

டாக்டர் வார்டெக் என்பவர் (மகாபாரத யுத்தம் கிமு.5561 அக்டோபர் 16 ஆம் நாள் தொடங்கி நவம்பர் 2 ஆம் நாள் முடிந்தது என்று ஏராளமான ஆதாரங்களுடன் எழுதியுள்ள கட்டுரை நூலில்) இரட்டை சூரியோஸ்தமனம் அறிவியல் பூர்வமாக சாத்தியமே என்று விளக்கி உள்ளார். அவருடைய விளக்கம்:
சூரியஒளி நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அது வளிமண்டலத்தைக் கடக்கும் போது ஒளிச் சிதறலுக்கு ஆட்படுகிறது. அதுவே தொடுவானத்துக்குக் கீழே சூரியன் இருப்பது போன்ற காட்சியைத் தருகிறது. கானல் நீர் ஏற்படும் விதம் போலத்தான் இதுவும். பூமிப் பரப்பினை ஒட்டி இருக்கும் காற்றின் வெப்பநிலைக்கும் அதனை அடுத்துள்ள காற்றடுக்கின் வெப்ப நிலைக்கும் இருக்கும் வித்தியாசமே கானல் நீர் ஏற்படக் காரணம். அதாவது பூமிப் பரப்பின் சூட்டினால் அதனை ஒட்டி இருக்கும் காற்றும் சூடடைந்து அடர்த்தி குறைந்து இருக்கிறது. அதற்கு மேலே இருக்கும் காற்றடுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கிறது. ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தினுள் செல்லும் போது விலகல் ஏற்படும். ஒரு பகுதி ஒளி விலகி பூமிப்பரப்புக்கு இணையாகவும், இன்னொரு பகுதி பூமியில் பட்டுத் தெரிப்பதாலும் தூரத்து மலையின் தலைகீழ் பிம்பம் பூமிப்பரப்புக்குக் கீழே மாயபிம்பமாகத் தெரியும். அதேபோல், சூடான கீழ்ப்பரப்புக் காற்றின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி ஒரு திரவக் கண்ணாடி போல் பூமிப்பரப்பில் விரிய அது ஒரு மாய தொடுவானத்தினைக் காட்சிப்படுத்துகிறது. நிஜமான தொடுவானம் வானத்தின் பிரதிபலிப்பில் மறைந்து விடுகிறது.
மகாபாரத யுத்தத்தின் போதும் இதே தான் நிகழ்ந்திருக்கும். நெருப்பு சார்ந்த ஆயுதங்களின் பிரயோகங்களால் யுத்த பூமி சூடாகி இருக்க, அதன் மேலான காற்று அடர்த்தி குறைவாகி எழும்பி இருக்க, மாலைச் சூரியனின் வட்டவடிவம் மாய நீள்வட்ட வடிவமாகி மாயத் தொடுவானத்தின் கீழ் மறைந்தது போன்ற தோர்றம் உருவாகி இருக்கும். அந்தக் கணத்தில் ஜயத்ரதன் வெளிப்பட்டிருக்கக் கூடும். அடுத்த கணங்களில் வெப்ப வேறுபாடு குறைய நிஜத் தொடுவானத்தில் சூரியன் தோற்றமளித்துப் பின் மறைந்திருக்கும். இந்த இடைவெளியில் ஜயத்ரதனின் வதம் நிகழ்ந்திருக்கும்

Saturday, November 21, 2015

அட்சய பாத்திரத்தில் மிஞ்சிய அன்னம்!

அட்சய பாத்திரத்தில் மிஞ்சிய அன்னம்!

அள்ள அள்ள குறையாமல் அன்னம் சுரக்கும் அட்சயப் பாத்திரம் உங்களுக்குத் தெரியும். பஞ்ச பாண்டவர்களிடம் அந்த அட்சயப் பாத்திரம் இருந்தும், துர்வாசருக்காக அன்னம் வரவழைக்க முடியாமல் அவர்கள் திணறிய கதை உங்களுக்குத் தெரியுமா?
மாயச் சூதில் வெற்றிபெற்ற கௌரவர்கள் விதித்த நிபந்தனையின்படி நாடு, நகரம் முழுவதையும் துறந்து, பாண்டவர்களும், திரௌபதியும் வனவாசம் மேற்கொண்டனர். தர்மம் முன்னே செல்ல, தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் எடுத்த அவதார புருஷன் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே சென்றான்.
நாட்டின் எல்லையைக் கடந்து கானகத்தை அடைந்த பாண்டவர்கள், முதன்முதலில் தங்கள் வயிற்றுப்பசியை உணர்ந்த போது, அவர்கள் எதிரே உணவுடன் நின்றான் பகவான் கிருஷ்ணன். அவன், நடுக்காட்டிலும் தங்கள் காலடிகளைத் தொடர்ந்து வந்து காப்பாற்றுகிறான் என்பதை உணர்ந்த யுதிஷ்டிரன் நன்றிப் பெருக்குடன் கண்ணீர் மல்கினான். வன வாழ்க்கையில் அவர்கள் வயிற்றுப்பசி போக்கும் மார்க்கத்தை எடுத்துச் சொன்னான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரத்தை எப்படி பெறுவது என்பது கண்ணனுக்கு தெரியும். அதனால், சூரியபகவானை உபாசனை செய்து, தட்டாமல் அமுதளிக்கும் அட்சயப் பாத்திரத்தை அவரிடமிருந்து பெறும் ஓர் அரிய மந்திரத்தை திரௌபதிக்கும், பாண்டவர்களுக்கும் உபதேசித்தான்.
ராமாயணத்தில், யுத்தத்துக்கு முன்பு பகவான் ஸ்ரீராமனுக்கு சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார் அகத்திய முனிவர். கிருஷ்ணாவதாரத்தில் சூரிய பகவானின் பெருமையை எடுத்துச்சொல்லி சூரிய மந்திரத்தை பாண்டவர்களுக்கு உபதேசித்தார் ஸ்ரீகிருஷ்ணன்.
பாண்டவர்கள் தீவிரமான சூரிய உபாசனை செய்தார்கள். அதன் பலனாக சூரியதேவன் தோன்றி அட்சயப் பாத்திரத்தை அளித்தான். அட்சயப் பாத்திரத்தை அன்னத்தாலோ, வேறு உணவு பதார்த்தங்களாலோ நிரப்பினால், அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அது அமுது தரும். ஆனால், ஒருவேளை உணவருந்தியபின் எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப் பாத்திரத்தைக் கழுவிவைத்துவிட்டால், மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீண்டும் அமுதம் தரும். இந்த நியதிகளை விளக்கிவிட்டு மறைந்தான் சூரிய பகவான்.
சூரியனின் புத்திரன் கர்ணன். அவனோ கௌரவர்கள் பக்கம். சூரியனோ தன் புதல்வனுக்கு எதிரிகளான பாண்டவர்களுக்கு பசி போக்க அருள்புரிந்தான். அதற்கு காரணம்... உயர்வு- தாழ்வு பாராமல், நல்லவர்- கெட்டவர் என்ற பாகுபாடின்றி, தன் ஒளியால் இருளைப் போக்கி இரட்சிக்கும் தர்மச்சுடர் அவன் என்பதே!
அட்சயப் பாத்திரம், பாண்டவர்களின் வனவாசத்தில் அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதனை அறியாத துரியோதனன், பாண்டவர்கள் வனத்தில் உணவின்றி உயிர்நீத்து விடுவார்கள் என்று கனவு கண்டான்.
ஒருமுறை துர்வாச மகரிஷி துரியோதனன் அவைக்கு வந்தார். அவருக்கு அறுசுவை உணவளித்து, மாலை மரியாதைகள் செய்து, அவர் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானான் துரியோதனன். அப்போது துர்வாசர், துரியோதனனிடம் 'என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
சந்தர்ப்பத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட துரியோதனன், 'தாங்கள் என் இல்லம் வந்து அதிதியாக இருந்து ஆசீர்வதித்தைப் போல, காட்டிலுள்ள எனது சகோதரர்களான பாண்டவர்கள் குடிலுக்கும் தங்கள் சீடர்களுடன் அதிதியாகச் சென்று ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான். வனத்தில் தங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் பாண்டவர்கள் துர்வாசரை திருப்திப்படுத்த முடியாமல், அவரது சாபத்துக்கு ஆளாகி அவதியுற நேரும் என்று நினைத்தே அவன் அப்படியரு வரம் கேட்டான்.
துரியோதனனின் வரத்தை தொடர்ந்து, தன் மிகப் பெரிய சீடர்களின் பரிவாரத் துடன் பாண்டவர்கள் இருக்கும் வனத்தை நோக்கிப் புறப்பட்டார் துர்வாசர். அவர்கள் அங்கே போய்ச் சேரும்போது உச்சிவேளை நெருங்கிவிட்டது. பாண்டவர்கள் பகல் பொழுது உணவை முடித்து விட்டிருந்தனர். திரௌபதி அட்சயப் பாத்திரத்தைக் கழுவும் முன்பு சூர்யார்ப்பண மந்திரம் சொன்னாள். அதே விநாடி பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அந்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தைக் காலி செய்ய சூரியன் விரித்த கிரணக் கைகளைத் தடுத்தான். 'சூரியதேவா... இந்த அன்னப் பருக்கும், கீரை இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டி இருக்கட்டும். இவை நான் உண்ண வேண்டியவை' என்று கூறி சூரியனின் கைகளை தன் சாதுர்யத்தால் கட்டிப்போட்டான் ஸ்ரீகிருஷ்ணன்.
அதன்படி, அன்னப்பருக்கையும், கீரை இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டன. திரௌபதி பாத்திரத்தைக் கழுவி பூஜையில் வைத்து வணங்கினாள். அதில், இன்னமும் அன்னப்பருக்கையும் கீரை இலையும் ஒட்டிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.
வனம் வந்த துர்வாசர், வழியில் தர்மனைச் சந்தித்துத் தானும், தன் சீடர்களும் மதிய உணவுக்காக அவர்கள் குடிலுக்கு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும் கூறினார். தர்மர் அதை பெரும் பாக்கியமாகக் கருதி, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
துர்வாசரும், அவரின் சீடர்களும் நதியில் குளித்து, ஜபம் செய்துவிட்டு வருவதாகக் கூறி நதிக்கரைக்குச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்ய தர்மர் தன் குடிலுக்கு ஓடினார். விவரம் அறிந்த திரௌபதி அதிர்ச்சி அடைந்தாள். சற்றுநேரத்துக்கு முன்புதான் அட்சயப் பாத்திரத்தைக் கழுவி வைத்ததாகச் சொன்னாள்.தர்மர் திகைத்தார் (தர்மருக்கு ஏற்பட்ட இச்சங்கடம்தானோ என்னவோ 'தர்ம சங்கடம்’ என்று நாம் கூறுவது?). உடனே, காட்டில் ஏதாவது கனிகள் கிடைக்கிறதா என்று பார்க்கச் சென்றார்.
அப்போது ஸ்ரீகிருஷ்ணன் ஆஸ்ரமத்துக்குள் நுழைந்து, 'திரௌபதி... எனக்கு மிகவும் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது இருந்தால் கொஞ்சம் கொடு' என்று கேட்டான். திரௌபதி திடுக்கிட்டு கண் கலங்கினாள். 'மதுசூதனா... இதென்ன சோதனை? துர்வாசர் போதாதென்று நீயுமா சோதிக்கிறாய்? அட்சயப் பாத்திரத்தை இப்போதுதான் கழுவி வைத்தேன். 'வேறு உணவுக்கு நான் எங்கே போவேன்? நீதான் இதற்கு நல்ல வழிகாட்ட வேண்டும்'' என்று வணங்கி நின்றாள் திரௌபதி.
'அப்படியானால், கழுவி வைத்த அட்சயப் பாத்திரத்தையாவது எடுத்து வா. ஒரு பருக்கையாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று விடாமல் கேட்டான் அந்த ஆபத்பாந்தவன். ஒன்றும் புரியாமல் அட்சயப் பாத்திரத்தை எடுக்கச் சென்றாள் அவள். அட்சயப் பாத்திரத்தைப் பார்த்த அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அட்சயப் பாத்திரத்தில் ஓர் அன்னப்பருக்கையும், கீரை இலையும் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பரந்தாமன் தனக்காகவே சேர்த்து வைத்த அன்னம் அல்லவா? கிருஷ்ணன் அந்த அன்னப் பருக்கையையும், கீரை இலையையும் நாக்கில் வைத்து விழுங்கினான். 'திருப்தி’ என்றும் கூறினான்.
அதே விநாடி நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள் உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது.பசி உணர்வு முழுமையாக நின்று போனதால், துர்வாசருக்கும் ஒன்றும் ஓடவில்லை. 'நமக்காக உணவு சமைத்து வைத்திருக்கும் தர்மருக்கு என்ன பதில் கூறுவது’ என்று பயந்தார். உடனே, வனத்தில் பழங்களைத் தேடித் திரிந்து கொண்டிருந்த தர்மரிடம் ஓடி வந்தார்.
'யுதிஷ்டிரா... என்னை மன்னிக்க வேண்டும். நான் உன் குடிலில் இன்று விருந்து சாப்பிட இயலாத நிலையில் இருக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட தர்மருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
''மகனே... தினமும் நான் உணவருந்திவிட்டு 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி நீரருந்திவிடுவேன். ஆனால், என்னைவிட மேலான எவனோ உணவு சாப்பிட்டுவிட்டு 'துர்வாசார்ப்பணம்’ என்று நீரருந்திவிட்டான் போலும்! அதனால், இப்போது என் வயிறு கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு. உனக்கு சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் கானகம் விட்டு வெளியேறினார்.
குடிலுக்கு வந்த தர்மனுக்கும், பாண்டவ சகோதரர்களுக்கும் கண்ணனின் கருணை தெரிந்தது. அட்சயப் பாத்திரத்தில் இருந்த அன்னப்பருக்கையில் அன்று துர்வாசர் பெயரை எழுதினான் அந்தத் தாமோதரன்.
இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு. அதாவது,
'தான்ய தான்ய பர் லிகா ஹை
கானே வாலா கா நாம்’
'ஒவ்வொரு தானியமணியிலும் அதைச் சாப்பிடுகிறவனின் பெயரைக் கடவுள் எழுதி விடுகிறான்’ என்பது இதன் பொருள்.
அட்சயப் பாத்திரமே இருந்தாலும், கண்ணன் அருள் இல்லையென்றால், அதன் முழுப் பலனும் இல்லை என்பதே இதன் தத்துவம்.

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம வரலாறு

ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம வரலாறு
திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய அகத்திய முனிவர் ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள் தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டார். அகத்தியர் அவர்களை பார்த்து "ரிஷிகளே தாங்கள் ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? " என்று வினவினார்.அதற்க்கு அந்த ரிஷிகள் பூலோகத்தில் எங்கள் பரம்பரையில் அகத்தியன் என்று ஒருவன் இருக்கிறான். அவனுடைய மூதாதையர் நாங்கள். அவனது ஊழ்வினை (ப்ராப்தம்) அவன் திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகா வேண்டும். இல்லறத்தால் உண்டாகும் கஷ்டங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். அனால் அவனோ பிரமச்சரிய விரதம் பூண்டு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான். அவன் அனுபவிக்க வேண்டிய கஷ்ட நஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர். உடனே அகத்தியர் அந்த ரிஷிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த அகத்தியன் என்பவன் நான் தான். எனக்காக தாங்கள் துன்புற வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்கிறேன், ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆகிறேன், இது சத்தியம் என்று வாக்குறுதி அளித்தார். உடனே அந்த ரிஷிகள் தவத்தை விட்டு விட்டு அகத்தியருக்கு ஆசி வழங்கினர். பின்னர் மகிழ்ச்சியுடம் பிதுர் லோகம் சென்றனர். அன்றிலிருந்து அகத்தியர் தனது பிரமச்சரிய விரதத்திற்கு குந்தகம் விளைவிக்காத, தன்னை அனுசரித்து நடக்ககூடிய பெண் எங்கு இருக்கிறாள் என மூவுலகையும் சுற்றி தேடி வந்தார். அப்படித் தேடி வரும்போது பிரம்ம லோகத்திற்கும் சென்றார். அங்கு பிரம்ம தேவர் விஷ்ணு மாயையை ஓர் அழகிய கன்னிகையாக ஆக்கி வைத்திருந்ததைப் பார்த்தார். பிரம்மாவை வணங்கி விட்டுப் பூலோகத்திற்கு வந்து விட்டார். இது இப்படி இருக்க.......
விதர்ப்ப தேசத்தில் கவேரன் என்னும் அரசன் குழந்தை வேண்டிப் பல ஆண்டுகள்
தவம் செய்தார். பலன் இல்லை. கடைசியாக மனைவியுடன் சேர்ந்து சிவ பெருமானைக் குறித்து கடுமையாகத் தவம் செய்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி "இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம்
இல்லை. ஆதலால் வீணாக உன் உடலை வருத்திக் கொண்டிருக்காதே. தவத்தை விட்டுவிடு" என்றார். கவேரரும் தவத்தை விட்டுவிட்டு மனச் சோர்வுடன் வாழ்ந்து வந்தார். வயதும் ஆகிவிட்டது. இந்நிலையில் அகத்தியர் பெண் தேடிக்கொண்டு விதர்ப்ப மன்னன் கவேர ரிஷியிடம் வந்தார். கவேரரும் அவரது மனைவியும் அகத்தியர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது அவர்களது சோகத்தைத் தனது சித்தியினால் அறிந்த அகத்தியர் "புத்திர பாக்கியம் உண்டாவதாக!" என்று ஆசீர்வதித்தார். இருவரும் திடுக்கிட்டு "ஸ்வாமி, எங்களுக்கு இப்பிறவியில் புத்திர பாக்கியம் கிடையாது என்று சிவபெருமானே கூறிவிட்டார், அப்படி இருக்க தாங்கள் புத்திர பாக்கியம் பெருக என ஆசீர்வதித்து உள்ளீர்கள். இது நடக்க கூடியதா,? நாங்களும் மிகுந்த வயோதிகர்கள் ஆகிவிட்டோம் , தங்கள் வார்த்தை பொயிக்கலாமா? என்று கண்ணீர் மல்க வினவினர்..அகத்தியர் புன்முறுவலித்து கூறுகிறார். "தாங்கள் கூறியது அனைத்தும்
உண்மை. ஆனால் எனது தபோ வலிமையால் நான் இப்போது ஒரு பெண் குழந்தையை கொடுக்கின்றேன். இவளைத் தக்க வயதில் எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்று கூறி தனது இரு கரங்களையும் முன் நீட்டி கண்மூடி, பிரம்ம லோகத்தில் விஷ்ணு மாயையாக உள்ள கன்னிகையைத் தனது தவ வலிமையால் அப்போது பிறந்த குழந்தையைப் போல் ஆக்கி கவேர அரச-அரசியின் கையில் கொடுத்தார். இவ்விஷயத்தை தெரிந்துக்கொண்டு தேவர்கள் அக்கொழந்தையைப் பார்க்க வந்தனர். அக்குழந்தை பெண்ணிற்குரிய 64 லக்ஷணங்களும் நிறைந்து மிக அழகாகத் திகழ்வதைப் பார்த்து லோபாமுத்ரா (அறுபத்து நான்கு லட்சணங்களும் குறையாதவளே) எனப் பெயரிட்டு அழைத்தனர். கவேர அரசரின் மகளானதால் மக்கள் அவளைக் காவேரி என்று அழைத்தனர். காவேரி நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து வந்தால். இது நாள் வரையும் குழந்தை இல்லாததால் சோகமாக இருந்த கவேரரும் அவரது மனைவியும் மிக்க சந்தோஷத்துடன் அவளது மழலையையும், தவழ்ந்து நடப்பதையும் கேட்டும் பார்த்தும் ரசித்தனர். விஷ்ணு மாயையே பிராந்தி இருப்பதால் மிக விரைவிலேயே மழலை மாறி மிகத் தெளிவாக பேச ஆரம்பித்தாள், காவேரி.காவேரிக்கு ஏழு வயதாயிற்று. விதர்ப்ப நாடும் வளம் கொழிந்து விளங்கிற்று. ஒரு நாள் ஸ்ரீ சர்யானந்தநாதர் என்னும் ஸ்ரீவித்யா குருவானவர் வந்து அரசனிடம் " நான் சாதுர்மாஸ்ய விரதம் இருக்க விரும்புகிறேன், ஆதலால் உன்னுடைய நந்தவனத்தில் ஒரு குடிசையமைத்து என் கருத்தறிந்து பணிகள் செய்ய ஒரு பணியாளையும் ஏற்படுத்தி தருவாயாக!" என்று கூறினார். அரசர் சிந்தித்தார். சர்யனந்தநாதரோ மிகவும் கோபக்காரர். நந்தவனத்தில் பர்ணகசாலை அமைத்து கொடுத்துவிடலாம். இம்முனிவர் கருத்துணர்ந்து பணி செய்ய ஆட்களுக்கு என்ன செய்யலாம்? நாமே செய்யலாம் என்றால் அதிக வயசாகிவிட்டது. அரசிக்கும் வயதாகி விட்டது. இக்கட்டில் மாட்டிக்
கொண்டோமே என்ன செய்வது என மனவருத்தத்துடன் மிகவும் சோகமாக இருந்தார். இவ்வாறு தாய் தந்தையர் சோகமே உருவாக இருப்பதைப் பார்த்த லோபாமுத்திரை அவர்களைப் பார்த்து ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இது நாள் வரை தங்களை நான் இவ்வாறு பார்த்தது இல்லையே ? என்ன காரணம்? என வினவினாள்.அரசர் "காவேரி! கண்மணி! நமது நந்தவனத்தில் தவம் இயற்ற ஒரு முனிவர் வந்துள்ளார். அவரது மனம் அறிந்து பணியாற்ற ஒரு பணியாளும் கிடைக்கவில்லை. வயோதிகர்களாகிய எங்களாலும் இயலாது. என்ன செய்வது? அவருக்கோ சீக்கிரம் கோபம் வந்து சாபமிட்டுவிடுவார். அதுதான் பயமாக உள்ளது " என்றார்.உடனே லோபாமுத்திரை "நான் உள்ளேன், ஏன் கவலைப் படுகிறீர்கள்? நான் அவர் மனமறிந்து பணிவிடைகள் செய்து அவரை மகிழ்விப்பேன் " என்றால். "எங்களுக்குத் தெரியும், நீ மற்ற குழந்தைகள் போல அல்ல. தெய்வ குழந்தை, இருந்தாலும் இவ்வளவு காலம் குழந்தை இல்லாதிருந்து
இப்போதுதான் உன்னால் அக்குறை நீங்கி மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீ அவருக்கு பணி செய்யும் பொது சிறு பிள்ளைத் தனமாக ஏதாவது தவறு செய்து விட்டால் அவர் சபித்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது" என்றனர்.ஒரு குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியவாரே இரண்டு சேடியருடன் முனிவரின் தவச் சாலைக்கு சென்று அவர் பாதம் பணிந்து நல்ல பணி செய்ய என்னை வாழ்த்தி அருள்செய்வீர் என்று பணிகள் செய்ய ஆரம்பித்தால். காவேரிதேவியின் பணிவிடையால் மனம் மிக மகிழ்ந்த சர்யானந்தநாதர் லோபமுத்திரைக்கு ஸ்ரீவித்தையை உபதேசித்து இவ்வித்தையை செபித்து வந்தால் உனக்கு எல்லா சிரேயசும் உண்டாகும், எல்லா சித்திகளும் பெற்று நினைத்த உருவம் பெறலாம். இவ்வித்தை ஞானத்தை அளிக்கக்கூடியது என்று ஸ்ரீவித்தையின் பெருமையைச் சொல்லி ஆசீர்வதித்து சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து அரசன் அரசியை ஆசீர்வதித்து சென்றார். அன்றிலிருந்து லோபாமுத்திரை ஸ்ரீவித்தையை இடைவிடாது ஜெபித்து சகல சித்திகளையும் ஞானத்தையும் பெற்றுச் சிறந்து விளங்கினாள். காவேரி தேவிக்கு 16 வயது ஆயிற்று. அகத்தியர் விதர்ப்ப தேசத்து கவேர அரசரிடம் வந்து உனது பெண்ணைக் கன்னிகா தானம் செய்து கொடு என்று கேட்டார். அரசனும் அரசியும் மகளைப் பிரிந்து இருக்க வேண்டுமே, பதினாறு வருடம் வளர்த்துக் காடும் மழையும் சுற்றித் திரியும் இம்முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தால் இது நாள் வரையும் ஒரு துன்பமும் சிறிதும் அறியாத இவள் கஷ்டப்பட வேண்டுமே என்று மனம் வருந்தினர்.காவேரி அவர்கள் மனதைத் தேத்தி என்னைத் திருமணம் செய்துக்கொள்ளதானே குழந்தை இல்லாத உங்களுக்கு அக்குறையை போக்கி என்னைக் குழந்தையாகக் கொடுத்தார்? அப்போது சம்மதித்து விட்டு இன்று மனவருத்தம் அடைந்து கண்ணீர் விடுவது சரியல்ல. எனக்கு ஒரு குறையும் வராது. தாங்கள் அவருக்கு வாகளிதபடி என்னைக் கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று கூறி அவர்கள் மனதைத் தேற்றினாள். அகத்தியர் லோபாமுத்திரை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஆடை ஆபரணங்களைக் களைந்து மர உரி தரித்து அகத்தியருடன் லோபாமுத்திரை புறப்பட்டாள். கண்களில் நீர்மல்க கவேரரும் அவரது மனைவியும் சேடியரும் நாட்டு மக்களும் வழியனுப்பி வைத்தனர். அவ்விருவரும் பாரத நாடு முழுவதும் உள்ள தளங்களுக்கு சென்று மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றை தரிசித்து நீராடிக் கடைசியாக காஞ்சிபுரம் வந்தடைந்தனர். காஞ்சிபுரத்தில் பகவன் ஹயக்ரீவர் சாட்சாத் காமேஸ்வர-காமேஸ்வரியிடம் ஸ்ரீவித்தை உபதேசம் பெற்று காமட்சியம்மனுக்கு ஸ்ரீவித்யா உபாசனை முறைப்படி நவாவரண பூஜை ஸ்ரீவித்யா ஜபம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம த்ரிசதீ நாம அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்து கடைசியில் லோபாமுத்திரையையே சுவாசினி பூஜா செய்து
வந்தார். இது அநேக வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஹயக்ரீவர் செய்யும் பூஜையைத் தரிசிக்க முப்பது முக்கோடி தேவர்களும் வருவார்கள்.காஞ்சிபுரத்திற்கு வந்த அகத்தியர் காமாட்சியாம்மனைத் தரிசிக்க சென்றார். வழியில் வந்த தேவர்கள் அவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவுக் பாகியவான். உங்கள் மனைவி லோபாமுத்திரையை சாட்சாத் விஷ்ணு பகவானாகிய ஹயக்ரீவர் தினந்தோறும் தான் செய்யும் பூஜையின் கடைசியில் அம்பிகையாகப் பாவித்து பூஜை செய்கிறார். அவரும் அப்பூசையை ஏற்று அவரை ஆசீர்வதிக்கின்றார். என்ன அதிசயம்? பூஜையின் முடிவில் மனைப் பலகையைப் போட்டதும் லோபாமுத்திரை வருகிறார். பூஜை முடிந்ததும் மறைந்துவிடுகிறார் என்றனர். அகத்தியர் இல்லை இல்லை. அது என் மனைவி இல்லை. நீங்கள் வேறு யாரையோ பார்த்து என் மனைவி லோபாமுத்திரை என்று தவறாக எண்ணி உள்ளீர்கள். எனது மனைவி திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து ஒரு நிமிடம் கூட என்னைப் பிரிந்து இருந்தது கிடையாது. அவள், ஒரு மனைவி கணவனின் சொல்லைத் தட்டாமல் கணவன் குறிப்பறிந்து எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமோ அவ்வாறே நடந்து கொள்கிறாள். நீங்கள் கூறுவது தவறு என்று மறுத்தார். தேவர்கள் இல்லை இல்லை நாங்கள் கூறுவது சரிதான். தாங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கூறினார். என்ன ஆச்சரியம் !!!! தேவர்கள் கூறியது போலவே பூஜையின் முடிவில் சாட்சாத் லோபாமுத்திரையே நேரில் வந்து ஹயக்ரீவரால் கொடுக்கப்பட்ட குலாம்ருதத்தை சிறிது பருகிவிட்டு மீதத்தை கொடுக்க, அதை ஹயக்ரீவர் பய பக்தியுடன் வாங்கி அருந்தி, எல்லோருக்கும் பிரசாதமாக கொடுத்தார். அதை அகத்தியர் உற்று உற்று பார்த்து "ஆமாம் லோபாமுத்திரையேதான்". இது அநேக வருடங்களாக நடைபெறுவதாக தேவர்கள் கூறினார்கள். ஆனால் அவளோ நம்மை விட்டு ஒரு நிமிடம் கூடல் பிரியாமல் கூடவே தான் இருந்தால். சித்தி பெறுவதற்காக ஜபமோ, தவமோ செய்து நான் ஒரு நாளும் பார்க்கவில்லையே? இது எப்படி முடியும்? என ஆச்சரியப்பட்டார்.
பரணக சாலைக்கு வந்து லோபாமுத்திரையிடம் நீ ஹயக்ரீவர் செய்யும் சுவாசிநீ பூஜைக்கு போகிறாயா? சித்தி எப்படி உண்டாயிற்று ? நீ தவமோ, த்யானமோ, ஜெபமோ செய்து நான் பார்க்கவே இல்லையே ? என்று கேட்டார். அதற்க்கு லோபாமுத்திரை "எனக்கு 7 வயது இருக்கும் போது எங்கள் நாட்டிற்கு சர்யானந்த நாதர் என்னும் முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்திற்கு வந்தார். அவருக்கு மனம் குளிரப் பணிவிடைகள் செய்தேன். அதனால் மகிழ்ந்த அவர் ஸ்ரீவித்யா மந்திரத்தை உபதேசித்தார். அன்றிலிருந்து இடைவிடாது அம்மந்திரத்தை ஜெபித்து வருகிறேன். அம்மந்திர மகிமையால் எனக்கு நினைத்த உருவம் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது என்றார். நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். படித்துள்ளேன். எல்லா மந்திரங்களையும் விட மிக உன்னதமான மந்திரம் ஸ்ரீவித்தையே என்ரும் . ஆனால் நீ அம்மந்திரத்தின் மகிமையால் எம் முயற்சியும் இன்றி சித்திகளையும், மேன்மைகளையும் பெற்றுள்ளாய் என்பதை நேரடியாகக் காண்கிறேன். எனக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறாயா? என கேட்டார். மனைவியிடத்தில் கணவன் உபதேசம் பெறுவது சரியல்ல. மனைவிதானே சொன்னாள் என்று சிரத்தை இருக்காது. அது மட்டுமல்ல. தங்களுக்கு உபதேசிப்பதர்க்காகவே இங்கு ஹயக்ரீவர் காத்துக்கொண்டிருக்கிறார். அம்பிகை கட்டளை. தங்களுக்கு உபதேசித்த பிறகுதான் அவருடைய இவ்வுருவம் மறைந்து வைகுண்டத்திருக்குச் செல்ல வேண்டும் என்பது. ஆகவே அவரிடம் சென்று உபதேசம் பெறுங்கள் என்று சொல்லிவிட்டார். சில நாட்கள் கழிந்தன. லோபாமுத்திரை அகத்தியரைப் பார்த்து "என்ன? உபதேசம் பெற்றுக் கொண்டீர்களா? என்ன என்ன உபதேசம் செய்துள்ளார்? இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது?" என்று கேட்டார். என்ன? உபதேசமா? கூட்ட நெரிசலில் அவர் சமீபம் செல்லவே முடியவில்லை. நான் வேறு குள்ளன். எல்லோரும் வணங்கியதும் கை அசைத்து உட்கார சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான். கிட்டவே போக முடியவில்லை என்றார் அகத்தியர். நாளை நீங்கள் சென்று எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்று கொண்டே இருங்கள். ஹயக்ரீவர் ஏன் நிற்குரீர்கள் என கேட்பார். அப்போது லோபாமுத்திரை அனுப்பினாள் என்று கூறுங்கள் என்று உபதேசம் பெற வழி சொல்லி அனுப்பினாள் காவேரி.லோபாமுத்திரை சொல்லியவாரே அகத்தியரும் தேவர்கள் எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்றுக்கொண்டே இருந்தார். ஹயக்ரீவர் பார்த்து ஏன் நிற்கின்றீர்? உட்காரும் எனக் கூறியபோது, லோபாமுத்திரை அனுப்பினாள் என்றார். அப்படியா? வாரும் வாரும், உங்களுக்காகத்தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டுள்ளேன். முதலிலேயே சொல்லி இருந்தால் இதற்குள் எல்லாவற்றையும் உபதேசித்து விட்டு வைகுண்டம் சென்றிருப்பேனே? பரவாயில்லை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி உபதேசிக்க ஆரம்பித்தார். என்ன என்ன உபதேசித்தார் என்பதை அகத்தியர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மகாத்மியம் என்ற வரலாற்றில் பட்டியலிட்டுக் கூறுகின்றார்

விபீஷணன்

விபீஷணன் ககன மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது சுக்கிரீவன் முதலான வானரவீரர்கள் அவனைப் பார்த்துவிடுகிறார்கள். பிரதிகூலர் தொடர்பு விட்டவுடன் அனுகூலர்கடாட்சம் கிட்டிவிடுகிறது. பதிதர்களை விட்டு நீங்கியவுடனே பரம் பாகவத கடாட்சம் கிடைக்கப் பெறுகிறது.
தமபி சொல்லை மதியாத ராவணனை விட்டு, தம்பி சொல்லை மதிக்கும் ராமனை நாடி வருகிறான் விபீஷணன்.
“எல்லைஇல் பெருங்குணத்த இராமன் தாள்இணை புல்லுதும், புல்லி, இப்பிறவி போக்குதும்” என்று கருதிய வண்ணம் காகுத்தனிடம் சரணாகதியடைய வருகிறான்.
ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.
ஸோ ஹம் பருஷிதஸ் தேந
தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
ராகவம் சரணம் கத: II
“பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, பற்றுகளை விட்டால் இறைவனைப் பற்றலாம். இறைவனைப் பற்றினால் பற்றுகளை விடலாமல்லவா?
விபீஷணன் பற்றுகளை விட்டுப் பகவானைப் பற்ற வருகிறான்.
திரௌபதி பற்றுகளை விடும்வரை பரந்தாமன் அருள் செய்யவில்லைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டுக் கண்ணனைச் சரண் புகுந்தாள். ‘கோவிந்தா!’ என்று கதறிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள். திக்கற்ற நிலையிலே அவளுக்கு வேறோர் சொல்லும் சொல்லத் தோன்றவில்லை.
கண்ணீர் ஆறாகப் பெருகிச் சோர, துகில் பற்றியிருந்த கைகள் சோர, மெய் சோர, கோவிந்தா! கோவிந்தா! என்று வாய்விட்டு அலறினாள்.
ஆரா அமுதனின் திருநாமத்தை உச்சரித்த அளவிலே, அவள் நாவில் ஆரா அமுதம் ஊறியது. மெய் புளகாங்கிதமடைந்து உள்ளமெல்லாம் உருகிக் கரைந்தது.
இப்படி உருகிக் கரைந்த நிலையிலும் அணித்தே இருந்த துவாரகையிலிருந்து கண்ணன் நேரில் வந்து அருள் செய்யவில்லை.
அவன் திருநாமமாகிய கோவிந்தநாம சங்கீர்த்தனமே அவளுக்கு அபயமளித்து அவள் மானத்தைக் காத்தது.
கண்ணன் திருநாமம் துகில் வளர்க்கும் சித்துவேலை செய்தது.
இது போலவே இறகிழந்த சம்பாதிமுன், ராமநாமத்தைப் பஜித்த அளவிலே இறகுகள் வானளாவி வளர்ந்தனவாம்.
திரௌபதி கோவிந்தன் நாமத்தை உச்சரித்தாள். அவள் துகில் வளர்ந்து கொண்டே போயிற்று. சம்பாதி ராமன் நாமத்தை உச்சரிக்கவில்லை. சுற்றி நின்ற வானரர்கள்தாம் உச்சரித்தனர் சம்பாதிக்காக; பிறர் பஜித்த அளவிலே ராமநாமம் அவனுக்கு அருள் சுரந்தது.
கண்ணன் பரத்துவநிலையில் அதாவது தெய்வநிலையில் நின்று பக்தர்களைச் சோதித்துக் காப்பான்.
ராமனோ அவதாரநிலையில் அதாவது மனிதநிலையில் பக்தர்களைக் தேடிவந்து தானகவே கருணைபாலித்துக் காப்பான்.
காகுத்தன் கருணையைப் பெறுவதற்கு, சர்வசங்க பரித்தியாகம் அதாவது சகலத்தையும் துறப்பது வேண்டியதில்லை. அவன் எளியார்க்கு இன்னருள் புரியும் எளியவனான சௌலப்யசீலன்.
ஒரு முறை ராமா என்று அவன் திருநாமத்தைச் சொன்னால் போதும் உடனடியாக வந்து பேரருள் புரிவான்.
ஸ்கருதேவ ப்ரபந்நாய தவாஸ்மதி
ச யாசதே I
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி
ஏதத் வ்ரதம் மம II
ஒருவன் தன் தகுதியின்மையைச் சிந்திக்காமல் என்னை ஒரு முறை சரணம் பற்றினால் போதும்; அவனைச் சகல பூதங்களிடமிருந்தும் ரட்சிப் பேன். இது என் இலட்சியம் என்கிறான் ராகவன்.
என்னை வந்தடைந்து, ‘ஹே ராமா! இந்த ஆத்மா உன்னுடையது’ என்று ஒரு முறை சொன்னபோதிலும் அவனுக்கு அபயம் அளிப்பேன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இது என் உறுதியான கொள்கை என்கிறான் ராமன்.
மற்ற எந்தக் கொள்கை மாறினாலும் இந்தக் கொள்கை மட்டும் மாறாது.
என்னைச் சரணம் பற்றிய சரணாகதன் என்னை விட்டு விலகப் பார்த்தாலும் நான் அவனை விடாமல் பற்றிக் கொள்வேன் என்கிறது இந்த ராம சரமசுலோகம். ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்ற கீதா சரமசுலோகம் போன்று புகழ்ப் பெறுவது இந்த ஸ்ரீராமாயண சரமசுலோகம்.
இதன் மூலம் சரண்யன் சரணாகதனை நான் விடேன் என்ற உறுதிப்பாட்டை வெளியிடுகிறேன்.

Friday, November 20, 2015

எமதருமன்!

எமதருமன்!
உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.
விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள். எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.
பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார். இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு. சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான். அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார். ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார். விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார். இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன். ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.
பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது. மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார். அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.
எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன். சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது. எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.
நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது. அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம். அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு. பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.
அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார். அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.
பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர். ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை. எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது

தீபாராதனை செய்யும் முறை

தீபாராதனை செய்யும் முறை: தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.
- சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் – ஒவ்வொரு இடத்திலும் “ஓம்” உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.

Tuesday, November 17, 2015

> வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்! - கந்தசஷ்டி சிறப்பு இடுகை 
1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்:
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.
நவ ரத்தின கற்களில் போலிகளை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி !!
அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும். மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன. எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.
ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும்.
இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.
நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.
பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.
நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.
சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.
வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.
பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.
பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.
இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.
அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது. இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும்.
ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது. அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது ஓரளவு பலன் தரும்.
ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது. தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்
இன்று எங்குப்பார்த்தாலும் ராசிக்கல் மோகம் தலைவிரித்தாடுகிறது இந்த மோகத்தைப் பயன் படுத்தி பல போலி நிறுவனங்களும் நபர்களும் பல லட்சம் ரூபாய்க்களை அறுவடை செய்கிறார்கள்
மக்களுக்கு ராசிக்கல்லைப் பற்றி அதிகம் தெரியாததனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலே ஏமாந்துப் போகிறார்கள்

இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது-இந்து-மதம்-ஒரு-பார்வை

இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது-இந்து-மதம்-ஒரு-பார்வை
★★★★★★★★★★★★★★★
முதலில் இறப்பு என்றால் என்ன என்பதை காண்போம்.
இறப்பு என்பது பழுதடைந்த உடல் செயல் இழப்பதையே இறப்பு அல்லது மரணம் என்று கூறுகிறார்கள்.
நாம் எப்படி சட்டை கிழிந்து விட்டால் அந்த சட்டையை தூக்கி எரிந்து விட்டு புது சட்டை போட்டு கொள்கிறோமோ அதே போல் ஆன்மா உம் புது உடலை எடுக்கும்.
புது உடலை எடுக்கும் நிகழ்சியை மறு பிறப்பு என்று கூறுகிறார்கள்.
ஆனால் இந்த மறு பிறப்பு என்பது உடனே நிகழ்ந்து விடாது.
ஒரு உடலை ஆன்மா விட்ட வுடன் அந்த ஆன்மா அந்த உடலுடன் இருந்த போது என்னென்ன கர்மங்கள் செய்ததோ அதற்க்கு தகுந்தாற்போல் அது பாவ புண்ணியத்தை சுமந்து கொண்டு இருக்கும். மேலும் கர்ம வாசனைகளும் சுமந்து இருக்கும். கர்ம வாசனை என்றால் நல்ல எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். கெட்ட எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும்.
இப்படி ஓர் உடலை விட்டவுடன் ஆன்மா அந்த உடலின் பாவ புண்ணியம் மற்றும் கர்ம வாசனை இவற்றை சுமந்து செல்லும்.
கருட புராண சாஸ்த்ர படி இந்த ஆன்மா யம தூதர்களால் எடுத்து செல்லப்பட்டு செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அனுபவிக்க விடுவார்கள்.
புண்ணிய காரியங்கள் செய்து இருந்தால் அதற்க்கு உண்டான சுப பலனையும் அந்த ஆன்மா அனுபவிக்கும்.
பாவ புண்ணியங்கள் தீர்ந்த பிறகு அந்த ஆன்மா மீண்டும் மேகங்களில் தூக்கி எறியப்படும்.
மேகங்களின் மழையால் அந்த ஆன்மா பூமியை வந்து அடையும்.
பூமியில் விழுந்த வுடன் அந்த ஆன்மா தண்ணீரோடு தண்ணீராக இருந்து தானியங்களை வளர செய்யும்.
அந்த தானியம் உயிரினத்தின் உடலில் உணவாக செல்லும்.
உடலின் உள்ளே உணவாக சென்ற அந்த ஆன்மா உயிர் அணுவாக மாறும்.
அந்த ஆணின் உயிர் அணு கலவியின் போது பெண்ணின் உடலில் செலுத்த படும் போது அந்த ஆன்மா ஒரு உடலை பெரும்.
அந்த உடல் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும்.
பிறகு வெளியே வரும்.
மீதி உள்ள கர்மத்தை வெளியே வந்த வுடன் செய்யும்.

குறிப்பு : ஒரு மனிதன் இறந்த உடன் , அந்த ஆன்மா
எடுத்து செல்லப்பட்டு
பாவ புண்ணியத்திற்கு உண்டான தீய சுப பலனை அனுபவித்த பிறகு கூட ஏன் அவன் மீண்டும் பிறக்க வேண்டும்.
ஏனெனில் அவன் இன்னும் உண்மையை உணரவில்லை. தான் ஆன்மா என்று உணர வில்லை . மேலும் மேலும் பொன் பொருள் போகம் இவற்றில் விருப்பம் கொண்டு இந்த உலகத்தில் கட்டபடுகிறான்.
இறைவனே கதி என்று இறைவனையே நோக்கி செல்பவர்கள் விரைவில் இறைவனை அடைவார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள்

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்.
பிருகு முனிவரின் அருள்(உங்களுக்கு ) இருந்தால் மேற்கூறிய மந்திரங்களை உச்சரித்து பலன்களை பெறவேண்டுகிறேன்
பிருகு முனிவர் அருளிய அதிசய மந்திரங்கள்
*************************************************************
பிருகு முனிவர் பாடல் :
பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே
செயமான ஈகாரம் உகாரம் கேளு
பாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

தற்பெருமையும் அகந்தையும் !!!

தற்பெருமையும் அகந்தையும் !!!

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள் எழுந்தன.
அர்ஜுனனுக்கோ விரைவில் வரப்போகும் குரு÷க்ஷத்ர யுத்தம் பற்றிய நினைவே இருந்தது. சிறந்த வில்லாளியாக தன்னை கருதிக்கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறுமாப்புடன் இருந்தான். யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப்பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று செருக்குற்றான். ராமன் ராவணனுடன் போர் செய்ய இலங்கைக்கு போகும்போது தனித்து பாலம் கட்ட முடியாமல் போனதைக்கூட தன்னால் செய்ய முடியும் என நினைத்துக்கொண்டான். கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார்.
அர்ஜுனனிடம், அர்ஜுனா! உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது. நான் ஏதாவது தவறுசெய்து அதை கேலி செய்யும் விதத்தில் சிரிக்கிறாயா? என தெரியாதவர் போல் கேட்டார். அர்ஜுனன் அவரிடம், நான் சிரித்தது உண்மைதான். ஆனால்,காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. ராமன் இலங்கைக்கு போகும்போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துதான் சிரித்தேன், என்று பெருமையோடு சொன்னான்.
அர்ஜுனனின் அகந்தையை அடக்க கிருஷ்ணர் உறுதிகொண்டார். அர்ஜுனா! இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால், உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், என்றார். அர்ஜுனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே ஹனுமான்! வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து குதித்தது. கிருஷ்ணரை வணங்கியது.
கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின்மீது நடக்கச் சொன்னார். குரங்கின் கால் பட்டதுதான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது. அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜுனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் தொய்ந்து விழுந்தான். கிருஷ்ணர் அமைதியாக அவனுக்கு அறிவுரை வழங்கினார். மனதை தளரவிடாதே அர்ஜுனா! வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியாது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனமைக்காக நீ அவமானப்பட்டதாக கருத முடியாது. ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக்கொள். தற்பெருமையையும் அகந்தையையும் உன் மனதை எப்போதும் பற்ற விடாதே. ஒரு வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை, என்றார்.
அர்ஜுனன் கிருஷ்ணரது அறிவுரையை ஏற்றுக்கொண்டான். குருக்ஷேத்திர போரின்போது தன் தேரின் மீது பறந்த கபித்வஜம் என்ற கொடியில் அனுமானின் உருவத்தை பொறித்துக்கொண்டான்

ஓதுவார்" என்போர்? விளக்கம்:

ஓதுவார்" என்போர்? விளக்கம்:
ஓதுதல் எனில் படித்தல், வாசித்தல் என்று பொருள். அவ்வாறு ஆலயத்தில் ஓதுபவர் ஓதுவார் ஆகிறார். இவர்கள் சிவன் கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற திருமுறைத் துதிகளை இசையோடு ஓதுபவர் (பாடுபவர்). இந்த சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இறைத்தொண்டர்கள். சைவவேளாளர் குலத்தவர்களே ஓதுவார்களாயினர். முற்காலத்தில் அரசர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பல தலைமுறைகளாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களை சிவன் கோயில்களில் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை மற்றும் பழநியில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது. இம் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைவே...

நல்வினைக்கான நன்மைகள்-

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் -ஸ்வாமி சிவானந்தா

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார். 2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர் 3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு 4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார் 5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார் 6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார் 7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார் 8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார் 9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார் 10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார் 11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர் 12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை 13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள் 14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது 15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர் 16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார் 17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள் 18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள் 19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார் 20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான் 21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார். 22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார் 23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார் 24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார் 25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும் 26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர் 27 வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர் 28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர் 29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர். 30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.


பாபங்களுக்கான வியாதிகள்-

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா


1 ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2 எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3 வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4 கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார் 5 விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6 தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7 பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8 மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார் 9 பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார் 10 மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார் 11 ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை நோய்க்கு ஆட்படுபவர் 12 பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால் துன்புறுவர். 13 வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்
14 இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார். 15 வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும். 16 சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார் 17 சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண் உடையவராகவும் பிறப்பார் 18 சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர் வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார் 19 தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர் ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய் உள்ளவராகிறார் 20 ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம் 21 புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார். 22 உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார் 23 வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம் 24 காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார். 25 கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர் 26 பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர் 27 தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார் 28 பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள் 29 காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள் 30 ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவ

சோமவார சிவபூஜை செய்யும் முறை !!!

சோமவார சிவபூஜை செய்யும் முறை !!!

இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம்
முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை
ஒருவரிடம் சொல்லவேண்டும். ஒருவரிடமும் சொல் சந்தர்ப்பம் இல்லை
என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும்
அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம். காபி, பால், பழம் முதலியன
சாப்பிட்டுக் கொள்ளலாம். உப்பு புளிப்பு கூடாது. மடியாக ஆடை உடுத்தி
ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும். கதை சொல்லும் போது கையில்
சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்
கணேஸாய நம:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷõத் பரப் பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நம :
சோமவாரக் கதை :
ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும்
பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள்அக்கோயிலில் பூதம்,
பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால்
எவரும் அக்கோயிலுக்குப்போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக
இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து
இருந்தது. அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான்
முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம்செய்து கொண்டும்
அமைதியாக இருப்பார்கள். ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி
தேவி ஜெயித்தார். ஈசுவரர்நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும்
இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார்.
ஆனாலும் ஈசுவரர், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி,
தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்றுகூறி
கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது
ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப்பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம்
யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார்.
அப்பிராமணர் அருகில் வந்ததும், "எங்கள் இருவரில் யார் வென்றார்கள்?"
என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால்கேட்பதைக் காட்டிலும்
கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை
விளையாடினார்கள்.மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால்
பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார்.
இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண
விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம்
ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு
இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம்எடுத்து சீழ், புழு முதலியன
வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம்
விமோசனம் கேட்டார். அதற்குபிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்;
அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால்
சோமவாரசமத்காரம் நடத்த நினைத்தார்.
ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்து கிணற்று
அருகில் சென்றார். அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு ஒரு அப்சரஸ்திரி
இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால்
பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார
சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.
அவள் கிணற்றில் விழச்சென்றபிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால்
மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழுஜென்மத்திற்கும்
பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்?
என்று கேட்டாள். அதற்குப்பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை
வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார். அதற்கு
அப்சரஸ்திரி 16சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால்
எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள்அருகிலுள்ள விதர்பநகர் சென்றால்
அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி
பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார
விரத மகிமையைக் கேட்டால் அவர்கள்சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம்
இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள். அந்ததபோதனர்
ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார். அங்கு கிணற்றடியில் இருக்கும்
பெண்களை சிறுபெண்கள் என்றுகூடநினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத
மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால்தங்களுக்குத்
கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும்
முறையையும் கூறினார்கள்.இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த
கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும்முடிக்கலாம்.
ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.
செய்யும் முறை :
சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும்
16 சோமவாரம் விரதங்கள்முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு
கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும்கொடுத்து; தானும் சாப்பிட்டு;
ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும்
கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும்
கொடுத்துவிடவேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்தால்
எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்றுஅப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும்
வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்கஅவளும் அப்பெண்கள்
கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார்.
விரதமகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம்
இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனைநிச்சயம் தருவார் என்பது உறுதி.
சோமவார விரத லட்டு செய்யும் விதம்
தேவையான பொருட்கள் :
நெய் - 1/4 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
வெல்லம் - 400 கிராம்
செய்யும் முறை :
முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை
வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய்,பொடி செய்த
வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய
உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.

பாபங்களுக்கான பிறவிகள்

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா


தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது. 1 உத்தமனாய் இருப்பவர் தேவனாகிறார் 2 உத்தமனாய் இல்லையெனில் முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார் 3 தருமவான் தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன். மூலிகைச் செடியாவான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான். 4 வலையில் சிக்கிய மீன் எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ; 5 கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம் பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது 6 மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன் விருச்சிகப் பிறவி அடைகிறான் 7 தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன் நண்டாக பிறக்கிறான் 8 குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர் வெளவாலாக தொங்குகின்றான் 9 தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள் மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர் 10 கூர்மையான நோக்குள்ளவர் வல்லூராக பிறப்பார் 11 பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர் பருந்துப் பிறவி வாய்க்கும் 12 மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர் கொக்காக பிறக்கிறார் 13 குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர் புலியாக பிறக்கிறார் 14 நண்பனுக்கு துரோகம் செய்தவர் நரியாக, கழுதையாக பிறக்கிறார் 15 காது கேளாதவரை இகழ்பவர் அங்கஹீனனாக பிறக்கிறார் 16 தாகத்துக்கு தண்ணீர் தராதவர் காக்கையாக பிறக்கிறார் 17 பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர் புழுவாகப் பிறக்கிறார் 18 விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர் புpசாசாக அலைய நேரிடும் 19 பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர் ஆவியாக அல்லாடுவர் 20 கொலை, கொள்ளை, செய்பவர் 100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார் 21 தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும் 22 மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர் திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார் 23 தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர் மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார் 24 விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர் பன்றியாக, கோழியாக பிறக்கிறார் 25 கோள் சொல்பவர் பல்லியாக, தவளையாக பிறக்கிறார் 26 உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர் அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர் 27 மாமிசம் புசிக்கின்றவருக்கு சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன 28 அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர் கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார் 29 தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர் ஊமையாக பிறக்கிறார் 30 தெய்வ நம்பிக்கை இல்லாதவர் பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது
ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.