தேவாரம்:
திருமுறைகளுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைத் தேவாரம் என்று அழைக்கிறோம்.
தேவ - ஆரம் என்று இதனைப் பிரிக்கலாம். தெய்வத்திற்கு மாலை போல்வது என்பது இதன் பொருள். மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல, சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றபொருளில் இப்பெயர் அமைந்திருத்தலைக் காணலாம்.
தே - வாரம் எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளைவிப்பது எனப்பொருள்படும். வாரம் - அன்பு. "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
மேலும், வாரம் - உரிமை. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம்.

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
ReplyDeleteதேவாரம் & திருமுறை பாடல்கள்
இங்கு தேவாரம் & திருமுறை பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் கேட்கலாம்
www.devarathirumurai.wordpress.com
www.devarathirumurai.blogspot.com
வணக்கம் நான் திருமூறை பாடல் யாஹூ இசைக்கருவீயீல் கேட்டு மகிழ்ந்தேன் இப்போழுது இயலவில்லை
ReplyDeleteஅதை சரி செய்யவும்