Saturday, January 15, 2011

ஷோடச உபசாரங்கள்

பூஜை ஏன் இப்படி?


பூஜையை நம்ப பெரியவங்க வகுத்து வெச்சு இருக்கிறதுலேயும் ஒரு முறை இருக்கு.
ஒரு பெரியவர் - நமக்கு தெரிஞ்சவர் நம்ம வீட்டுக்கு வரார்।
அப்ப என்ன செய்வோம்?
வாங்க வாங்கன்னு கூப்பிடுவோம்।
பழைய வீடுகள்ல உள்ளே அழைச்சு போய் உட்கார வைப்பாங்க।கை கால் கழுவ, குடிக்க தண்ணீர் கொடுப்பாங்க।
நடந்த களைப்பு போக தண்ணீர் குடிச்ச பின்னே குளிக்க ஏற்பாடு। உடம்புக்கு தகுந்தாப்பலே கிணத்து தண்ணி இல்லைனா உடம்பு வலிக்கு இதமா வென்னீர்। அப்புறம் உடம்பு துடைச்சு உடுத்திக்க துணி। பிறகு அவர் மனசுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் பேசறோம்। அப்புறமா சாப்பாடு। முடிஞ்சு வெத்திலை பாக்கு।சாப்பிட்டதற்கு தக்ஷிணை;। பெரியவராச்சா! நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கிறோம்। அவர் கிளம்ப வண்டி தயார் செய்து கொடுக்கிறோம்।

இறைவனை தியானம் செய்து அழைத்து ஆவாஹனம்।
ஆசனம் கொடுத்தல்; பாதங்கள்ல நீர் வார்க்கிறது। கைகள்ல நீர் வார்த்தல்। அப்புறம் ஆசமனம்- அதாவது தண்ணீர் கொடுத்தல்। நீராட்டல்; ஆசமனம்; உபவீதம் என்கிற பூணூல் அணிவித்தல்; உடை அணிவித்தல்। நகைகள் பூட்டுதல்। பூக்களால அர்ச்சனை; தூபம் என்கிற வத்தி யால் புகை காட்டுதல்; நெய் விளக்கு காட்டுதல்; செய்து இருக்கிற உணவை நிவேதனம் செய்தல்; வெற்றிலை பாக்கு சமர்ப்பணம்;
சூடம் காட்டுதல்; மந்திரங்களாலும் துதித்தல்; ஸ்வர்ண புஷ்பம் என்று தங்க புஷ்பத்தை சமர்ப்பித்தல்; சுத்தி வந்து நமஸ்காரம்; கண்ணாடி காட்டி, யானை/ ரதம் ஏதாவது ஒண்ணுல ஏத்திவிட்டு பிறகு செய்த பூஜை பலன் எல்லாத்தையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கிறோம்। இப்படி செய்கிறதை ஷோடோபசார பூஜை என்கிறாங்க.
ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்?
இது நமக்காக। பின்னே, எல்லாம் இருக்கிற - எல்லாமாயும் இருக்கிற இறைவனுக்கு நாம் தரக்கூடியது என்ன இருக்கு? அவனுக்கு என்ன வேண்டும்? அவன்கிட்டேதான் எல்லாம் இருக்கே?
அவனுக்கு என்ன வேணும்ன்னு நமக்கு தெரியாது।
அவன் எப்படி இருக்கிறான்னு கூட தெரியாது। நமக்கு புரியணுமேன்னு அவனையும் நம்ம மாதிரி ஒரு உருவம் கொடுத்து வெச்சு இருக்கோம்। நமக்கு என்ன எல்லாம் வேணுமோ அதெல்லாம் அவனுக்கும் வேணும்ன்னு நினைச்சு கொடுக்கிறோம்।

No comments:

Post a Comment