Monday, January 24, 2011

இந்து சமயம்

இந்து சமயம்

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது . பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
1. சைவம் - சிவனை முழு முதற் கடவுளாக கொண்டது.
2. சாக்தம் - சக்தியை முழு முதற் கடவுளாக கொண்டது.
3. வைணவம் - விஷ்ணுவை முழு முதற் கடவுளாக கொண்டது.
4. காணபத்தியம் - பிள்ளையாரை முழு முதற் கடவுளாக கொண்டது.
5. கௌமாரம் - முருகனை முழு முதற் கடவுளாக கொண்டது.
6. சௌரம் - சூரியனை முழு முதற் கடவுளாக கொண்டது.



No comments:

Post a Comment