Wednesday, February 2, 2011

சங்காபிஷேகம்

சங்கு செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் என இல்லறத்தாரும், இறைவனின் அருள்செல்வம் வேண்டுமென துறவிகளும் இப்பூஜையின் போது வேண்டுவர். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாக காட்டப்படுகிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குரு÷க்ஷத்ர களமே நடுங்கியது என மகாபாரதம் கூறுகிறது.அபிஷேகத்திற்கு பாத்திரங்களை பயன்படுத்தலாமே! ஏன் சங்கு என்ற கேள்வி எழும். சங்கு இயற்கையாகவும் வெண்மையானது. சுட்டாலும் வெண்மையாகத்தான் இருக்கும். மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கில் பால், பன்னீர், பஞ்சகவ்யம் என எதை நிரப்பி அபிஷேகம் செய்தாலும் அதை கங்கையாக பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment