விதிப்படி நடக்கும் என்ற பழமொழி மனிதன் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகிறதா?
ஜோதிடத்தைப் பொறுத்தவரை உதிக்கும் போது விதிக்கப்பட்டது மற்றும் விதிப்படி நடக்கும் என்ற கூற்றும், விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூற்றும் பரவலாக கூறப்படுகிறது.
இதில் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற கூற்று ஜோதிடத்தில் வந்தது எப்படி என்பதை முதலில் பார்ப்போம். விதி என்றால் லக்னம் என்றும், மதி என்றால் ராசி (சந்திரன்). லக்னத்தால் ஏற்படும் பாதிப்புகளை, ராசி (சந்திரன் நின்ற நிலை) நன்றாக இருந்தால் தவிர்த்துவிட முடியும்.
சக்தி வாய்ந்த சில பரிகாரங்கள் மூலமாக தலைவிதியையும் மாற்றிவிட முடியும் என சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உதாரணமாக பூர்வ புண்ணிய ஸ்தானம் ஓரளவு நன்றாக இருந்து, சந்திரனின் நிலையும் நன்றாக இருந்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி பெறலாம்.
பொதுவாக நிறைய சங்கடங்களை ஒருவர் சந்திப்பதற்கு, அவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இல்லாமல் இருப்பதே காரணம். இதுபோன்றவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்ய முடியும் என சிலர் கேள்வி எழுப்பலாம்.
ஒவ்வொரு ஆண்டிலும் புர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சில மாதங்கள் அல்லது சில நாட்கள் ஆட்சியோ, உச்சமோ (கோச்சாரத்தில்) அடையும். அந்தக் காலகட்டத்தை பரிகாரம் செய்வதற்கு ஏற்றதாக தேர்வு செய்து, அந்த ஜாதகருக்கு ஆகம விதிகளின்படி பரிகாரம் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.
அதனால் ஒருவரது ஜாதகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அவை ஏமாற்றுத்தனமாக மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்கு பரிகாரங்கள் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.எந்த கிரகம் சரியில்லாமல் இருக்கிறது என்பதைப் பார்த்து, அதற்கான மந்திரங்கள், கோயில்களைத் தேர்வு செய்து குறிப்பிட்ட காலகட்டத்தில் பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

No comments:
Post a Comment