அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?
தருமர் பீஷ்மரை நோக்கி 'வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?' எனவும், 'அரசன் தனக்குத் துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? ' என வினவ பீஷ்மர் கூறலானார்.
உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களைப் பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான்.அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார்.அரசனுக்குத் துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களைச் சமமாக கருதத் தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.நாட்டின் பொருளைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும்.ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும்.நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும்.நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்.அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும்.எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான்' என்றார்.
மன்னருக்குள்ள பண்புகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூறப் பீஷ்மர் உரைக்கலானார்

No comments:
Post a Comment