ஜோதிட விஞ்ஞானம்!
மனித ஜீவிதத்தில் முன்னேற்றமும், ஷேம நலமும் முக்கியமான கருத்துகளாகும். அகிலமெங்கும் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், மனிதனை மேம்படுத்த வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. நம் வாழ்வின் இன்றைய லௌகீக சௌகரியங்கள் சந்தோஷமான அனுபவங்களின் பின்னணியில் நவீன விஞ்ஞானத்தின் எழுதப்படாத பக்கங்கள் இருக்கின்றன.பௌதீகம், ரசாயனம், உயிரியல் விஞ்ஞானங்கள் அந்தந்த துறைகளில் மனித சமூகத்திற்கு பல பயன்பாடுகளைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு விஞ்ஞானமும், மனித லௌகீக சௌகரியங்களுக்கு பங்களித்திருப்பதை நினைவு கோரும் அதேவேளையில், இதே விஞ்ஞானம்தான் பேரழிவிற்கான ஆயுதங்களும், உயிரியல் ஆயுதங்களையும் மனித இனத்தையே சுத்தமாக மாய்த்துவிடும் அணு ஆயுதங்களையும், கண்டுபிடித்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன இந்த அடிப்படை விஞ்ஞானங்கள் - அதன் ஆக்க, அழிவு சக்திகளின் கூறுகளிடையேயும், அதன் ஆராய்ச்சிக்கான இலக்கு மனித நலம் மற்றும் முன்னேற்றம் குறித்தே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பினும் கோடி கோடியாக பணத்தை இரைத்து மனித சக்தியில் சிறந்தவற்றிற்கு காப்புக்கவசம் இட்ட இத்துறைகள், வருங்காலத்தில் மனித குலத்திற்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய கணிப்புகளை இன்றுவரை செய்ய முடியாதது ஏன்?
தனக்கு எதிராக என்ன இருக்கிறது, என்று அறிய ஆசைப்படாத ஒரு தனிமனிதனைக் கூட காண முடியாது.லௌகீக விஞ்ஞானங்களின் பங்களிப்புகளும், சாதனைகளும் எவ்வளவு தூரம் சென்றிருப்பினும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தாக இருப்பினும் எதிர்காலம் குறித்த மனிதனின் பிரயாசைகளை கண்டுபிடிப்பதில் இவ்விஞ்ஞானங்கள் ஒன்றையும் பங்களித்துவிடவில்லை.
ஜோதிட விஞ்ஞானம் அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது. குழந்தை பிறந்த அந்தக்கணம் முதல், அவன் / அவள் என்னவாக இருக்கப் போகிறார்கள், என்ன கல்வி கற்பது, எது மாதிரியான வாழ்க்கை அமையும், உடல் நலம், எப்படியிருக்கும், என்ன மாதிரி கஷ்டங்களையும், சோதனைகளையும், நன்மைகளையும், இன்பங்களையும் அடையப் போகிறார்கள், தங்களுடைய வாழ்க்கைத்துணை எங்கிருந்து வரப்போகிறார், தங்களின் குழந்தைகளின் எதிர்காலம், இந்தப்பூமியில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகிறார்கள் போன்ற வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களை ஜோதிட விஞ்ஞானம் மட்டுமே மிகச் சரியாக கணிக்கிறது, என்பது மிகையான கூற்று அல்ல.
ஒருவர் வாழ்க்கையின் அனுபவங்களை ஜோதிடம் விளக்கமாக பார்த்து, சரியான கணித முறைப்படி கிரகஸ்தானங்களை கணித்து, பலாபலன்களை கூறும் உண்மையான விஞ்ஞானமே ஜோதிடம், இது மிகவும் அறிவுபூர்வமானது, வாழ்க்கைக்கு மிகவும் தொடர்புள்ள வழிகாட்டியே ஜோதிடம்.மற்ற துறை சார்ந்த விஞ்ஞானங்கள், குறிப்பிட்ட அறிவுப் பிரதேசத்தை மட்டுமே திறக்கிறது, ஆனால் ஜோதிடமோ, மனித இருப்பின் எல்லா பரிமாணங்களையும் அலசுகிறது.
ஒரு தொலைநோக்கி உபகரணம் எவ்வாறு தூரத்திலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் இவற்றை நம் பார்வைக்கு அருகில் கொண்டு வருகிறதோ, அதுபோலவே ஜோதிட விஞ்ஞானம், ஒருவனின் இறந்த, நிகழ், எதிர்காலங்களைப் பற்றிய சித்திரத்தை அளிக்கிறது.
போலி ஜோதிடர்களின் மாய வலையில் சிக்கியவர்களும், இந்த விஞ்ஞானம் பற்றி அவநம்பிக்கை கொள்பவர்களும் ஒன்றை கவனிக்க வேண்டும் : நாம் இதுவரை முயற்சி செய்து பாத்திராத ஒன்றை சோதனை முயற்சி செய்வது சரிதானே? போலி மருத்துவர்கள் இருப்பது தெரிந்தாலும், நல்ல மருத்துவத்தை நாம் தேடிப் போவதில்லையா? ஜோதிடம் என்பது பகுத்தறியும் அறிவியல். நிச்சயமாக அது உங்களை ஏமாற்றாது. மாறாக, அது வாழ்வை வளப்படுத்தி தெளிவான வெளிப்பாடுகளில் உதவிகரமான பாதைகளை நமக்குக் காட்டுவதாகும்.
2000 வருடங்களுக்கு முன்பு, குழந்தை ஏசு பிறந்த போது இந்தியாவின் புகழ்பெற்ற ஜோதிட சாஸ்திரிகள், அப்போதைய கிரக ஸ்தானங்களை ஆராய்ந்து கடவுளின் பிறந்த நேரம், இடம் குறித்து நிர்ணயம் செய்து, கடவுளை வணங்க பெத்லஹேம் நகருக்குப் புறப்பட்டுப் போனதாக புனித வேதாகமத்தில் கூட சாட்சியங்கள் இருக்கிறது.
மேற்கத்திய ஆங்கில மருத்துவ முறையான `அலோபதி' இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், மூலிகை இயற்கை வைத்தியங்களை விஞ்ஞானமற்றது என கண்டித்திருக்கிறது. தற்போது இந்த நிலைமை தலைகீழாக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவம் மேலான சிகிச்சை முறை என இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மருத்துவமனைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவைகள் இன்று `ஆயுர்வேத' மருத்துவத்தை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உலகெங்கும் ஆயுர்வேதம் - விஞ்ஞானமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த அங்கீகாரம் பல சீரிய ஆய்வுகளுக்குப் பிறகே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.மனித குல ஷேமத்திற்காக, காடுகளில் தவம் புரிந்த பல ரிஷிகளால் உருவானதே ஆயுர்வதே மருத்துவமுறை. இந்த மருத்துவப் பொக்கிஷங்கள் அவர்களின் ஆழ்ந்த தியானத்தினாலும், அக தரிசனத்தினாலும் மட்டுமே நமக்கு இன்று கிடைத்திருக்கிறது. அவர்களில் பலர் `ஜோதிடம்' என்பதையும் சிறப்பாகக் குறிப்பிடுகின்றனர்.
மனிதனின் இந்த பூமியின் அவனது இருத்தல் குறித்த எதிர்காலம் பற்றிய பார்வையை, அவன் எதிர்கொள்ளப்போகும் துயரங்களை, நன்மை, தீமைகளை கணித்து, அவற்றிற்கு சிறந்த பரிகாரங்களையும் அளிப்பது ஜோதிட விஞ்ஞானம் மட்டுமே.ஜோதிடம் என்பது ஒரு தூய - கணித சாஸ்திரமாகும். இதை யார் வேண்டுமானாலும் கற்று பயன்படுத்தலாம். சாதி, மதம் பற்றிய பேச்சுக்கே இதில் இடமில்லை. இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் - இந்த முயற்சிகள் ஆசைப்பட்ட முடிவுகளை கொடுத்திராத போதிலும் - ஜோதிட விஞ்ஞானத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி, விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, தாங்கள் கண்டடைந்த முடிவுகளை பாரபட்சமின்றி வெளிப்படுத்த வேண்டும். அது போன்ற முயற்சி ஜோதிடத்தை தூய - விஞ்ஞானமாக நமக்கு அறிவிக்கும். மனித குலத்தின் ஒரு சிறப்பான சகாப்தத்தை படிப்படியாக திறந்து காட்டும் முயற்சி அது என்பதில் சந்தேகமில்லை.

No comments:
Post a Comment