கல்வியைப் பொறுத்தமட்டில் ஜோதிட ரீதியாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மென்பொருள் நெறிஞராகவோதான் ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதாவது வருவாயைத் தரக் கூடிய கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி ஆர்வத்தின் மீது கவனம் செலுத்த மறுக்கிறார்கள். கல்வியைப் பொறுத்தமட்டில் ஜோதிட ரீதியாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?கல்வி என்பது ஆய்விற்குட்பட்ட ஒரு விஷயம். சங்க காலத்தில் கல்வியில் புத்திமானாவான், பண்டிதனாவான், கணிதத்தில் வல்லவனாவான், நிபுணனாவான் என்றெல்லால் சொல்வார்கள். இப்பொழுது கல்வி வானளாவ வளர்ந்துள்ளது.பொதுவாக புதன் கிரகமே கல்விக்குரியவன். அதாவது வித்தைக்குரியவன். கற்றல் என்பது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேற்கொண்டு கற்க வேண்டும் என்கின்ற எண்ணத்தைக் கொடுப்பதே புதனாவான்.லக்னத்தில் இருந்து 2வது வீட்டில் என்ன கிரகம் அமைந்துள்ளதோ அதைப் பொறுத்து குழந்தைக்கு ஆரம்பக் கல்வி அமையும். 4வது இடம் அல்லது வீடு உயர் கல்வியை குறிக்கக் கூடியது. 9வது இடம் மேற்படிப்பை குறிக்கக் கூடியது. இது ஆராய்ச்சிக் கல்வி (பி.ஹெச்டி.) வரை சொல்லலாம். ஆக 2, 4, 9 இடங்களைப் பொறுத்துதான் கிரகங்களின் செயல் இருக்கும். இந்த இடங்களுக்கான கிரகம் வந்து சுப கோள்களுடன் சேர்ந்திருப்பது அல்லது சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருப்பது பொறுத்து கல்வி வாய்ப்பு அமையும். எனவே, என்னதான் தாய், தந்தையர் வற்புறுத்தினாலும், காலப்போக்கில் இவர்களுடைய கிரக அமைப்பிற்கு தகுந்தார் போலதான் யு.ஜி.ல என்ன பண்ணியிருந்தாலும், பி.ஜி.ல கிரக அமைப்பு ஒத்து வந்தால் மட்டுமே மேற்படிப்பு தொடரும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச எவ்வளவோ பேர் எம்.பி.ஏ. படிச்சு துறை மாறியிருக்காங்க. நம்முடைய கிளைண்ட்ல நிறைய பேர் முதல்ல காசு வர்ற துறைனு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, அப்புறம் ·பாரின் போய் எம்.பி.ஏ. படிச்சு மாறியிருக்காங்க. ஆகவே, துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுதான் ஒரு குழந்தையுடைய வெற்றின்னு நாம சொல்லலாம்.தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுப்பது போல, அவங்க எந்தத் துறையில ஷைன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு சேர்த்துவிட்டாங்கன்னா அதுதான் அவங்களுடைய பெரிய குறிக்கோளாக இருக்கும்.இதை எந்த இடத்தில் செய்ய வேண்டும்?
பால பருவத்திலேயே அதை நாம் தேர்வு செய்யறது நல்லது. ஒரு குடும்பம் வந்திருந்தாங்க. அந்தக் குழந்தைக்கு செவ்வாய் உச்சம், குரு ஆட்சி, இந்திய அரசமைப்புச் சட்டம், ஆட்சி அதுக்கான கோள்களெல்லாம் நல்லா இருந்தது. அதை பார்த்துட்டு ஐ.ஏ.எஸ். படிக்க வையுங்கள்னு சொன்னோம். அதுக்கு தகுந்தமாதிரி புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறது, எப்பவும் நியூஸ் பேப்பர் படிக்க வைக்கிறோம் அப்படிங்கறாங்க.
பால பருவத்தில் இதைச் செய்யாதவர்கள் குறைந்தபட்சம் 13, 14வது வயதுல, அதாவது 10வது முடிச்சு 11வது சேரும் போது மாணவர்கள் விருப்பப் பாடத்தை தேர்வு செய்கிறார்கள். அந்த நேரத்தில் சரியான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்த நிலையில்தான் நிறைய பேர் நம்மை அணுகுகிறார்கள். சில பேர் பிறக்கும் போதே ஜாதகத்தை கணிச்சு செய்கிறார்கள்.
குழந்தை பிறக்கும் போதே எந்தத் துறையில சேர்க்கலாம்னு முடிவு செய்கிறார்கள். அதற்கேற்ற பள்ளியைத் தேர்வு செய்து சேர்க்கின்றோம் என்று கூறுகிறார்கள். மற்றவங்களெல்லாம், அதாவது அப்பா ஒரு துறை, அம்மா ஒரு துறைன்னு இருக்கிறவங்களெல்லாம் 10வது முடிச்சு 11வது சேரும் போது எந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிய வருகிறார்கள்.
இப்படி பார்க்கும் போது அந்த ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருந்தால் அவரின் அறிவுத்திறன் குறையும். அதாவது நன்றாக படித்திருப்பார். ஆனால் சரியாக எழுதியிருக்க மாட்டார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி கல்விப் பருவத்தில் குறுக்கிட்டால் கல்வியின் மீதான கவனம் முழுமையாக இருக்காது. இதை நன்கு உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும்.
. ஆக, 2, 4, 9 ஆம் இடத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், இந்தக் காலப் பருவத்தில், விடலைப் பருவத்தில் எந்த தசாபுத்தி நடக்கிறது என்று பார்க்க வேண்டும். கல்வியில ஈடுபாடுள்ள, ஈர்ப்பு சக்தியுள்ள, நினைவாற்றல் தூண்டக்கூடிய கிரக அமைப்புகள் தசாபுத்தியில் நடக்கிறது என்றால் எவ்வளவு பெரிய சவாலான படிப்பாக இருந்தாலும் நாம அவனைச் சேர்க்கலாம். இல்லையென்றால் குழந்தையினுடைய ஜாதகத்தை வச்சு எடை போடலாம். மந்த திசை நடந்தால், அப்ப அதற்கேற்ற மாதிரி சாதாரண பள்ளியில் சேர்க்கலாம்.சமூகத்தில் நம்முடைய உயர் நிலையை அடிப்படையாகக் கொண்டு வாயைத் திறந்தாலே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை எல்லாம் தவிர்க்க வேண்டும். கிரகங்களின் பாதிப்பு இருக்கும்போது அவன் பாதை மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் கொடுத்த அழுத்தத்தினால், அந்தப் பையன் ஏ.பி.சி.டி. உச்சரிக்கறான். அப்பறமா நான் சொன்னது சரிதானான்னு கேட்கிறான். அப்ப அவனுக்கே அவன் மேல நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எல்லா சப்ஜெக்ட் ஆசியர்களும் டல் ஸ்டூடண்ட் டல் ஸ்டூடண்ட்னு நோட் எழுதி அனுப்பி அதில் அவன் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சனி திசை வந்தாலே இழுக்கு, ஏளனப்படுத்தப்படுதல், அவமானப்படுதல் ஆகியவற்றைக் கொடுக்கும். அதே சனி பிற்பகுதியில் அவமானத்தை வெகுமானமாக மாற்றும்.
சனி திசை நடந்தாலே ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். அப்ப நாம் அருகில இருந்து, உன்னைப் போல யாருமே இல்லை, யு ஆர் வெரி கிரேட் அவங்க சொல்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே, அம்மா நான் இருக்கேன், உன்னைப் பத்தி எனக்குதான் தெரியும் என்று கூற வேண்டும்.
சனி திசை நடக்கும் போது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். பொதுவாகவே சனி கிரகம் கார்பன், கார்பன் டை ஆக்சைடால ஆனது. அதனால ஒரு சோம்பல் வரும். அதனால அந்தக் வெளிக்காற்று, பிராண வாயு உள்ளே போகும்போது இயல்பாவே ஒரு சுறுசுறுப்பு வரும். சனி திசை நடக்கிற பிள்ளைங்களுக்கு தெரிஞ்சதுல இருந்து தெரியாததுல வரணும்.
webdunia photo WD
அவர்களுக்கென்று ஒரு பாடத்திட்டத்தையே உருவாக்க வேண்டும். மேஷ ராசியா அந்தப் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர். ரிஷப ராசின்னா அவங்கள இந்தப் பள்ளியில் சேர். இங்கு ரிஷப ராசி மாணவ மாணவிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனி பள்ளிகளேத் துவக்கலாம். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரங்களுடைய கற்கும் திறனும் வித்தியாசப்படும். நாம அதுல ஆசியராக இருந்தா அந்த கற்கும் திறனை அறிந்து அதற்கேற்ப கற்பிக்கலாம்.
சில பிள்ளைகள் எல்லாம் 6 வயசு, 7 வயசுலேயே ஒரு மாதிரி இருப்பார்கள். அப்பவே சிலருக்கு திமிரெல்லாம் இருக்கும். அதைத்தான் விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு சொல்வார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் எல்லாம் வேகமாகப் படிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் சப்ஜெக்ட்ட தாண்டி யோசிப்பாங்க. தொடர்புகளை பார்ப்பார்கள். மிதுன ராசி பிள்ளைங்கள் எல்லாம் இப்போதைக்கு ஓ.கே. இது போதும்னு யோசிப்பாங்க. கடக ராசிப் பசங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா இதை செஞ்சு பார்த்தா எப்படி இருக்கும் என்று ப்ராக்டிக்கல்லா யோசிப்பாங்க. ஒரு ஆசிரியருக்கு ஜோதிடம் பற்றி தெரிஞ்சதுன்னா பிரம்மாண்டமா அந்தப் பையனை தட்டிக்கொடுத்து ஆக்கலாம். இதை பேஸ் பண்ணிதான் அவன் கேள்வியே எழுப்புவான். ஒரு கரும்பு பற்றி பாடத்தை நடத்திக்கிட்டு இருக்கும்போது எப்படியெல்லாம் கேள்விகள் எழுகிறேதா அதை வைத்தே அவனை எந்த ராசின்னு கண்டுபிடிக்கலாம். எல்லாமே கற்றல்தான்.
ஆனால் தற்போதைய பாடத்திட்டத்தை மாற்ற முடியாது. மேஷ ராசிக்கு ஒரு சிலபஸ் கொடுய்யான்னு அரசிடம் கேட்க முடியாது. மாணவர்களுக்கு கற்றல் இருந்தாலும், ஆசியருக்கு கற்பித்தல் இருந்தாலும் எளிமையாகும். இப்ப சனி திசை நடக்கிற பிள்ளைகளைப் பார்த்தால், அவனெல்லாம் கடைசியில் இருந்துதான் வருவான். அவன் ஸ்டார்ட்டிங்ல தூங்கிடுவான். கடைசியில வந்து என்ன சார் சொன்னீங்க அப்படீன்னுவான். எனவே அப்ப அவனுக்கு என்னவாகும் மத்தவங்க சொல்றது நம்மளுக்கு புரிய மாட்டேங்குது அப்படீன்னு நினைப்பான். அவனையும் பங்கேற்க வைக்க வேண்டும். துவங்கும்போதே காலைல என்ன சாப்பிட்டாய், இது என்ன தெரியுமா அப்படின்னு பேசவிட்டுடனும். அவனுக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் சொல்ற வரைக்கும் தூங்கிடுவான். அவனுக்கு தெரியாத சப்ஜெக்ட் சொல்லும்போது மட்டும்தான் சார் என்ன சார் சொன்னீங்க அப்டீன்னுவான். அவனைப் பற்றி ஆசிரியர்கள் தெரிஞ்சு வச்சிருந்தா நல்லாயிருக்கும். அதே போல அவங்களுக்கு பிடிச்சமாதிரி உணவு வகைகளை தேர்வு செஞ்சு கொடுக்கணும். இந்தந்த திசை நடக்கும் போது இன்னன்ன சத்துக்கள் எல்லாம் உடம்பில் குறையும். சனி திசை நடக்கும் போது இரும்புச் சத்து குறையும். செவ்வாய் திசை நடக்கும் போது சுண்ணாம்புச் சத்து குறையும். அதை தெரிஞ்சு சத்துணவிற்கு முக்கியத்துவம் தந்து, காலையிலேயே குழந்தைகளுக்கு உணவு தரும் பள்ளிகள் எல்லாம் இருக்கின்றன. அதில் அவர்களைச் சேர்க்க வேண்டும்

No comments:
Post a Comment