பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்
தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.
ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.
உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.
பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.
பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.
அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.
செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.
உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.
செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.
அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.
ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.
தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.
இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)
லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.
முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.
No comments:
Post a Comment