இறைவனை அடைய வேண்டுமானால் மூன்று விதமான வழிபாடு தேவை என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவை குருவழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகியவை. குருவையும், கடவுளையும் வழிபட்டால் மட்டும் போதாது. சங்கம வழிபாடும் பக்திக்கு அவசியம். சங்கமம் என்பது இறையடியார்களை நாடிச்செல்வதாகும். அவர்களோடு கலந்து பழகுவதும், நல்ல விஷயங்களை விவாதிப்பதும், அன்னதானம் செய்தும் சங்கமவழிபாட்டில் அடங்கும். இதனையே பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் என்று சொல்வர். பெருமாளுக்குத் தொண்டு செய்தும், பெருமாளின் அடியாருக்குத் தொண்டு செய்தும் இறையருளைப் பெறமுடியும் என்று பாகவதம் குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment