Monday, May 16, 2011

பக்திபர சேவையின் நியதிகள்

கட்டுப்பாட்டு நெறி முறைகள்
Post


1. ஒரு உத்தமமான ஆன்மீக குருவை அடைதல்.
2. அந்த குருவிடமிருந்து தீட்சை பெறுதல்.
3. குருவின் ஸேவையில் ஈடுபடுதல்.
4. குருவிடமிருந்து போதனைகளைப் பெற்று பக்திபரமான சேவையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்.
5. நமது பழைய ஆசார்யர்களின் சுவடுகளை பின்பற்றி குருவின் போதனைகளைப் பின் பற்றுதல்.
6. பரமாத்மாவை திருப்தி செய்ய எதையும் விட்டுக்கொடுத்தல், எதையும் ஏற்றுக் கொள்ளுதல்.
7. பக்திபரமான ஸேவை செய்வதற்கான வசதிகளுடன் இருந்து கொண்டு அதிகமானவற்றைக் குறைத்துக் கொள்ளுதல்.
8. விரதம் அனுஷ்டித்தல் (எண்ணங்கள், சொற்கள், செயல் ஆகியவற்றில் தீமையைத் தவிர்த்தல்).
9. பசுக்கள், ப்ராஹ்மணார்கள், வைஷ்ணவர்கள் மற்றும் ஆலமரம் போன்ற புனித மரங்களை வணங்குதல்.


இந்த ஒன்பதும் பக்திபர சேவையின் முதல் நியதிகள் ஆகும். மற்றவை பின் வருமாறு.

10. புனித நாமங்கள் மற்றும் தேவதைகளுக்கு எதிராக தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
11. நாஸ்திகர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும்.
12. நிறைய சிஷ்யர்கள் வேண்டும் என்று விரும்பக் கூடாது.
13. பல புத்தகங்களை அரை குறையாகப் படித்து விட்டு படித்தவர்போல் நடித்து மற்றவர்களை தம் பால் திருப்பக் கூடாது. பக்திபரமான ஸேவைக்கு பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை படித்தாலே போதுமானது.
14. லாப, நஷ்டத்தால் கலக்கம் அடையக்கூடாது.
15. எந்தக் காரணத்திற்காகவும் கவலையில் மூழ்கிவிடக் கூடாது.
16. உப தேவதைகளை வணங்காவிட்டாலும், அவர்களை நிந்திக்கக் கூடாது. மற்ற மத புத்தகத்திலுள்ள விஷயங்களை பின்பற்றா விட்டாலும் அதிலுள்ள விஷய்ங்களை நிந்திக்கக் கூடாது.
17. கடவுளையோ, அவர் பக்தர்களையோ நிந்திப்பதில் ஈடுபடக்கூடாது.
18. ஆண் பெண் உறவு போன்ற வீணான விஷயங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக்கூடாது.
19. அனாவசியமாக எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது.

மேற்கூறப்பட்ட 19 விஷயங்களும் பக்திபரமான ஸேவைப் பாதையின் நுழைவாயில் ஆகும். அவற்றில் முதல் மூன்று (குருவை அடைந்து அவரிடம் தீட்சை பெற்று, அவருக்கு சேவை செய்தல்) மிக முக்கியமானது. மற்ற விஷயங்கள் பின் வருமாறு.


20. கடவுளின் புகழ் கேட்டல்.
21. அவர் புகழ் பாடுதல்.
22. அவரை தியானித்தல்.
23. கடவுளின் பாத கமலங்களை தியானம் செய்தல், மற்றும் அவருக்கும் அவர் பக்தர்களுக்கும் ஸேவை செய்தல்.
24. அவரை வணங்குதல்.
25. அவரை பிரார்த்தித்தல்.
26. தன்னை அவருடைய நிரந்தர ஸேவகனாக நினைத்தல்.
27. தன்னைக் கடவுளின் நண்பனாக நினைத்தல்.
28. அவருக்கே எல்லாவற்றையும் ஸமர்ப்பித்தல்.
29. தெய்வத்தின் முன் ஆடுதல்.
30. தெய்வத்தின் முன் பாடுதல்.
31. தன் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் அவரிடம் கூறுதல்.
32. அவர் முன் வணங்குதல்.
33. சரியான சமயத்தில் எழுந்து நின்று குருவிற்கும் கடவுளுக்கும் மரியாதை செலுத்துதல்.
34. கடவுள் மற்றும் குருவின் ஊர்வலத்தில் பங்கேற்றல்.
35. கடவுளின் புனித ஸ்தலங்களுக்கும், கோயில்களுக்கும் செல்லுதல்.
36. கோயிலை வலம்வருதல்.
37. சுலோகங்கள் கூறுதல்.
38. மனத்தில் கடவுள் பெயரை மெதுவாக உச்சரித்தல்.
39. பிரார்த்தனைக் கூட்டத்தில் கடவுள் பெயரை உரக்கக் கூறுதல்.
40. கடவுளுக்கு அர்ப்பித்தபின் அர்ப்பித்த ஊதுவத்தி மற்றும் மலர்களின் வாசனையை நுகர்தல்.
41. மீதியிருக்கும் பிரசாதத்தை உட்கொள்ளுதல்.
42. தினமும் மற்றும் விசேஷ உற்சவ காலத்திலும் ஆரத்தியில் பங்கேற்றல்.
43. தெய்வச் சிலையை ஒழுங்காகப் பராமரித்தல்.
44. தனக்கு மிகவும் விருப்பமானதை கடவுளுக்கு அர்ப்பித்தல்.
45. தெய்வத்தின் பெயர் மற்றும் உருவ தியானத்தால் சமயத்தைப் போக்குவது.
46. துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றுவது.
47. பக்தர்களுக்கு ஸேவை செய்தல்.
48. புனித ஸ்தலத்தில் வசிப்பது.
49. ஸ்ரீமத் பாகவதத்தின் விஷயங்களை ரசிப்பது.
50. பகவானுக்காக எந்த விதமான சவால்களையும் சமாளிப்பது.
51. எப்பொழுதும் கடவுளின் கருணைக்காக ஏங்குவது.
52. பக்தர்களுடன் பகவானின் அவதார ஜன்ம நட்சத்திரம் போன்ற நாட்களை கொண்டாடுவது.
53. பகவானைப் பூரணமாக சரணடைவது.
54. கார்த்திகை மாத விரதங்கள் போன்றவற்றை அனுஷ்டிப்பது.
55. உடலில் தார்மீக சின்னங்களை அணிந்து கொள்ளுதல்.
56. உடலில் கடவுளின் பெயர்களை குறித்துக் கொள்ளுதல்.
57. கடவுளுக்கு அணிவித்த மாலைகளை ஏற்றுக்கொள்ளுதல்.
58. சரணாமிருதத்தை உட்கொள்ளுதல்.


மேற்கூறிய 58 விஷயங்களில் 5 மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால் அவை தனியாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தார்மீக நியதிகள் 63 ஆகின்றன. அந்த 5 விஷயங்கள் பின் வருமாறு:

59. பக்தர்களை தொடர்பு கொள்ளுதல்.
60. கடவுளின் நாமத்தை உச்சரிப்பது.
61. ஸ்ரீமத் பாகவதத்தை சிரவணம் செய்தல்.
62. பவித்திர ஸ்தலத்தில் வசித்தல்
63. மற்றும் தெய்வத்தை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் வணங்குதல்.


இந்த பக்திபரமான கோட்பாடுகள் மனிதனை அமரத்துவத்திற்கே அழைத்துச்செல்கின்றன.

No comments:

Post a Comment