நாம கரணம்:
குழந்தைக்கு பெயரிடுதல். எளிய கர்மா. இரட்டைபடை எழுத்துக்கள் இருக்கணும் என்கிறாங்க பெரியவங்க. (க்,ச் மாதிரி புள்ளி எழுத்து கணக்கில்லே) பெண் குழந்தைகளுக்கு ஆ அல்லது ஈ யில் முடிவதாக வைப்பாங்க.
வைக்கிற பேரு கேட்க இனிமையா இருக்கணும். மாடர்ன்னா வைக்கிறேன்னு பலரும் அர்த்தமே இல்லாத சொற்களை பேராக்கறங்க. நல்ல அர்த்தம் இருக்கணும். தாத்தா பாட்டி பேர்களும் இறைவன் பேர்களும் எப்பவுமே நல்லது. எந்த நக்ஷத்திரத்துக்கு எந்த எழுத்திலே பேர் ஆரம்பிக்கணும்ன்னு கூட நியதிகள் இருக்கு. பஞ்சாங்கத்திலே போட்டு இருக்கும்.
கடவுள் பேரை வைக்கிறதாலே ஒரு லாபம். அடிக்கடி கடவுளை
கூப்பிட்டுகிட்டே இருக்கலாம். அஜாமிளன் கதை தெரியுமில்லையா?
வழக்கமா 11 ஆம் நாள்,16 ஆம் நாள்,21 ஆம் நாள்,31 ஆம் நாள், பெயரிடறாங்க. பிரசவம் முடிந்து சுத்தி செய்து அப்புறம் குழந்தை காதிலே "உன் பெயர் ........” அப்படின்னு சொல்லுவார். மத்த பெரியங்களும் அதேபோல சொல்லி ஆசீர்வாதம் செய்வாங்க
No comments:
Post a Comment