ஓரு ராஜா தன் மந்திரி பிரதானிகளை அழைத்தான். ""மந்திரி பிரதானிகளே! உடனடியாக நான் கடவுளைப் பார்த்தாக வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். கடவுள் இருக்குமிடத்தை யார் எனக்குத் தளிவாகச் சொல்லி, அவரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு லட்சம் பொற்காசு பரிசளிப்பேன்,'' என்றான். மந்திரிகள் விழித்தனர்.
"இவருக்கு என்னாயிற்று! திடீரென கடவுளைக் காட்டு,'' என்றால், எங்கே போவோம்' என்று தங்களுக்குள் முணுமுணுத்தனர்.இதைப் பார்த்த ராஜா, ""உம்...என்ன முணுமுணுப்பு... உங்களுக்கு ஒரு மாதம் தான் தவணை. அதற்கு மேலும், காலத்தை நீட்டித்தால், <உங்கள் உயிர் உங்களுக்கல்ல,'' என்று எச்சரிக்கை வேறு செய்தான். மந்திரிகள் பறையறிந்து நாடெங்கும் செய்தியைப் பரப்பினர்.லட்சம் பொன்னுக்கு ஆசைப்பட்ட பலர், ""கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார், கயிலாயத்தில் இருக்கிறார், சூரிய மண்டலத்தில் இருக்கிறார், வேதங்களில் மறைபொருளாக இருக்கிறார்,'' என்று வியாக்கியானம் செய்தார்களே தவிர, யாராலும் கடவுளைக் காட்ட முடியவில்லை.மாதமும் கடந்து விட்டது. அன்று மந்திரிகளைத் தூக்கில் போட ராஜா ஏற்பாடு செய்து விட்டான்.தானன் என்ற மந்திரியின் ஆறு வயது பெண் குழந்தை தன் தந்தைக்கு நேர இருந்த ஆபத்தை அறிந்தாள். நேராக அவைக்குச் சென்றாள்.""ராஜா! கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டினால், லட்சம் பொன் தருவதாக அறிவித்திருந்தீர்கள் அல்லவா! இப்போது, நான் ஒன்று கேட்கிறேன்.
கடவுள் இல்லாத இடத்தைக் காட்டுங்கள். என் தந்தையார் <இந்த அரசாங்கத்துக்கு இரண்டு லட்சம் பொற்காசுகளை அபராதமாகக் கட்டுவார்,'' என்றாள்.ராஜா விழித்தான்.""மன்னர் மன்னா! கடவுள் எங்குமிருக்கிறார் என்ற <உண்மையை உணருங்கள். அவர் "கற்றிடும் அடியவர் புத்தியில் <உறைபவர்' என்கிறார் நம் அருணகிரிநாதர். ஆம்...கற்றறிந்த அறிஞர்களின் அறிவே கடவுள். இனியேனும், இதுபோன்ற அறிவிற்கெட்டாத போட்டிகளை நடத்தி அப்பாவிகளை கொல்ல முனையாதீர்கள்,'' என்றாள்.
ராஜா தலை குனிந்தான்.

No comments:
Post a Comment