வள்ளுவரின் மனைவி வாசுகியின் தந்தை மார்க்கசகாயம். இவர், தன் மகளை திருவள்ளுவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். திருமணத்துக்கு முன் பெண் பார்க்கச் சென்று, அந்தக் காலத்திலேயே புரட்சி செய்தவர் வள்ளுவர். அவர், தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் குணநலன்களைப் பரிசோதித்து தெரிந்து கொள்ள நினைத்தார். மார்க்கசகாயத்திடம் ஒரு பிடி மணலைக் கையில் கொடுத்தார். ""இந்த மணலை உங்கள் மகளிடம் கொடுங்கள். அவள் இதை சமைத்து சோறாக்கினால், உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றார். வாசுகி சற்றும் தயங்கவில்லை. மணலைச் சமைத்தார். சோறாக
மாறியது. இதுகண்டு ஆச்சரியப்பட்ட வள்ளுவர், அவளது கற்புத்திறன் மற்றும் நம்பிக்கை கண்டு, அந்த அம்மையாரையே திருமணம் செய்து கொண்டார்.
சுட்டது பழைய சோறு
ஒருமுறை துறவி ஒருவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது.
வாமனர் பற்றி வள்ளுவர்
திருமாலின் வாமன அவதாரம் பற்றி வள்ளுவர் "மடியின்மை' (61) என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். "மடியிலா மன்னன் எய்தும்; அடியளந்தான்தாஅயது எல்லாம் ஒருங்கு'' என்னும் குறள் இதை உணர்த்துகிறது. அதாவது, ""திருமாலின் (வாமனர்) திருவடிகளால் அளக்கப்பட்ட இந்த உலகம் முழுவதையும் சோம்பலற்ற அரசன் வெற்றி கொள்வான்,'' என்பது இந்தக் குறளின் பொருள். ஒரு மன்னன் சுறுசுறுப்பாக செயல் பட்டால், உலகமே அவனுக்கு வசப்படும் என்பது இதன் கருத்து. "அடியளந்தான்' என்னும் சொல்லுக்கு "சூரியன்' என்று பொருள் சொல்வோரும் உண்டு. திருமாலே சூரியனாக உள்ளார் என்பதன் அடிப் படையில் "சூரியநாராயணர்' என்ற பெயரும் அவருக்கு உண்டு

No comments:
Post a Comment