ஒரு தந்தை புத்தகம் ஒன்றை வாங்கினார்.வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல அம்சங்கள் பற்றிய புத்தகம் அது. அதிலுள்ள முக்கிய வரிகளை அடிக்கோடிட்டார். தன் மகனுக்கு பயன்படுமே என அவனிடம் கொடுத்தார்.அதை அவன் திருப்பிக்கூட பார்க்கவில்லை. பழையபேப்பருடன் சேர்ந்து போய்விட்டது. அந்தத்தந்தை இறந்து விட்டார். ஒரு கட்டத்தில் டாக்டராகி விட்ட அவன், திருமணம் செய்தான், பிள்ளைகளைப் பெற்றான். பணம் அதிகமாகவே கெட்ட சகவாசம் வந்தது. மனைவியும், பிள்ளைகளும் அவனை ஒதுக்கி விட்டனர். மனநிம்மதி போனது. ஒருநாள், தொழிலதிபர் ஒருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரது பிள்ளைகள் தூக்கி வந்தனர். அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வேளையில், ""டேய்! அந்த பையிலுள்ள புத்தகத்தை எடுங்க! படிக்க வேண்டும்,'' என்றார். ஆனால், அவரிடம் கொடுப்பதற்குள் உயிர் பிரிந்துவிட்டது.பிள்ளைகள் புத்தகத்தை அங்கேயே விட்டு விட்டு, தந்தையின் <<உடலுடன் போய் விட்டனர்."அப்படி என்ன அந்த புத்தகத்தில் விசேஷம்' என டாக்டர் இளைஞன் அதை எடுத்து பிரித்தான். அதில் அவனது பெயர் இருந்தது. அது அவனது தந்தை அவனுக்கு கொடுத்த புத்தகம். "" இந்த புத்தகத்தில் அடிக்கோடிட்டு வைத்த வரிகளைப் பின்பற்றினேன். ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தேன். அதனால் முன்னேறினேன்,'' என்று முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.அன்று தான் அவன் அப்பா தனக்கு அந்த புத்தகத்தை கொடுத்ததற்கான காரணத்தை நினைத்து முதன் முதலாக அழுதான். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு நல்லதைச் சொல்கிறார்கள். அவற்றை இளமையிலேயே கடைபிடிக்க வேண்டும். காலம் கடந்த பின் சிந்திப்பதால் யாருக்கென்ன லாபம்!
No comments:
Post a Comment